ஒரு ஹம்ஸயந்திரத்தின்மேல் ஏறி, ஆங்குசென்றனன் - அச்சக தேவனிடம் போனான்; கிளைஞரை வேறு இடாதான் - (தனது) சுற்றத்தாரைப் பேதமாகக் கொள்ளாதவனாகிய, அவனும் - அச்சகதேவனும், கேட்டு - (துரியோதனன் வந்த காரியத்தை) விசாரித்து, (உடனே), 'சிலையில் - தநுர் [மார்கழி] மாசத்தில், வெம் கதிரை திங்கள் ஒன்றிய பகல் - சூரியனைச் சந்திரன் கூடிய நாளில் [அமாவாசையில்], இராவில் - இராத்திரியில், களம் பலி ஊட்டின் அல்லால் - போர்க்களத்துக்குரிய பலியைக் கொடுத்தாலல்லாமல், வென்றிடல் அரிது - (பகையைச்) சயித்திடுதல் அரியதாம்,' என்றிட்டான் - என்று உண்மைகூறினான்; (எ - று.) தனதுதாயாதிகளான துரியோதனாதியரை அபேதமாக நினைக்குந் தூய நெஞ்சுடையவ னாதலால் இங்ஙனம் உள்ளபடி கூறினானென்பார், 'என்றிட்டான்கிளைஞரை வேறிடாதான்' என்றார். இயந்திரவெகினம் - அன்னப்பறவையின்வடிவமைத்துச் செய்யப்பட்ட யந்திர வாகனம். சிலை - வில்வடிவமானதோர்இராசி; அதிற் சூரியன் பிரவேசிக்கும் மாதம் அதனாற் பெயர்பெறும். வெங்கதிர் - உஷ்ணமான கிரணங்களை யுடையது; பண்புத்தொகையன்மொழியென்றாவது அடையடுத்த சினையாகுபெய ரென்றாவது இதற்கு இலக்கணங்கூறுக. சந்திரன் தனது பதினாறுகலைகளுள் இரண்டு கலைமாத்திரம்மிகுந்தவனாய்ச் சூரியகிரணங்களில் மறைகிற தினமே அமாவாசையாதலால்,'வெங்கதிரைத் திங்க ளொன்றிய பகல்' என்றார். பலி யூட்டுதல் - ஒருவனைக்கொய்து பலியாகத் தேவதைக்கு நைவேத்தியஞ் செய்தல்; பலி - தேவர்க்குஇடும் உணவு. கீழே "இன்றே யுற்றவற் கேண்மின்" என்று வீடுமன்கூறியதற்கு ஏற்ப, விரைந்து செல்லவேண்டி, இயந்திரவெகினமூர்ந்துசென்றனனென்க. 'இந்திர விமானமூர்ந்து' என்றும் பாடம்; துரியோதனன்அன்றிரவிலேயே நள்ளிருளில் எவருமறியாமல் உபப்பிலாவியம் புக்குச்சகதேவனைக் கண்டு நன்முகூர்த்தங் கேட்டு மீளவேண்டித் தேவசில்பியானவிசுவகருமாவைத் தியானித்து வரவழைத்துப் பிரார்த்தித்துஆகாசத்திலேயோடவல்லதொரு மாயத்தேரைப் பெற்றுச் சென்றான் என்றுபெருந்தேவனார் பாரதத்து உரைநடை. (352) 5.-இராவான் தன்னைப் பலியிட உடன்படுதல். ஐவரிலிளையோன்றன்பான்முகூர்த்தங்கேட்டவர்சேயான பைவருமுடியோன்றன்பாற்சேறலும்பணிந்துதாதை உய்வருவரங்கேட்டென்னையூட்டுகபலிநீயென்றான் எய்வருசிலையினானும்பெற்றனனென்றுமீண்டான். |
(இ - ள்.) (இவ்வாறு துரியோதனன்),ஐவரில் இளையோன் தன்பால் முகூர்த்தம் கேட்டு - பஞ்சபாண்டவர்களுள் இளையவனான சகதேவனிடம் (களப்பலியூட்டுதற்கேற்ற) நல்முகூர்த்தத்தை விசாரித்தறிந்துகொண்டு, அவர் சேய் ஆன பை வரு முடியோன் தன் |