யுள்ளமாணிக்கங்களின் கூட்டமெல்லாம் மிகப் பொடியாகும்படி, உடன் நடப்பன - விரைந்து செல்வன; (எ - று.) முன்னிரண்டடி - உவமையணி. படப்பட - அடுக்குகள், மிகுதிப் பொருளன. கடி - பலபொருளுணர்த்தும் உரிச்சொல்; "கடியென் கிளவி காப்பே கூர்மை, விரையே விளக்க மச்சஞ் சிறப்பே, விரைவே மிகுதி புதுமையார்த்தல், வரைவே மன்றல் கரிப்பினாகும்" என்பது நன்னூல். நெடுங்கடி - மிக்க தூரத்துஞ் சென்றொலிக்கும் ஓசை. இனி, கடியென்பதைக் கடிப்பு என்பதன் விகார மெனக்கொண்டு, பெரிய குறுந்தடி யெனினும் அமையும். உரல் - யானைக்காலுக்கு, வடிவாலும் வலிமையாலும் உவமம்: "உரற்கால் யானை" என்றார் முன்னோரும். இனி கறைகள்போல் நடப்பன என இயைத்து, கறுத்த இருட்டொகுதிபோல நடப்பன வென்று உரைப்பாருமுளர். பின்னிரண்டடிகளில் யானைகள் அடிவைக்கும் வன்மையால் கீழுள்ள நாகர்களது தலைமணிகள் பொடியாகுமென்றது - தொடர்புயர்வுநவிற்சியணி.உடன் நடப்பன - ஒன்றோடொன்று தொடர்ச்சியாக நடப்பன எனவுமாம். யானைகளுக்கு முகத்திற் செம்புள்ளிகளிருத்தல், உத்தமவிலக்கணம்: "தீயுமிழ் சிறுகணுஞ் செம்புகருமுடைத்தாய்" எனப் பிங்கலந்தையிலுங் காண்க. "மதம்பொழியாழியினளவும் புகரா லழகெய்தி," "செம்புகர்பட்டின் தொழிலிற் பயில்கிற்பது" என்பர் மேற் பதினாறாம்போர்ச் சருக்கத்தும். கரி - கரத்தையுடையது: கரம் - கை: இங்கே துதிக்கை: இதற்குக் கருநிறத்தையுடையதெனப் பொருள் கூறலாகாது. மேகமுங் கடலும் யானைக்குஒலியினாலேயன்றி, கரியபெரிய வடிவத்தாலும், மதநீர் வெள்ளத்தாலும்உவமையாம். இதுமுதல் 15-ஆம் பாடல் வரையிலுள்ள செய்யுள்கள், தனதனத்தன தனதனத்தன தனதனத்தன தனதனா என்ற சந்தக்குழிப்பைக் கொண்டிருத்தலால் சந்தவிருத்தமெனற்கு ஏற்பன. (367) 7.-இது தேர் வருணனை. உருண்மணித்திகிரியின்முனைப்படிலுயர்பொருப்பையுமுரகர்வா ழிருநிலத்திடைபுதைபடப்படவெதிர்நடப்பனவிவுளியின் குரதுகட்கொடுகலகமிட்டணிகொடிநிரைத்துகில்கொடுபொலந் தருநிலத்தவர்விழிதுடைப்பனசரதமிப்படியிரதமே. |
(இ -ள்.) இரதம் - தேர்கள்,- உருள் மணி திகிரியின் முனை படில் - உருண்டு செல்லும் அழகிய சக்கரங்களின் நுனிபட்டால், உயர் பொருப்பையும் - உயர்ந்த மலைகளையும், உரகர் வாழ் இரு நிலத்திடை - நாகர்கள் வாழும் பெரிய பாதாளலோகத்திலே, புதை படபட - நன்றாகப் புதைந்தழுந்தும்படி, எதிர்நடப்பன - எதிரே செல்லுந் தன்மையன; இவுளியின் - (தம்மிற் கட்டிய) குதிரைகளினுடைய, குரம் துகள் கொடு - காற்குளம்புகளால் எழுப்பப்பட்ட தூளிகளால், கலகம் இட்டு - (மேலுள்ளதேவர்களோடு) போரைச் செய்து, அணி கொடி நிரைதுகில் கொடு - (தம்மீது கட்டியுள்ள) |