என்பர் மேல் இருபத்து மூன்றாம்பாட்டிலும். மெய்க்கதி - உடம்பினாற் செல்லுங் கதி யென்பாருமுளர். 'ஒத்தெழு பரவைசூழ்' என்றும் பாடம். (369) 9.-இது - காலாள் வருணனை. புருவவிற்குனிவெழவுயிர்ப்பொடுபுகையெழத்துகிர்புரையும்வாய் மருவுமுத்திளநிலவெழத்தனிமனநெருப்பெழவளர்தடக் கரதலத்தயில்வெயிலெழப்புனைகலன்வனப்பெழமிளிருநீள் நிரையிமைப்பெறுவிழிசிவப்பெழநிருதரொத்தனர்விருதரே. |
(இ -ள்.) விருதர் - காலாள் வீரர்கள்,- புருவம் வில் குனிவு எழ - (தத்தம்) புருவங்களாகிய விற்களின் வளைவு தோன்றவும், உயிர்ப்பொடு புகை எழ - (தமது) சுவாசத்தோடு புகை கிளம்பவும், துகிர் புரையும் வாய் மருவும் முத்து இள நிலவு எழ - பவழத்தை யொத்த [மிகச்சிவந்த] (தமது) வாயிற் பொருந்திய முத்துப்போன்ற பற்களில் இளஞ்சந்திரகாந்தி போன்ற ஒளி (வீரநகை செய்யுங் காலத்து) வெளித்தோன்றவும், தனி மனம் நெருப்பு எழ - ஒப்பில்லாத (தமது) மனத்தில் (கோபமாகிய) தீப்பொங்கவும், 'வளர் தடகர தலத்து அயில் வெயில் எழ - நீண்டுவளர்ந்த பெரிய (தமது) கையினிடத்துப் பொருந்தின வேல்களில் சூரியகாந்தி போன்ற ஒளி வீசவும், புனைகலன் வனப்பு எழ - (தாம்) அணிந்துள்ள ஆபரணங்களின் அழகு விளங்கவும், மிளிரும் நீள் நிரை இமை பெறு விழி சிவப்பு எழ - ஒளி செய்கிற நீண்ட ஒழுங்கான இமைகளைப் பெற்ற கண்களில் (கோபமிகுதியால்) செந்நிறம். பொருந்தவும், (இக்காரணங்களால்), நிருதர் ஒத்தனர் - அரக்கரைப் போன்றனர்; (எ - று.) உவமையணி. கோபத்தாற் புருவம் வளைதல், கோபத்தோடு விடும் பெருமூச்சில் புகை கிளம்புதல், சிவந்தவாயிற் பொருந்தின கோரப்பற்களின் வெள்ளொளி வெளிவிளங்குதல், பிறரோடு கூடாது தனிப்பட்டு மனம் கோபாக்கினியாற் கொதித்தல், கையில் வேலேந்துதல், உடம்பில் ஆபரணமணிதல், கோபத்தாற் கண்கள் சிவத்தல் என்னும் இவை அரக்கர்க்கும்உண்மை காண்க; அன்றியும், வில்வளைவு, புகை, நிலா, நெருப்பு, வெயில்,அழகு, கொடுங்கண் முதலியவற்றை மாயையால் ஒருங்கு காட்டுவராதல்பற்றியும், அரக்கரை உவமை கூறிய தென்னலாம். முத்து - வெள்ளிய பல்லுக்கு உவமையாகுபெயர். கைகள் முழங்காலளவும் நீண்டு தொங்குதல் உத்தம இலக்கணமாதலால், 'வளர்தடக்கரதலம்' என்றது. விருது- வெற்றி; அதனையுடையவர், விருதர். 'இமைப்பறு' என்றும் பாடம். (370) 10.-இது - அரசர் வருணனை. கொடிநெருக்கவுமதியெனத்திகழ்குடைநெருக்கவுநடைகொளா ளடிநெருக்கவு மிபநெருக்கவு மயநெருக்கவு மெழுதுகட் பொடிநெருக்கவும்வளர்புயத்தொடுபுயநெருக்கவுமொளியறா முடிநெருக்கவுமுறைநெருக்கினர்முரசமொத்தசொலரசரே. |
|