பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 329

அடையவல்ல,கடோற்கசன் என்னும் வீரனும்-, நண்ணும் அர்த்தரதர்க்கு
நாயகர் ஆக - பொருந்தின அர்த்தரதத் தலைவர்களாகவும், மண் அகத்து
மகீபர்தம்மை - நிலவுலகத்து அரசர்களையெல்லாம், அணி அணிகள் ஆக
வகுத்துளான்-இனமினமாகப் பிரித்திட்டான்; (யாவனெனில்), விண் அகத்து
அணி விபுதர் சேனையில் வேளொடு ஒத்தனன் வீரன் -
சுவர்க்கலோகத்திற்குப்பொருந்தின தேவர்களுடைய சேனையில்
தலைவனாகவுள்ள சுப்பிரமணியக்கடவுளோடு ஒத்த பலபராக்கிரமசாலியான
சுவேதராசன்; (எ - று.)

    எண்ணும் வெற்றி பெறும் - தான் மனத்தில் நினைக்குஞ் சயத்தை
நினைத்தவாறே பெறத்தக்க என்றுமாம்.  விபுதர் - விசேஷ புத்தியுடையோர்:
தேவர்க்குப் 'புலவர்' என்றதொரு தமிழ்ப்பெயருங் காண்க.  மஹீ - பூமி;
பெரியது.  வேள் என்னும் பகுதிக்கு - விரும்புதலென்று பொருளாதலால்,
யாவராலும் விரும்பப்படுங் கட்டழகுடைய  மன்மதனுக்கும், முருகனுக்கும்,
வேள் என்பது - காரணப்பெயர்.  இங்கே காமவேளை விலக்குதற்கு, 'விபுதர்
சேனையில் வேள்' என்றார்.  தேவாமிசமான பாண்டவரது சேனைக்குத்
தலைவனா தலால் சுவேதனுக்குத் தேவசேனாதிபதியை உவமை கூறினார்.    
                                                       (364)

4.-பாண்டவரும் கண்ணனும்போர்க்குச் சித்தஞ் செய்ய,
பலராமன் தீர்த்தயாத்திரை செல்லத் தொடங்குதல்.

நெருங்குவெம்படைகண்டுவந்தபினைம்புலன்களுநெஞ்சமும்
ஒருங்குசென்றெனமன்னரைவருமாலும்வெஞ்சமமுன்னவே
மருங்குநின்றவிராமனும்பின்மதித்தபோர்முடிவளவும்யான்
பொருங்கடும்புனனதிகளாடுவனென்றுநண்பொடுபோயினான்.

     (இ -ள்.) நெருங்கு வெம் படை கண்டு - (இங்ஙனம்
அணிவகுக்கப்பட்டு) நெருங்கின உக்கிரமான சேனையைப் பார்த்து,
உவந்தபின்- மகிழ்ந்த பின்பு, ஐம்புலன்களும் நெஞ்சமும் ஒருங்கு சென்று
என - பஞ்சஇந்திரியங்களும் மனமும் ஒருமித்துப் போனாற்போல, மன்னர்
ஐவரும் மாலும்- பஞ்சபாண்டவர்களுங் கண்ணனும், (ஒருமித்து), வெம் சமம்
உன்ன -கொடிய போரைக் குறித்து நிற்க,- மருங்கு நின்ற இராமனும் -
பக்கத்திலேயிருந்த பலராமபிரானும், பின்-பின்பு, 'மதித்த போர் முடிவு
அளவும்- (நீங்கள்) நினைத்த யுத்தம் முடிகிற வரையிலும், யான்-, பொரும்
கடு புனல்நதிகள் ஆடுவன் - (அலை) மோதும் விரைவான புண்ணிய
தீர்த்தத்தையுடையஆறுகளிலே (சென்று) நீராடுவேன்,' என்று - என்று
சொல்லி, நண்பொடுபோயினான் - (யாவரிடத்துஞ்) சினேகமாகவே
போயருளினான்; (எ - று.)

    "நளியிரு முந்நீ ருடுத்தமா நிலமு நானிலம் பொறுத்தவாளரவு,
நெளியமாகடலந் தானைவந் தீண்ட நெய்ம்முகங் கமழும்வேலைவர்க்,
களையுறையரவமுயர்த்தவ னொடுபோ ரடுத்திட நடுநிலை யமைந்த,
வளைமருள் மேனியொருகுழை யொருவன் வண்புனலாட்டின்
மேலெழுந்தான்" என்றார்,ஸ்ரீபாகவதத்தும்.  பலராமன் - கண்ணனுக்குத்
தமையன்: திருமாலின் எட்டாம்அவதாரம்; இவனிடத்து ஆதி