பக்கம் எண் :

306பாரதம்உத்தியோக பருவம்

படை,கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை
என்றார் பரிமேலழகர், தேர், யானை, குதிரை, வில்வீரர், வாள்வீரர்,
வேல்வீரர்எனினுமமையும்:  "வேற்றானை வாட்டானை விற்றானை மேலோர்,
தேர்த்தானை பரித்தானை களிற்றுத் தானையென, ஆற்றல் சான்ற
வறுவகைத்தானை" என்பது திவாகரம் இனி, தானை யாறொடு என்பதற்கு -
சேனைகளாகிய நதிகளோடு என்று உரைத்தல் சிறவாமை காண்க.  சல்லியன்-
(பகைவர்க்கு) அம்புநுனிபோல் (வருத்தஞ்செய்) பவன்; சல்யம் - அம்புமுனை.
தான் - அசை.  சகுனி - காந்தாரதேசத்தரசன்; திருதராட்டிரனது
மனைவியானகாந்தாரியின் உடன்பிறந்தவன்.  ஆதலால்,
துரியோதனாதியர்க்கு மாமன்.இவன் வஞ்சகச்சூதில் வல்லவனாதலால் 'மாயச்
சகுனி' என்றார்.  கடகம் - ஓர்வகைக் கைவளை.  விந்தன் அனுவிந்தன்
என இருவர் அவந்திதேசத்தரசர்கள்என்பது வியாசபாரதம்.          (341)

18.

கலிங்கர்கோன்சோமதத்தன்கௌசிகன்காம்பிலீசன்
தெலுங்கர்கோன்போசனாதிகேகயன்றிகத்தபூபன்
வலங்கொள்வேற்கவுடராசன்மாளவன்வளவன்சேரன்
துலங்குநீரோகனீகனெனும்பலவேந்தர்தொக்கார்.

     (இ -ள்.) கலிங்கர்கோன் சோமதத்தன் - கலிங்கநாட்டார்க்கு
அரசனானசோமதத்தனென்பவனும், கௌசிகன் காம்பிலி ஈசன் -
காம்பிலிதேசத்தரசனானகௌசிகனென்பவனும், தெலுங்கர்கோன் -
தெலுங்கதேசத்தார்க்கரசனும்,போசன் - போசதேசத்தரசனும், ஆதி கேகயன்-
முதன்மையானகேகயதேசத்தரசனும், திகத்த பூபன் - திரிகர்த்ததேசத்தரசனும்,
வலம்கொள்வேல் - வெற்றியைக் கொள்ளும் வேலாயுதத்தை யேந்திய,
கவுடராசன் -கௌடதேசத்தரசனும், மாளவன் - மாளவதேசத்தரசனும்,
வளவன் - சோழனும்,சேரன் - சேரனும், துலங்குநீர் ஓகனீகன் -
விளங்குகின்ற குணங்களையுடையஓகநீகனும், எனும் - என்கிற, பல வேந்தர்
- பல அரசர்கள், தொக்கார் -வந்துகூடினார்கள்; (எ - று.)

    கீழ்நான்கு ஆறாங்கவிகளிற் கூறிய தேயங்களுள் சிலவற்றையே
மீண்டும்இங்குக் கூறியதனால், அந்தந்ததேசத்து அரசகுலத்தாருள் சிற்சிலர்
பாண்டவர்பக்கத்தும் சிற்சிலர் துரியோதனாதியர்பக்கத்தும் வந்து
கூடினரென்க. கௌசிகன் - குசிக குலத்தான்; தத்திதாந்த நாமம்.
நீர்வளநிலவளங்களிற்சிறந்த நாட்டையுடைமையின், சோழனுக்கு
வளவனென்று பெயர்; வளவன் -எல்லாவளங்களையு முடையான்.  'இலங்குநீ
ரோதைவேலையெனும் பலவேந்தர்' என்றும் பாடம்.    (342)

19.

பங்களங்குகுரஞ்சீனம்பப்பரங்கொப்பம்வங்கஞ்
சிங்களந்துளுவமங்கமாரியந்திகத்தஞ்சேதி
கொங்கணங்கடாரங்கொங்கங்கூபகமிரட்டமொட்டம்
எங்கணுமுள்ளவேந்தரியாவருமீண்டிமொய்த்தார்.