பக்கம் எண் :

314பாரதம்உத்தியோக பருவம்

சகுனி முதலிய இனத்தவரை உளப்படுத்தியென்க; இதற்கு நீயாவது உன்
இனத்தவராவது சென்று கேட்க வென்று கருத்து; இது - ஒருமைப் பன்மை
மயக்கத்தின்பாற்படும்.                               (350)

3.

ஒன்றநம்படைகளெல்லாமொருபகற்பொழுதிற்கொல்வான்
நின்றனனிராவானென்பானீயவன்றன்னைவேண்டிற்
கொன்றெனைப்பலிகொடென்றுகூறுமக்குமரற்கொன்றால்
வென்றுனக்கரசும்வாழ்வுமெய்தலாம்விரைவினென்றான்.

     (இ - ள்.) '(எதிர்ப்பக்கத்தில்),இராவான் என்பான் - இராவா
னென்பவன், நம் படைகள் எல்லாம் ஒன்ற ஒரு பகல் பொழுதில்
கொல்வான் -நமது சேனைக ளெல்லாவற்றையும் ஒருசேர ஒருதினத்துப்
பகற்பொழுதினுள்ளேகொல்ல, நின்றனன் - (உறுதிகூறி) நின்றுள்ளான்;
அவன் தன்னை நீவேண்டின் - அந்தச்சுத்த வீரனை நீ (போய்ப்)
பிரார்த்தித்தால், 'எனைகொன்று பலிகொடு' என்று கூறும் - (அவன்
சம்மதித்து) என்னைக் கொன்றுபலிகொடுப்பாய் என்று (உன்னை நோக்கிச்)
சொல்வான்; அக்குமரன்கொன்றால் - அந்த இளவீரனைக் கொன்று
பலிகொடுத்துவிட்டால், விரைவின்வென்று அரசும் வாழ்வும் எய்தல் உனக்கு
ஆம் - துரிதத்தில் (பாண்டவரைச்)சயித்து அரசாட்சி யையும்
நல்வாழ்க்கையையும் அடைதல் உனக்குக்கைகூடும்,' என்றான் - என்றும்
[துரியோதனனை நோக்கிக்] கூறினான்(வீடுமன்); (எ - று.)

    "அரவமின்மகன் தெவ்வர், கொற்ற வெம்படை யனைத்துமோரம்பினாற்
கொல்வனோர் தினத் தென்றான்" எனக் கீழ்ச்சருக்கத்து வந்தமையுங் காண்க.
என்பானெனச் செயப்படுபொருள் வினைமுதல்போலக் கூறப்பட்டது:
"இல்வாழ்வா னென்பான்" என்ற திருக்குறளிற் போல:  இது செய்வினை
செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த வழுவமைதி யென்றும், இதில்
அகரச்சாரியையும் படுவிகுதியுந் தொக்குநின்றனவென்றுங் கூறுவர். 
"ஊரெனப்படுவது உறையூர்" என்ற விடத்துப்போல, இங்கே என்பா
னென்பது - என்றுசிறப்பித்துக் கூறப்படுவானென உயர்வு தோன்ற நிற்கு
மென்க. 'குமரற்கொன்றால்' என்பதை, கீழ்க்கவியில் 'அவற்கேண்மின்'
என்றதுபோலக்கொள்க.                             (351)

4.-சகதேவன் களப்பலிக்கு முகூர்த்தம்நிச்சயித்தல்.

என்றலுமவனுமாங்கோரியந்திரவெகினமூர்ந்து
சென்றனனவனுங்கேட்டுச்சிலையில்வெங்கதிரைத்திங்கள்
ஒன்றியபகலிராவிற்களப்பலியூட்டினல்லால்
வென்றிடலரிதென்றிட்டான்கிளைஞரைவேறிடாதான்.

     (இ -ள்.) என்றலும் - என்று (வீடுமன்) சொன்னவுடனே, அவனும் -
அத்துரியோதனனும், ஓர் இயந்திரம் எகினம் ஊர்ந்து -