பக்கம் எண் :

328பாரதம்உத்தியோக பருவம்

என்பன -அருச்சுனனது மறு பெயர்களாம்; "பார்த்த னருச்சுனன் கரியோன்
விசயன் பாகசாதனி சவ்வியசாசி பற்குனன் பா, ரேத்து தனஞ்சயன் கிரீடி
சுவேத வாகனெனு நாமம் படைத்த பிரான்" எனக் கீழ்த் தீர்த்தயாத்திரைச்
சருக்கத்துக் கூறியதைக் காண்க.  விசயன் - விசேஷமான வெற்றியை
யுடையவன்; இராசசூய யாகத்திற்காக வடக்கிற் சென்று பல அரசர்களைச்
சயித்ததனாலும், காண்டவதகன காலத்துத் தேவர்களை வென்றதனாலும்,
பாசுபதம் பெறுங்காலத்துப் பரமசிவனை யெதிர்த்து விற்கழுந்தால்
முடியிலடித்ததனாலும், பின்பு தேவர்க்குப் பகைவராகிய நிவாதகவசர்
காலகேயர்களை வதைத்ததனாலும், இவை முதலிய வெற்றிகளால் இவனுக்கு
இப் பெயர் அமைந்தது.  இனி, விசயன் - தன்னைச் சயிப்பார்
எவருமில்லாதவனென்றுமாம்; "பயிற்றிய படையால் வாகுவலியினாற்
பாரிலென்னைச், செயித்தவரிலாத பண்பால் விசயனா நாமஞ் செய்தார்"
என்றார் நல்லாப்பிள்ளை பாரதத்தும்.  முன்னைய பொருளில், வி -
விசேஷமும், பின்னைய பொருளில் வி - எதிர்மறையுங் குறிப்பனவாம்.
இருபொருளிலும், சயம் - வெற்றி,  மற்றைய பெயர்களின் பொருட்காரணம்
அவ்வப்பெயர் வருமிடத்துக் கூறப்படும்.  பிராயத்திலிளையனாயினும் போரில்
இளையானென்பார், 'திறலபிமன்' என்றார்.  யதுகுலத்தரசர்களுள்
வசுதேவனுக்கு உடன்பிறந்த முறையாகிய சத்யகனது குமாரனான சாத்யகி,
பிராயத்தில் கண்ணனினும் இளையவனாதலால், கண்ணனுக்குத் தம்பி
முறையாவான்.  சாத்தகி - ஸாத்யகி யென்னும் தத்திதாந்தநாமம் திரிந்தது;
இவன் - இலக்குமணன் இராமனிடத்திற்போலக் கண்ணனிடம் மிகுந்த
அன்புகொண்டு அவனது கருத்துக்குச் சிறிதும் மாறுபடாது நடப்பவன்;
அன்றியும், இவன் அருச்சுனனிடம் வில்வித்தையைக் கற்றறிந்த
மாணாக்கனாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும் மற்றைப்
பாண்டவரிடத்தும் அன்பு கொண்டு ஒழுகுபவன்.  விராடர்கோன் -
விராடதேசத்திலுள்ளார்க்குத் தலைவன்.  மொழிதருமன் - வினைத்தொகை.
மதுரம் ஆம் மொழி யென்றாவது, மதுரம் மா மொழியென்றாவது பிரித்து,
இனிமையான சிறந்த சொற்களையுடைய எனப் பொருள்கொள்ளின், இரண்டாம்
வேற்று மையுருபும் பயனுமுடன்தொக்க தொகையாதலால், மொழித்தருமனென
வலி மிக்கே வருமென்க.  உத்தமோஜா-உத்தம ஓஜஸ் எனப் பிரிந்து, மேலான
ஒளியையுடையானெனப் பொருள்படும்; அப்பெயரின் பொருள்பற்றி,
உத்தமபானு என்றார்; பானு - ஒளி.  சிகண்டி முதலியனவும், யாகசேனன்
முதலியனவும் - எண்ணும்மை தொக்கதனால்பெயர்ச்செவ்வெண்.  (363)

3.

நண்ணுமர்த்தரதர்க்குநாயகர்நகுலனுஞ்சகதேவனும்,
எண்ணும்வெற்றிபெறுங்கடோற்கசனென்னும்வீரனுமாகவே,
மண்ணகத்தணியணிகளாகமகீபர்தம்மைவகுத்துளான்,
விண்ணகத்தணிவிபுதர்சேனையில்வேளொடொத்தனன்வீரனே.

     (இ -ள்.) நகுலனும்-, சகதேவனும்-, எண்ணும் வெற்றி பெறும் -
(யாவராலும்) நன்குமதித்துக் கருதப்படுகிற சயத்தை