'வீரன்கொய்து கொடுத்தனன்' என்றார். நல்கி - நல்கவென்னுஞ் செயவெனெச்சத்தின் திரிபு; செய்தெனெச்சம் வேறு கருத்தாவின் வினையைக்கொண்டு முடிதற்கு ஏலாதாதலால், இங்குப் பாண்டவர் வினையாகியசென்றார் என்பதைக் கொண்டு முடியும். காளி - துர்க்கை: பார்வதியின்அம்சமான பெண்தெய்வம். காளியென்னுஞ் சொல்லுக்குக் கருநிறமுடையவளென்று பொருள்; காளம் - கருமை. தெவ்வரை ஒளித்து - தெவ்வர்க்கு ஒளித்து என உருபுமயக்கமாகக்கொள்க. மெய் வரு - வடிவம் பொருந்தி விளங்குகிற என்றுமாம். இவ்வடைமொழியை வீரனுக்குக் கூட்டி, சத்தியந்தவறாத இராவானெனினும் அமையும். நிலையில்லாமையாற் பொய்யாகிய உடம்பை மெய்யென்பது - மங்கலவழக்கு. என்ப என்னும் அசையைச் சீவகசிந்தாமணியுரையில் "கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங், கிளந்தவற்றியலானுணர்ந்தனர் கொளலே" என்னுந்தொல்காப்பியப் புறனடைச்சூத்திரத்தாற் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். (360) 8.-பாண்டவர் மற்றும்சிலபலிகளிட்டு வரம் வேண்டி வருதல். ஆண்டகைகன்னிமுன்னரவயவமனைத்துமீந்து காண்டகமலர்ந்ததீபமெனமுகங்கவினநின்றான் பாண்டவர்யாமளத்தின்படிபகடாதியாக வேண்டியபலிகளீந்துவென்றியும்வேண்டிமீண்டார். |
(இ -ள்.) ஆண் தகை - ஆண்மைக்குணத்தை யுடைய இராவான், கன்னி முன்னர் - காளியின் முன்னிலையில், அவயவம் அனைத்தும் ஈந்து- உறுப்புக்களையெல்லாம் அறுத்துப் பலிகொடுத்து, காண்தக மலர்ந்த தீபம் எனமுகம் கவின - (யாவரும்) காணத்தகுமாறு (அழகியதாய்) விளங்குகிற விளக்குப்போலத் தன் முகம் ஒளிபெற்று விளங்க, நின்றான் - (சிறிதுந் துயரமின்றி மகிழ்ந்து) நின்றான்; (அதன்பின்), பாண்டவர் - பாண்டு குமாரர் ஐவரும், யாமளத்தின்படி - யாமளநூல் முறைமைப்படி, பகடு ஆதி ஆக - யானை முதலாக, வேண்டிய பலிகள் ஈந்து - இன்றியமையாத பலிகளைக் கொடுத்து, வென்றியும் வேண்டி - (தமது) சயத்தையும் பிரார்த்தித்து, மீண்டார் - திரும்பினார்கள்; (எ - று.) கீழ்க்கவிகளின் பின்னிரண்டடிகளிற் கூறிய கருத்தையே இக்கவியின் முன்னிரண்டடிகளில் மீண்டும் எடுத்து அநுவதித்துக்கூறியது, அப்பொழுது அவன் சிறிதும் வருந்தாது முகமலர்ந்திருந்த சிறப்பை விளக்க வேண்டியாதலின்,கூறியது கூறலாகாது. 'நீபமென' என்ற பாடத்துக்கு - காண்டகம் - காட்டிலே,மலர்ந்த - பூத்த, நீபம் என - கடப்பமரம் போல வென்க; அதன் மலர்கள்மிக்க செந்நிறமாய் எங்கும் விளங்குதல் போல, இவனுடம்பு முழுவதும்இரத்தப்பெருக்காற் சிவந்து நிற்க வென்றவாறு. யாமளையென்று காளிக்குப்பெயராதலால், யாமளமென்பது - அவளுக்குப் பலி கொடுத்தல்முதலியவற்றைக் கூறும் நூலைக் குறிக்கும்: அது |