பக்கம் எண் :

களப்பலியூட்டு சருக்கம் 323

5.-இராவான் தன்னைக்களப்பலியிடும்படி உடன்படுதல்.

அப்பொழுதரவமைந்தனரவுயர்த்தவற்குநேர்ந்தேன்
இப்பொழுதுமக்குநேர்ந்தேனெனைப்பலியிடுமினென்ன
மைப்புயல்வண்ணனின்னையல்லதுமண்ணிலென்னை
யொப்பவரில்லைநம்மிலொருவரேவேண்டுமென்றான்.

    (இ - ள்.) (அப்பொழுது), அரவம் மைந்தன் - நாககன்னிகை
குமாரனானஇராவான், 'அரவு உயர்த்தவற்கு அப்பொழுது நேர்ந்தேன் -
பாம்புக்கொடியை உயர எடுத்துள்ள துரியோதனனுக்கு (அவன் என்னை
வேண்டிக்கொண்ட) அச்சமயத்தில் (பலிக்கு) உடன்பட்டேன்; உமக்கு
இப்பொழுது நேர்ந்தேன் - உங்களுக்கு இப்பொழுது (பலிக்கு)
உடன்படுகிறேன்; (ஆதலால்),  எனை பலி இடுமின் - என்னைப்
பலியிடுங்கள்,'என்ன - என்றுகூற, - (அதுகேட்டு), மை புயல் வண்ணன் -
கரியமேகம்போலுந் திருமேனி நிறமுடைய கண்ணன், 'நின்னை அல்லது
மண்ணில்என்னை ஒப்பவர் இல்லை - உன்னைத்தவிர உலகத்தில் என்னை
யொக்குந்தன்மையார்வேறு எவரும் இல்லை; (ஆதலின்), நம்மில் ஒருவரே
வேண்டும் -(ஒத்த உத்தம விலக்கணமுடைய) நம்மிருவருள் ஒருவரே
பலியாகவேண்டும்,'என்றான் - என்று கூறினான்; (எ - று.)

    அமாவாசையில் தான் பலியாவதாக முன்பு துரியோதனனுக்கு
வாக்களித்தபடிஅமாவாசை வந்தும் பலிகொடுத்தற்குத் துரியோதனன் வரக்
காணாமையால்,இராவான் இப்பொழுது பாண்டவர்க்குப் பலிக்கு
உடன்பட்டான்.  மைப்புயல் -உம்மைத்தொகையாய்,  மைப்புயல் வண்ணன்-
அஞ்சனமும் மேகமும்போலும் வர்ணமுடையவனென்றுங் கொள்ளலாம்.
வேண்டும் - ஒருவகைவியங்கோள்: இது, நச்சினார்க்கினியர் கருத்து; இதற்கு-
வெவ்வேறுபலவகையாகப் பிற ஆசிரியர் இலக்கணங் கூறுவாராயினும்,
வியங்கோளென்றலே தகுதியுடையதெனத் தோன்றுகிறது.(358)

6.- இராவான் கண்ணனிடம்தான் சிலநாள் வரையில்
உயிரோடிருக்கும்படி வரம்வேண்டுதல்.

அடியனேனிருக்கநீயேயரும்பலிக்கிசைவாய்ப்போரின்
மடியநேரலரைக்கொன்றுவாழ்விவர்க்களிக்கநின்றாய்
கடியநேர்பலிதந்தாலுங்காயமர்சிலநாட்கண்டு
முடியநேரலர்வெம்போரின்முடிவெனக்கருளுகென்றான்.

   (இ - ள்.) (அதற்கு இராவான்), 'போரில் - யுத்தத்திலே, மடிய-அழியும்படி,
நேரலரை - பகைவர்களை, கொன்று-, இவர்க்கு - இப் பாண்டவர்க்கு,
வாழ்வுஅளிக்க நின்றாய் - செல்வ வாழ்க்கையைக் கொடுத்தருள நின்றவனே!
அடியனேன் இருக்க-அடியேன (பலிசெலுத்தத்தக்கவனாக) இருக்கையில், நீயே
அரு பலிக்கு இசைவாய் - நீயோ அரிய பலி செலுத்தப்படுதற்கு
உடன்படுவாய்? [நீ பலியா