பக்கம் எண் :

304பாரதம்உத்தியோக பருவம்

     (இ -ள்.) மித்திரர் ஆன மன்னர் - (தனது) நண்பர்களான
அரசர்கள்,தத்தம் - தங்கள் தங்களுடைய, விறல்உடை துணைவரோடும் -
வலிமையையுடைய, உடன்பிறந்தவர்களுடனும், புத்திரரோடும் -
பிள்ளைகளுடனும், போர் புரி சேனையோடும் - போர்செய்ய வல்ல
சேனைகளுடனும், சத்திரம் நிழல் விடாத தன்மையர் ஆகி - குடைநிழலை
விட்டுநீங்காத தன்மையுடையவர்களாய், சூழ - (தங்களைச்) சூழ்ந்துவர,
மத்திரபதியும் - மத்திரதேசத்தரசனான சல்லியனும், வென்றி மருகருக்கு
ஆக -வெற்றியையுடைய வல்ல (தனது) மருமக்களான பாண்டவர்களுக்கு
உதவியாகும்பொருட்டு, வந்தான் - (தனது ஊரிலிருந்து உபப்பிலாவியத்துக்கு)
வருகிறவனானான்; (எ - று.)

    மித்திரரான மன்னரோடும் துணைவரோடும் புத்திரரோடும் அவரவர்
சேனையோடும் அவரவர் சத்திரநிழல் விடாத தன்மையராய்த் தன்னைச் சூழ
மத்திரபதியும் வென்றி மருகருக்காக வந்தானெனப் பதவுரை கூறினும்
பொருந்தும்.  சல்லியன் பாண்டு மகாரசனது இரண்டாவது மனைவியாகிய
மாத்திரிக்கு உடன்பிறந்தவனாதலால், நகுலசகதேவர்க்கு மாமனாவன்.  மருகர்
- சகோதரி மக்கள்.  மருகருக்கு வென்றியாக வந்தான் என அநுவயித்து -
தன் மருமக்களுக்கு வெற்றியுண்டாகக் கருதி வந்தான் எனினுமமையும். 
இவன்- நகுலசகதேவரிடத்திற்போலவே தருமபுத்திரன் முதலிய மூன்று
பாண்டவரிடத்தும் மிகுந்த அன்புடையவனாதலால், 'மருகர்' எனப்
பொதுப்படக்கூறினார்.  துணைவர் - சகாயமாகவுள்ள வருமாம்; புத்திர
ரென்பதற்கு - (தமது தாய்தந்தையரைப்) புத் என்னும் நரகத்தினின்றும்
(நீக்கிக்)காப்பவரென்று பொருள்; புத் பிள்ளையில்லாதவர் அடைவதோர்
நரகம்.                                               (339)

16.

இடைப்படுநெறியில்வைகுமிவனதுவரவுகேட்டுத்
தொடைப்படுதும்பைமாலைச்சுயோதனன்சூழ்ச்சியாக
மடைப்படுவிதியிற்செய்தவிருந்தினான்மருண்டவற்கே
படைப்படுசேனையோடும்படைத்துணையாயினானே.

     (இ -ள்.) இடை படு - நெறியில் - (மத்திரதேசத்துக்கும்
உபப்பிலாவியத்துக்கும்) நடுவிலுள்ளவழியில், வைகும் - வந்து தங்கியிருக்கிற,
இவனது - இச்சல்லியனுடைய, வரவு - வருதலை, கேட்டு - கேள்விப்பட்டு,
தொடைபடு தும்பை மாலை சுயோதனன் - தொடுத்தல் பொருந்தின
தும்பைப்பூமாலையைச் சூடிய துரியோதனன், சூழ்ச்சி ஆக - வஞ்சனையாக,
மடைபடு விதியின் செய்த - சமைத்தற்றொழிலுக்குப் பொருந்தின
முறைமைப்படி செய்வித்த, விருந்தினால் - விருந்துணவினால், மருண்டு -
பிரமித்து, படைபடு சேனையோடும் அவற்கே படை துணை ஆயினான் -
ஆயுதங்களோடு பொருந்தின (தன்) சேனைகளுடனே (சல்லியன்)
அத்துரியோதனனுக்கே போர்த்துணை வனானான்; (எ - று.)

    சல்லியனென்ற இவன் பாண்டவர்க்குப் போர்த்துணைசெய்யும்
பொருட்டுத் தன் நாட்டிலிருந்து வரும்வழியில், துரியோதனன் தருமபுத்திரன்
செய்ததென்று தோன்றும்படி ஆங்காங்குத் தண்ணீர்ப்பந்தல் முதலியன
வைத்துஎல்லாப்பொருளுங் குறைவற அமைத்து