பக்கம் எண் :

340பாரதம்உத்தியோக பருவம்

பலவயின்,பின்வருமென்னிற் பின்வருநிலையே" என்றார்
தண்டியலங்காரத்தும். கிணை - மருதப்பறை; துடி - குறிஞ்சிப்பறை; பலவகை
நிலத்தினின்றும்படைகள் திரண்டு வந்ததனால், பலநிலப்பறைகளும்
இவற்றிற்கு உரியனவாம். துளை - துளையுள்ள கருவிக்கு ஆகுபெயர்.  (376)

16.-இது - இங்ஙனம்அணிவகுக்கப்பட்டுப் போருக்குச் சென்றுநின்ற பாண்டவர்சேனைத்தொகையின் தோற்றத்தைவருணிப்பது.

செங்கண்மாலுயிர்தருமன்மார்புசிவேதனானனனமிருபுயம்
வெங்கண்வீமனும்விசயனுந்திறல் வின்மருத்துவர்மைந்தர்தாள்
அங்கண்மாமுடியரசர்மற்றுளவவயவாதிகளாகவே
தங்கள்பூமியிலானபோதொருவடிவமொத்ததுதானையே.

     (இ -ள்.) செம் கண் மால் - சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணபிரான், உயிர் - உயிராகவும், தருமன் - தருமபுத்திரன், மார்பு -
மார்பாகவும், சிவேதன் - சுவேதன், ஆனனம் - முகமாகவும், வெம் கண்
வீமனும் விசயனும் - (பகைவர்க்குக்) கொடிய தன்மையையுடைய வீமசேனனும்
அருச்சுனனும், இரு புயம் - இரண்டு தோள்களாகவும், திறல் வில் மருத்துவர்
மைந்தர் - வலிமையையுடைய வில்லையுடைய அசுவிநீ தேவர்களது
குமாரர்களான நகுல சகதேவர்கள், தாள் - (இரண்டு) கால்களாகவும், அம்
கண் மா முடி அரசர் - அழகிய தன்மையையுஞ் சிறந்த கிரீடத்தையு முடைய
மற்றையரசர்கள், மற்று உள அவயவ ஆதிகள் ஆக - இன்னுமுள்ள (வேறு)
உறுப்புக்கள் முதலியவையாக, தானை - அந்தச் சேனை, தங்கள் பூமியில்
ஆனபோது - தங்களது [பாண்டவரது] இராச்சியமான குருக்ஷேத்திரத்திற்
சேர்ந்தபொழுது ஒரு வடிவம் ஒத்தது - ஒரு ரூபத்தை யொத்திருந்தது;
(எ -று.)

     தற்குறிப்பேற்றவணி. சேனையின் தோற்றத்தை ஒரு புருஷரூபமாகக்
கற்பித்துக் கூறியவாறு.   உயிர் உடம்பிலிருந்து அதனைக்கொண்டு தொழில்
நடத்துதல்போலப் பரமாத்மா எல்லாச் சீவாத்மாக்களிலும் உள்ளிருந்து
அவற்றைக் கொண்டு தொழில் நடத்துதலால் 'செங்கண்மால்உயிர்' என்றும்,
வீரர்க்கு எல்லாவுறுப்பினும் மார்பு சிறந்து முற்படவிளங்குமாறுபோலத்
தருமன்எல்லோரினுஞ் சிறந்து முற்பட விளங்குதலால் 'தருமன் மார்பு'
என்றும், முகம்முக்கிய அவயமாய் முன் விளங்குதல்போலச் சுவேதன்
சேனாதிபதியாய்ச்சேனாமுகத்தில் நின்று விளங்குதலால் 'சிவேதன் ஆனனம்'
என்றும், தமதுவலிமையாற் பகைதொலைத்து வெற்றிதர வல்ல
தோள்கள்போல வீமார்ச்சுனர்தமது திறமையாற் சத்துருசங்காரஞ்செய்து
வெற்றிவிளைப்பவ ராதலால்'வெங்கண் வீமனும் விசயனுமிரு புயம்' என்றும்,
கால்கள் தாழ்ந்தவுறுப்புக்களாய்த் தம்மையுடையவன் நினைத்தவிடஞ்
செல்லுதற்கேற்றகருவியாயிருத்தல் போல நகுல சகதேவர் இளையவர்களாய்த்
தருமன் முதலியமூத்தவர் மூவரும் விரும்பினபடி தொழில் செய்பவராதலால்
'திறல்வில்