பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 331

     (இ - ள்.)போன - (இவ்வாறு) புறப்பட்டுச்சென்ற, வெம் -
(பகைவர்க்குக்) கொடிய, பலபத்திரன் - பலராமன், பொரு பூசலில் புகுதேன்
எனா மானம் வெம் சிலை முன் இறுத்த விதுரனோடு - 'எதிர்க்கிற யுத்தத்தில்
(எவர்பக்கத்துஞ்) சேர்ந்து போர் செய்யமாட்டேன்' என்று (தன்போலவே)
கூறிப் பெருமையையுடைய கொடியவில்லை முன்னமே முறித்துப்போகட்ட
விதுரனுடனே, மகிழ்ந்து போய் - மனமுவந்து சென்று, கான் அகங்களில்
வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ள - காட்டினிடங்களிலும்
மலைகளிலும் வசிக்கிற முனிவர்கூட்டம் (ஆங்காங்கு) விரைந்து வந்து
(தம்மை)எதிர்கொண்டு உபசரிக்க, எங்கணும் நானம் ஆடுவான் -
எல்லாவிடங்களிலும்[புண்ணிய தீர்த்தங்களிலெல்லாம்] ஸ்நாநஞ்
செய்யும்பொருட்டு, இரு நாலுதிக்கினும் நண்ணினான் - எட்டுத்திக்குகளிலுஞ்
சேர்ந்தான்; (எ - று.)

    பலபத்திரன் என்பதற்கு - வலிமையாற் சிறந்தவனென்று பொருள்;
பத்ரன்- சிரேஷ்டன்.  கீழ்க் கிருட்டினன் தூதுசருக்கத்தில் கூறியபடி,
"வில்லிரண்டினுமுயர்ந்த வில்"லாதலால், 'மான வெஞ்சிலை' எனப்பட்டது.
கானகங்களில்வரையில் வாழ்முனிகணம் விரைந்து எதிர்கொள்ள-
"மலர்தலையுலகமேத்துமாதவக் கிழவ ரெல்லாம், இலை விரி சாலை நின்று
மெழுந்தனரெதிர்கொண்டாரால்" எனப்பாகவதத்துக் கூறுமாறுங் காண்க.
வரையென்னுங்கணுவின் பெயர், அதனையுடைய மூங்கிலுக்குச்
சினையாகுபெயராய், அது பின்அம் மூங்கில் விளையும் மலைக்குத்
தானியாகுபெயராதலால்,இருமடியாகுபெயர்.           (366)

6.-இதுமுதல் நான்குகவிகளால்,பாண்டவர்பக்கத்தில்
அணிவகுக்கப்பட்டு நின்ற சதுரங்கசேனைகளை முறையே
வருணிக்கிறார்: அவற்றுள், இது - யானை வருணனை.

இடிபடப்படவருமுகிற்குலமெனநிரைக்கடலெனநெடுங்
கடிபடப்படவதிர்பணைக்குலமெனவதிர்ப்பனகறைகள்போ
லடிபடப்படவுரகர்பைத்தலையணிமணிக்கணமடையவும்
பொடிபடப்படவுடனடப்பனபுகர்முகக்கரிநிகரமே.

     (இ -ள்.) புகர் முகம் - செம்புள்ளிகளையுடைய முகத்தையுடைய,
கரி -யானைகளின், நிகரம் - கூட்டம்,- இடி பட பட வரும் முகில் குலம்
என -இடிகள் மிகுதியாகஉண்டாக (நீருண்டு மழை பெய்ய) வருகிற
காளமேகங்களின்கூட்டம் போலவும், நிரை கடல் என - வரிசையாகப்
பொங்கிவருகிற கடல்கள்போலவும், நெடு கடி பட பட அதிர் பணை குலம்
என - மிக்க ஓசைமேன்மேல் உண்டாக முழங்குகிற வாத்தியங்களின்
கூட்டம் போலவும்,அதிர்ப்பன-பிளிறுவன; கறைகள்போல் அடி பட பட -
உரல்கள்போன்ற(தமது) கால்கள் (அடியெடுத்துவைக்குந்தோறும்)
மேன்மேற்படுதலால், உரகர்பை தலை அணி மணி கணம் அடையவும்
பொடி பட பட -(கீழுலகத்திலுள்ள) நாகரது படத்தையுடைய தலையிற்
பொருந்தி