பக்கம் எண் :

324பாரதம்உத்தியோக பருவம்

தற்குஇசையவேண்டுவது இல்லை]; (ஆனால்), நேர் பலி கடிய தந்தாலும் -
ஏற்ற பலியாக (என்னை) விரைவிற்கொடுத்திட்டாலும், காய் அமர் சில நாள்
கண்டு - உக்கிரமான போரைச் சில தினங்களில் (அடியேன்) பார்த்து, நேரலர்
முடிய - (பல) பகைவர்கள் அழிய, (அதன்பின்), வெம்போரில் முடிவு எனக்கு
அருளுக - கொடியபோரில் இறந்தொழியும் வரத்தை எனக்குத்
தந்தருளுவாயாக,' என்றான் - என்று பிரார்த்தித்தான்; (எ - று.)

   இராவான் பலவடிவங்கொண்டு போர்செய்து வென்று முடிவில்
பகாசுரனதுதம்பியான அலம்புச னென்பவனால் இறந்தானென்பர், மேல்
எட்டாம்போர்சருக்கத்தில், அடியனேன் - உனக்கு அடியவனாகிய யான்;
அடிமையென்னும் பண்பினடியாப் பிறந்த தன்மை யொருமைக் குறிப்பு
வினையாலணையும் பெயர்.  நீயே என்ற ஏகாரம் - வினாவகையால், நீ
பலிக்கு இசையத்தக்கவனல்ல னென்ற எதிர் மறைப் பொருளைக்குறிக்கும்.
'நீயேன்' என்ற பாடமுங் கொள்ளலாம்.  நேரலர் - தம்மொடு இணங்காதவர்.
காயமர் - (பகைவரைக்) காயும் அமரென வினைத்தொகை; காய்தல் -
சீறியொழித்தல்.  இரட்டுற மொழிதலால், கண்டு என்பதற்கு - செய்து என்றும்
பொருள்.                                                 (359)

7.-இராவான்போர்க்களத்திற் சென்று காளியினெதிரில் தானே
தனது உறுப்புக்களை அறுத்துப் பலியிடுதல்.

அவ்வரமவற்குநல்கியத்தினத்தவ்விராவிற்
றெவ்வரையொளித்துத்தங்கள்சென்மதேயத்திற்சென்றார்
மெய்வருகாளிமுன்னர்மெய்யுறுப்பனைத்தும்வீரன்
கொய்வருநிலையிற்கொய்துகொடுத்தனனென்பமன்னோ

    (இ -ள்.) (கண்ணபிரான்), அ வரம்-அந்த வார்த்தை, அவற்கு-
அவ்விராவானுக்கு, நல்கி - கொடுத்தருளியபின்பு,  (பாண்டவர்கள்), அ
தினத்து - அந்த மாறுபட்ட அமாவாசை நாளில், அ இராவில் - அந்த
இராத்திரியிலே, தெவ்வரை ஒளித்து - பகைவர்களான
துரியோதனாதியர்களுக்குத்  தெரியாதபடி, தங்கள் சென்மதேயத்தில் சென்றார்
- தங்களது பிறப்பிடமான குருநாட்டிற் போய்ச் சேர்ந்தார்கள்; (அந்த
நாளிரவிலேயே), வீரன் - சுத்த வீரனான இராவான், மெய் வரு காளி
முன்னர்- (போர்க்களத்துக்கு உரிய தெய்வமான) உண்மை பொருந்தின
காளியினெதிரில், மெய் உறுப்பு அனைத்தும் - (தனது) உடம்பின்
அவயவங்களையெல்லாம், கொய் வரு நிலையின் கொய்து - அறுக்கவேண்டிய
முறைமைப்படி (தானே வாளால்) அறுத்து, கொடுத்தனன் - பலிகொடுத்தான்;
(எ - று.) என்ப - அசை: மன், ஓ - ஈற்றசைகள்.

    கொய்வு அரு நிலையின் எனப் பிரித்து (பிறர்க்கு) அறுத்தற்கு
அருமையான முறையின் என்றுங் கொள்ளலாம்; மிகக் கொடிதாக என்று
கருத்து.  வீரனாதலின் இங்ஙனங் கொய்தனனென்பார்,