பக்கம் எண் :

படையெழுச்சிச் சருக்கம் 307

     (இ -ள்.) பங்களம் குகுரம் சீனம் பப்பரம் கொப்பம் வங்கம் சிங்களம்
துளுவம் அங்கம் ஆரியம் திகத்தம் சேதி கொங்கணம் கடாரம் கொங்கம்
கூபகம் இரட்டம் ஒட்டம் -, (என்கிற இத்தேசங்கள் முதலாக), எங்கணும் -
எல்லாவிடங்களிலும், உள்ள-, வேந்தர் யாவரும் - அரசர்களெல்லோரும்,
ஈண்டி மொய்த்தார்-கூடி நெருங்கினார்கள்; (எ-று.)

    பங்களம் - பங்காள மென வழங்கும்.  வேந்தரியாவர் - தன்னொழி
மெய்ம்முன் யகரம் வர இகரந்தோன்றிற்று.                        (343)

20.

அண்ணலந்துரகத்தாமாவாதியாங்குமரராலும்
எண்ணிருபத்துநூறாம்யாதவகுமரராலும்
வண்வேற்பூரிகௌரிமாமுதற்குமரராலும்
எண்ணருஞ்சேனைவெள்ளமெங்கணும்பரந்தமாதோ.

     (இ -ள்.) அண்ணல் - பெருமையையுடைய, அம் - அழகிய,
துரகத்தாமா ஆதி ஆம் - அசுவத்தாமன் முதலான, குமரராலும் -
இளவீரர்களாலும், எண் இருபத்து நூறு ஆம் - பதினாறாயிர மென்னுந்
தொகையுள்ளவரான, யாதவ குமரராலும் - யதுகுலத்து இளவீரர்களாலும்,
வண்ணம் வேல் - அழகிய வேலாயுதத்தையுடைய, பூரி - பூரிச்ரவசு
என்பவனும், கௌரிமா - கௌரிமா வென்பவனும், முதல் - முதலாக,
குமரராலும் . இளவீரர்களாலும், (ஆகிய) எண் அரு சேனை வெள்ளம் -
கணக்கிடமுடியாத [அளவிறந்த] சேனைகளின் கூட்டம், எங்கணும் பரந்த -
எல்லாவிடங்களிலும் பரவின; (எ-று.)-மாது, ஓ - ஈற்றசை.

    எண்ணிரு பத்து நூறு - பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்;
எண்ணிரண்டு - பதினாறு: பத்துநூறு - ஆயிரம் எண்ணிரண்டாகிய பத்து
நூறென்க.  யாதவர் - யதுவின் குலத்தவர்; தத்திதாந்தநாமம்; யது -
சந்திரவமிசத்து ஓரரசன்.  எண்ணிருபத்து நூறாம் யாதவகுமார ரென்றது,
கண்ணனுக்குப்பதினாறாயிரம் கோபஸ்திரீகளிடம் பிறந்தவர்களான
நாராயணகோபாலர் முதலியோரை; கீழ்த் துரியோதனன் கண்ணனைப்
படைத்துணையழைக்கப் போனபொழுது அவனால் துரியோதனனுக்குத்
துணையாகக் கொடுக்கப் பட்டனர் இவரென அறிக.  எண் அரு - (மனத்தால்)
நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாத எனினுமாம்.  வெள்ளம் -
ஓர்பெருந்தொகை; இனி, சேனை வெள்ளம் - சேனைகளாகிய
பிரவாகங்களென்றுமாம்.                                  (344)

21. 

தம்பியரனைவரும்துச்சாதனன்முதலாவுள்ளோர்
வெம்பரிதடந்தேர்வேழம்வேல்சிலைவடிவாள்வல்லோர்
அம்பரத்தளவுமுந்நீரம்பரமெழுந்ததென்ன
வும்பருமிம்பராருமுரகரும்வெருவவந்தார்.

     (இ -ள்.) வெம் பரி - வேகமான குதிரைகளைச் செலுத்துந்
தொழிலிலும்,தட தேர் - பெரிய தேர்களை நடத்துந் தொழிலிலும்,