பக்கம் எண் :

308பாரதம்உத்தியோக பருவம்

வேழம் - யானைகளை யோட்டுந் தொழிலிலும்,வேல் - வேற்றொழிலிலும்,
சிலை - விற்றொழிலிலும், வடி வாள் - கூர்மையான வாளின் தொழிலிலும்,
வல்லோர் - வல்லவர்களாகிய, துச்சாதனன் முதல் ஆ உள்ளோர் -
துச்சாதனன் முதலாக உள்ளவரான, தம்பியர் அனைவரும் -
(துரியோதனனது)தம்பிமார்களெல்லோரும்,- முந் நீர் அம்பரம் - மூன்று
நீர்மையையுடையகடல், அம்பரத்து அளவும் எழுந்தது என்ன -
ஆகாயத்தளவும்பொங்கியெழுந்தாற்போல,- உம்பரும் இம்பராரும் உரகரும்
வெருவ -மேலுலகத்துள்ள தேவரும் இவ்வுலகத்திலுள்ள மனிதரும்
கீழுலகத்துள்ளநாகரும் (ஆக மூவுலகத்தாரும்) அஞ்சும்படி, வந்தார்-;
(எ - று.)

     தம்பியர்,தொண்ணூற்றொன்பதின்மர்.  துச்சாதனன் என்ற சொல்லுக்கு-
கொடிய கட்டளையுடையானென்று பொருள்; சாஸநம் - ஆஜ்ஞை.  வெம்பரி
தடந்தேர் வேழம் வேல் சிலை வடிவாள் வில்லோர் என்ற இது, அவரது
அறுவகைச் சேனையாரையு மாகலாம்.  வேல் - வெல்லுதற்குரிய கருவி
யென்பதுபற்றிய காரணக்குறிபோலும்.  வடிவாள் - வடிக்கப்பட்ட வாள்;
வடித்தல் - உலைநெருப்பில் வைத்துக் காய்ச்சி யடித்துக் கூராக்குதல். 
முந்நீர்- மூன்றாகிய தன்மையை யுடையதெனப் பண்புத்தொகையன்மொழிக்
காரணப்பெயர்.  மூன்று தன்மைகள் - பூமியைப் படைத்தல் காத்தல்
அழித்தல்என்பன; நீரினின்று நிலம் பிறந்ததென வேத மோதுதலால்
படைத்தலும்,நீரின்றி உலகம் பிழையாதாதலால் காத்தலும், இறுதியில்
நீரினால் மூடப்பட்டுஉலகம் அழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களும்
கடலுக்குஉரியனவாயின.  இனி, ஆற்று நீர் ஊற்றுநீர் வேற்றுநீர் [மழைநீர்]
என்னும்மூவகை நீரையுடைய தென்பாரு முளர்; ஆற்றுநீர் மழைநீராதலாலும்,
அவ்விரண்டுமில்லாதவிடத்து ஊற்றுநீரும் இல்லையாமாதலாலும், அது
பொருந்தாது.  ஆதியில் கடவுள் நீரையே  படைத்தாரென்றும் புராணம்
கூறுதலால் முந்நீர் முதிய நீரென்றும் பொருள்கொண்டு, முதுமையென்னும்
பண்புப்பெயர் விகாரப்பட்டதென்பாரு முளர்.  இனி, முன்னீர் என்று
நகரத்தைமாற்றிப் பாடங் கொள்ளின் பழமையான நீரென்று பொருள்படும்.
அம்பரம் என்பது கடல் ஆகாசம் என்னும் இவ்விருபொருளு முடையதாதலை
"அம்பரங் கடலுமாடையுமாகாயமும்" என்ற பிங்கலந்தையாலும் "அம்பரங்
கடல் விண்தூசாம்" என்ற நிகண்டினாலுங் காண்க.  உம்ப ரென்னும்
மேலிடத்தின் பெயர், அதிலுள்ள தேவர்க்கு இடவாகுபெயர்.  உம்பர் இம்பர்
என்பவற்றில் உகர இகரக் சுட்டுக்கள் முறையே மேலுள்ள பொருளையுஞ்
சமீபத்திலுள்ள பொருளையுங் குறித்தன.  உரகராவார் - படமும்
வாலுமுடையராய் மனிதவடிவமுந் தெய்வப் பிறப்புமானதொரு சர்ப்ப சாதியார்.
                                                       (345)

22.-துரியோதனன் சேனையின்சிறப்பு.

வீடுமன்கிருபன்கன்னன்விற்கையாசிரியன்வையம்
பாடுசீர்விகத்தசேனன்பகதத்தன்முதலாவுள்ளோர்