பக்கம் எண் :

338பாரதம்உத்தியோக பருவம்

13.- இது - முரசம், குடை,கொடி, ஆயுதம் என்பவற்றின்
வருணனை.

சதியெனைப்பலவெனமுழக்கினசதவிதப்பணைதவளமா
மதியெனைப்பலவெனநிழற்றினமகிபர்பொற்குடைமழைகொள்வான்
நதியெனைப்பலவெனநிரைத்தனநவமணிக்கொடிநளினவெம்
பதியெனைப்பலவெனவெறித்தனபலவகைப்படைகுலவவே.

     (இ -ள்.) (அந்தச் சேனையில்), சதம் விதம் பணை - நூறு
வகைப்பட்டவாத்தியங்கள், எனை பல சதி என - மிகப்பலவான தாள
வகைகளை யொத்து,முழக்கின - ஒலித்தன: மகிபர் பொன் குடை -
அரசர்களது அழகிய குடைகள்,தவளம் மா மதி எனை பல என -
வெண்ணிறமான பெரிய பூர்ண சந்திரன்மிகப்பல என்னும்படி [அனேக
சந்திரர் இருந்தாற்போல], நிழற்றின -நிழலைச்செய்தன; நவ மணி கொடி -
நவரத்தினங்களிழைக்கப்பெற்றகொடிகளின்  சீலைகள், மழை கொள் வான்
நதி எனை பல என -குளிர்ச்சியைக்கொண்ட ஆகாச கங்காநதி மிகப்பல
என்னும்படி [பலகங்கைகள் இருந்தாற்போல], நிரைத்தன - ஒழுங்காய்
நிறைந்தன;பலவகைப்படை - அநேக வகை ஆயுதங்கள், நளினம் வெம்பதி
எனை பலஎன - தாமரைக்கு விரும்பப்படுந் தலைவனான சூரியன்
அநேகமென்னும்படி[பல சூரியர் ஒருங்கு விளங்கினாற்போல], குலவ
எறித்தன - விளங்க ஒளிவீசின; (எ - று.)

     இரண்டுமுதலிய மூன்றடிகள் - இல்பொருளுவமை.  மேலே வரிசை
வரிசையாக அசைந்து நெடுந்தூரம் தொடர்பட்டு நிற்றலால், கொடி வரிசைக்கு
வான்நதி உவமையாம். தாமரை சூரியனொளியைக் கண்டவிடத்து மலர்தலும்,
அதனைக் காணாதவிடத்துக் குவிதலுமாகிய இயல்புபற்றி, தாமரையாகிய
பெண்ணுக்குச் சூரியனைக் கணவனென்றல் மரபு.  பலவகைப்படை-எய்வன
வெட்டுவன குத்துவனவாகிய அம்பு வேல் வாள் ஈட்டி முதலியன.  தாளங்கள்
நூற்றெட்டு வகையாதலால், 'சதியெனைப்பல' என்றது.  நூறென்னும்
பொருளைத் தருகின்ற சதமென்னும் சொல், இங்கே மிகப்பல வென்ற
மாத்திரமாய் நின்றது.  பணை-பறைப்பொது.  பொன் குடை -
பொற்காம்பிட்டகுடை யென்றுமாம்; பொன் - கருவியாகுபெயர்.  நவமணி-
கோமேதகம், நீலம்,பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து,
வைடூரியம், வைரம் என்பன. வெம்மை என்பது - பண்புச்சொல்லாய்
வெப்பத்தை யுணர்த்துவதேயன்றி,உரிச்சொல்லாய் விருப்பத்தையும்
உணர்த்துதலை 'வெம்மை வேண்டல்'என்னுந் தொல்காப்பியத்தால்
அறிக.                                                (374)

14.- இது - சேனைப்பொதுவர்ணனை.

பிடர்வலிக்கடகரிகளிற்செறிபிடிகளிற்புனைமுடிகளிற்
படர்நிழற் கவிகையின்மிசைத் துகள்பரவிமொய்த்தெழுபுரவியிற்
சுடர்விதப்படை களினிரைப்படுதுகிலுடைக் கொடிகளின் விராய்
அடர்பொருப்பினமிடையிடைப்பயிலடவியொத்ததுபுடவியே.