யல்' என்றபாடத்துக்கு அகரச்சுட்டு பிரசித்தியைக் காட்டிற்றென்க; சூட்டிய அந்நாளில் என இயைத்தலுமாம். நாம் - அச்சமுணர்த்தும் உரிச்சொல்; இதன்மேல், அ - சாரியை. அம் - சாரியை; மவ்வீ றொற்றழிந்ததெனினும் அமையும்; இனி, நாம் என்பதை உரிச்சொல்லடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சமெனக் கொள்ளலுமாம். நாமம் எனப்பிரித்து பிரசித்தமான என்றாவது, புகழைத்தருகிற என்றாவது கொள்ளினுமாம். அடா - இகழ்ச்சி பற்றிவரும் முன்னிலை யொருமை யாண்பால் இடைச்சொல். இதன் பெண்பால் - அடி. தாமம் - குடையிற் சுற்றிலுந் தொங்கவிடப்படும் முத்து மாலைகளுமாம். நீதி தவறாது புகழோடு கூடிய அரசாட்சியை வெண்குடை யென்றல் கவிமரபு. காவலின்பெயர் - இலக்கணையாய், இங்கே கட்டையுணர்த்திற்று. இனி, அடா நரன் - உனக்கு ஏற்றவனல்லாத அருச்சுனனென்றுமாம். அடர் நரன், மீட்ட கானிலும் என்றும் பாடம். (18) 19. | ஒருதன்மாநெடுந்தேரினை யறிவுறாவுத்தரன் விரைந்தூர நெருநலானிரைகவர்தருமுகத்தினுநின்றனைநெடும்போது மருநறாவுமிழ்துழாயவன்றேர்விடமலையுநாள்வயவாளி வெருநர்மேல்விடாவிசயனைநீயலால்வெல்லவல்லவருண்டோ. |
(இ -ள்.) ஒரு - ஒன்றான, தன் - தனது, மா - பெரிய, நெடு - உயர்ந்த, தேரினை - இரதத்தை, அறிவுறா உத்தரன் - (செலுத்துதற்கு) அறியாத உத்தரகுமாரன், விரைந்து ஊர - துரிதமாகச் செலுத்த, நெருநல் - நேற்று, ஆன் நிரை - பசுக் கூட்டங்களை, கவர் தரு - (அருச்சுனன்) மீட்டுக்கொண்டு போன, முகத்தினும் - போர் முகத்திலும், நெடுபோது நின்றனை - வெகுநேரம் (அருச்சுனன் முன் நீ எதிர்த்து) நிலைநின்றாய்; மரு - வாசனையையும், நறா - தேனையும், உமிழ் - வெளிப்படுத்துகிற, துழாயவன் - திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரான், தேர் விட - (தனது) தேரைச் செலுத்த, மலையும் நாள் - (அருச்சுனன் இனிப்) பெரும்போர் செய்யும்பொழுது, வெருநர் மேல் வயவாளி விடா விசயனை - (போரில்) அஞ்சுகிறவர்கள் மீது வலிமையையுடைய அம்பைச் செலுத்தாத தன்மையையுடைய அருச்சுனனை, வெல்ல வல்லவர் - சயிக்க வல்லவர், நீ அலால் உண்டோ - நீ யல்லாமல் (வேறு யாவராயினும்) உளரோ? [எவரும் இல்லைபோலும் எனப் பரிகாசமாகக் கூறியபடி];(எ-று.) நன்மா நெடுந்தேரினை என்றும் பாடம். நெடும்போதுநின்றனை என்றது, சிறிது பொழுதாயினும் உறுதியோடு முன்நிற்கவும் மாட்டாமல் ஓடினாய் - என்றதைக் குறிப்பால் உணர்த்தும். விராடநகரத்திற் பாண்டவர் ஒளித்திருத்தல் கூடுமென்று துரியோதனாதியர் அந்நகரத்தின்மேல் படையெடுத்து வடபுறத்திற் சென்று பசுக்களைக் கவர்ந்து கொண்டனர். அதனையறிந்து நிரைமீட்டற்குப் போருக்குவந்த உத்தரகுமாரனுக்குச் சாரதியாய் நின்ற பேடிவடிவமான அருச்சுனன் உத்தரனைத் தேர்செலுத்தச்சொல்லித் தான் போர் செய்து அத்தனை பேரையும் வென்று துரத்திப் பசுக்களைத் திருப்பியோட்டிக்கொண்டு சென்றனன் என் |