பக்கம் எண் :

படையெழுச்சிச் சருக்கம் 309

ஆடல்வெம்பரிதேர்யானையனீகினித்தலைவர்செம்பொற்
கோடுயர்குன்றஞ்சூழ்ந்தகுலகிரியேழுமொத்தார்.

     (இ - ள்.) வீடுமன் - பீஷ்மனும்,கிருபன் - கிருபாசாரியனும், கன்னன்-
கர்ணனும், வில் கை ஆசிரியன் - விற்றொழிலில் வல்ல கையையுடைய
துரோணாசாரியனும், வையம் பாடு சீர் - நிலவுலகத்தவராற் (கொண்டாடிப்)
பாடப்படுகிற சிறப்பையுடைய, விகத்தசேனன் - விகத்தசேனனும், பகதத்தன்-
பகதத்தனும், முதல் ஆ - முதலாக, உள்ளோர் - உள்ளவர்களான, ஆடல்
வெம் பரி தேர் யானை அனீகினிதலைவர் - ஆட்டத்தையுடைய வேகமான
குதிரைகளையும் தேர்களையும் யானைகளையுமுடைய சேனைகட்குத்
தலைவரானவர்கள், செம்பொன் கோடு உயர் குன்றம் சூழ்ந்த குல கிரி ஏழும்
ஒத்தார் - சிவந்த பொன்மயமான சிகரங்களுயர்ந்த மேரு மலையைச்
சுற்றிலுமுள்ள ஏழுகுலபர்வதங்களையும் போன்றார்கள்; (எ - று.)

    வீடுமன் முதலிய சேனைத்தலைவர்கள் துரியோதனனைச் சூழ்ந்தது,
மலைகளுட் சிறந்த மகாமேருவைக் குலபருவதங்கள் சூழ்தலைப் போன்ற
தென்க.  புகழ் தான், உரையும் பாட்டும் என இருவகைப்படும்; அவற்றுள்
பாடப்படும் புகழைக் கூறுவார், 'வையம் பாடுசீர்' என்றார்.  "புலவர் பாடும்
புகழ்" என்றார் புறநானூற்றிலும்.  பகதத்தன் - பிராக்சோதிஷபுரத் தரசனும்
திருமாலுக்குப் பூமிதேவியினிடம் பிறந்தவனும் கண்ணனாற்
கொல்லப்பட்டவனுமாகிய நரகாசுரனது மகன்.  ஆடல் - வெற்றியுமாம்.
குலகிரி ஏழு - கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி
என்பன.  குலகிரி யென்பதில், குலம் என்பதற்குச் சிறந்த தென்று பொருள்.
நாணற்காட்டிற் பிறந்திருந்த முனிமக்களை வேட்டைக்கு வந்த சந்தனு
மகாராசன் பார்த்துக் கிருபையினால் எடுத்துச்சென்று வளர்த்ததனாற்
கிருபனென்றும், கிருபி யென்றும் பெயருண்டாயின வென்பது
விஷ்ணுபுராணம்.                                      (346)

23.-இதுவும் அது.

நதியெனைப்பலவும்வந்துசிந்துவினண்ணுமாபோல்
எதிரறப்பொருதுவெல்லுமிராசமண்டலங்களெல்லாஞ்
சதமகற்குவமைசாலுந்தரணிபன்றன்னைச்சூழ்ந்து
பதினொரக்குரோணிசேனைபார்மிசைப்பரந்தவன்றே.

     (இ -ள்.) எதிர் அற - பகை யொழிய, பொருது - போர்செய்து,
வெல்லும் - சயிக்குந்தன்மையுள்ள, இராச மண்டலங்கள் எல்லாம் - அரசர்
கூட்டங்கள் யாவும், நதி எனை பலவும் வந்து சிந்துவில் நண்ணும் ஆ போல்
- மிகப்பலவான ஆறுகளெல்லாம் வந்து கடலிற் சேரும் விதம்போல,
சதமகற்குஉவமை சாலும் தரணிபன்தன்னை சூழ்ந்து - இந்திரனுக்கு
உபமானமாகச்சிறந்த துரியோதன மகாராசனை வந்து சூழ்ந்ததனால்,
பதினொரு அக்குரோணிசேனை பார்மிசை பரந்த - பதினொரு
அகௌஹிணி சைநியம் பூமியின்மேற்பரவின;