பக்கம் எண் :

படையெழுச்சிச் சருக்கம் 305

வஞ்சனையாக விருந்து செய்விக்க, சல்லியன்அதை ஆராயாது உண்டு,
அங்ஙனந்தன்னை உபசரித்தவர்க்குத் துணைசெய்யத் தான்
கடமைப்பட்டிருப்பதாக வாக்களித்த பின்னர், அது துரியோதனன்
செய்ததென்று தெரிந்து கலுழ்ந்தும், வாக்குத்தத்தஞ் செய்துவிட்டதுபற்றி,
துரியோதனன் வேண்டுகோளின்படி அவனுக்கே துணையாயினான்:
இவ்வரலாற்றைக் கீழ் வெளிப்பாட்டுச்சருக்கத்தில் கூறியிருத்தலுங் காண்க.
கீழ்க் கூறிநின்ற வரலாற்றையே, இங்கு இரு திறத்தும் படைத்துணையாயினவர்
இவரிவரெனப் பகுத்துக் காட்டும் பொருட்டு மீண்டும் கூறினமையின்.
இதுகூறியதுகூறலாகாது, அநுவாதமுமாம்; ஒருகாற் கூறியதை மீண்டுங்
காரணமின்றி எடுத்துக் கூறுதலே கூறியதுகூறலென்னுங் குற்றமென்றும்,
அங்ஙனம் ஒருகாற் கூறியதையே மீண்டும் ஒரு காரணம்பற்றி
எடுத்துக்கூறுதல்அநுவாதமென்னுங்குணமாமென்றும் வேறுபாடு அறிக.
இப்பாடலின்முதலடியால், இடைநெறியில் வைகுகையில் சல்லியனது
வருகையைத்துரியோதனன் கேள்விப்பட்டானென்க.

     தும்பைமாலை, போருக்கு உரியது. தும்பைமாலைச் சுயோதனன்
என்றது,அவன் யுத்தத்திற்குச்சித்தனாயிருந்ததை விளக்கும். 
ஸு யோதனன்  என்னும் பெயர்க்கு நல்ல [வெற்றியைத்தருகிற]
போரையுடையவனென்று பொருள்; ஸு - நன்மை, யோதநம் - யுத்தம். 
சூழ்ச்சி- தந்திரம்.  விருந்து - புதுமை; இங்கு இருமடியாகுபெயராய்,
புதியராய்வந்தவர்க்குச்செய்யும் உபசாரத்தைக் குறித்தது.  செய்தலென்னும்
வினைக்கு,சுயோதனன் - ஏவுதற்கருத்தா.  மடைப்படு விதி - பாகசாஸ்திர விதி.                                                (340)

17.

சல்லியன்றானுமாயச்சகுனியுந்தறுகண்வெம்போர்
வல்லியமனையவென்றிமாகதபதியுங்கொற்ற
வில்லியல்கடகத்திண்டோள்விந்தரன்விந்தனென்று
சொல்லியநிருபர்தானையாறொடுங்கடலிற்சூழ்ந்தார்.

     (இ - ள்.) சல்லியனும் -(கீழ்க்கூறிய) சல்லியனும், மாயம் -
வஞ்சனையையுடைய, சகுனியும்-, தறுகண் வெம் போர் - அஞ்சாமையோடு
செய்யத்தக்க கொடியயுத்தத்தில், வல்லியம் அனைய - புலியையொத்த
[பராக்கிரமத்தையுடைய], வென்றி மாகதபதியும் - வெற்றியையுடைய
மகததேசத்தார்க்குத் தலைவனான அரசனும், கொற்றம் - வெற்றியைத்தரத்தக்க,
வில் - விற்றொழில் வன்மை, இயல் - பொருந்தின, கடகம் திண் தோள் -
கடகமென்னும் அணியையணிந்த வலிய தோள்களையுடைய, விந்தரன் விந்தன்
என்று சொல்லிய நிருபர் - விந்தரனென்றும் விந்தனென்றும் பேர்
சொல்லப்பட்ட அரசர்களும், தானை ஆறொடும் - அறுவகைச்சேனையுடனே,
கடலின் சூழ்ந்தார் - சமுத்திரம்போலத் (துரியோதனனை வந்து) சூழ்ந்தார்கள்;

     அளவிறந்த பரப்புக்கும்,ஆரவாரத்துக்கும், அணியணியாக வருதற்கும்
சேனைக்குக் கடல் உவமை.  அறுவகைச்சேனை - மூலப்