'களப்பலி கொடாமலே சேனைகளை வகுத்துப் போர்க்குஎழுக' என்றனன் துரியோதனனென்க. கொதி - முதனிலைத்தொழிற்பெயர். நெஞ்சின் வலி, மனத்து வலி - மனோபலம். அஞ்சுபு - செய்புஎன்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம். நமக்கு என்பதை மத்திமதீபமாக அஞ்சுபுஎன்பதனோடுங் கூட்டுக. ஒருவர் என்பதன் இறுதியில் இழிவுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. நம் - முன்னிலையை உளப்படுத்திய தன்மைப்பன்மை: வீடுமனைக் கூட்டும். அசைவு - சலனம்; கலக்கமென்றபடி. அநீகிநி - அநீகங்களையுடையதென்று பொருள்; அநீகம் - குதிரை முதலியவற்றின் கூட்டம். (379) 19.-இதுவும், மேற்கவியும்குளகம்: வீடுமன் அரசரைப் பிரிக்கக் கர்ணன் மனஸ்தாபப்படுதல். ஆனதெனவீடுமனுமதிரதரின்மிக்கதனுவாசிரியனும்புதல்வனுந் தானுமுயர்பூரிசரவாவுமிவர்சோமவரதத்தபகதத்தர்கள்வழா மானமிகுதுன்மருடனற்றலைவர்மாரதரில்வன்கிருதபற்பவரசன் ஞானகிருபன்சகுனிசல்லியசயத்திரதர்நன்சமரதத்தலைவரே. |
(இ -ள்.) (இவ்வாறு கூறின துரியோதனன் வார்த்தையைக் கேட்டவுடனே), வீடுமனும் - பீஷ்மனும், ஆனது என - (அணி வகுப்பு இப்பொழுதே) முடிந்த தென்று கூறி, மிக்க தனு ஆசிரியனும் - பாண்டவ துரியோதனாதியர்க்குச் சிறந்த வில்வித்தையைப் போதித்த ஆசாரியனான துரோணனும், புதல்வனும் - (அவனது) குமாரனான அசுவத்தாமனும், தானும்- (வீடுமனாகிய) தானும், உயர் பூரிசரவாவும் - சிறந்த பூரிசிரவஸ் என்பவனும், இவர் - (ஆகிய) இவர்கள், அதிரதரில் (நல் தலைவர்) - அதிரதர்களில் நல்ல சிரேஷ்டர்கள்; வர சோமதத்த பகதத்தர்கள் - சிறந்த சோமதத்தனும் பகதத்தனும், வழா மானம் மிகு துன்மருடன் - (போரில்) தவறாத மானம் மிகுந்த துர்மர்ஷணனென்பவனும் (ஆகிய இவர்), மா ரதரில் நல் தலைவர்- மகாரதர்களில் சிறந்த சிரேஷ்டர்கள்; வல் கிருதபற்ப அரசன் - வலிய கிருதவர்மராசனும், ஞானகிருபன் - நல்லறிவுடைய கிருபாசாரியனும், சகுனி - சகுனியும், சல்லியன் சயத்திரதன் - சல்லியனும் ஜயத்ரதனும், (ஆகிய இவர்), நல் சமரதர் தலைவர் - சிறந்த சமரத சிரேஷ்டர்கள்; (எ - று.) இப்பாட்டில் 'வீடுமனும்' என்ற எழுவாயும், 'ஆனதென' என்ற வினையெச்சமும், அடுத்த கவியில் 'என இம்முறை வகுத்து உரை செய்தான்' என்றதனோடு முடியும். ஆனது -விரைவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி; துரிதத்தில்முடியு மென்றவாறு. இனி, ஆய்விட்ட தென்று கண்டோர் கூறும்படி யென்றும் உரைக்கலாம். வரசோமதத்த பகதத்தரென மாறுக. சோமதத்த பகதத்தர் - பலர்பாலால் முடிந்த உயர்திணை யும்மைத்தொகை. துர்மர்ஷணன் என்ற சொல்லுக்கு - (பகைவராற்) பொறுக்க வொண்ணாதவ னென்று பொருள். கிருதபற்பன் - துரியோதனன் கண்ணனைப்படைத் |