பக்கம் எண் :

344பாரதம்உத்தியோக பருவம்

துணையழைக்கப்போனபொழுது, அவ்வெம்பிரானால் அவனுக்குத்
துணையாகக் கொடுக்கப்பட்ட யாதவ சேனைக்குத் தலைவனாக அனுப்பப்
பட்டவன்; யதுகுலத்தில் இருதிகனென்பவனது குமாரன்.  ஜயத்ரதன் - சிந்து
தேசத் தரசன்; ஆதலால், ஸைந்தவனென்றும் இவனுக்கு ஒரு பெயர்
வழங்கும்: இவன் - துரியோதனாதியருடன் பிறந்தவளான துச்சளையின்
கணவன். "துன்மருடணன்றலைவர்" என்றும் பாடம். (380)

20. அங்கர்பெருமான்விருடசேனனரசற்குரியவனுசரிவரர்த்தரதரிற்,
றுங்கவயவீரரெனவிம்முறைவகுத்துரகதுவசனுடனேயுரைசெய்தான்,
கங்கைமகனோடுபலகூறிநனிசீறியுயிர்காய்வனெனவாளுருவிநீ,
பொங்கமரின்மாளுமளவும்படைதொடேனெனமொழிந்தனனிசாரி
                                     புதல்வன்.

     (இ -ள்.) அங்கர் பெருமான் - அங்க தேசத்தார்க்கு அரசனான
கர்ணனும், விருடசேனன் - விருஷஸேநனும், அரசற்கு உரிய அனுசர் -
ராஜராஜனான துரியோதனனுக்கு உரிய தம்பிமாரான துச்சாதனன் முதலிய
தொண்ணூற்றொன்பதின்மரும், இவர் - (ஆகிய) இவர்கள், அர்த்தரதரில்
துங்கவயவீரர் - அர்த்தரதர்களில் சிறந்த வலிமையையுடைய வீரர்கள், என-
என்று, இ முறை வகுத்து - இவ்வாறு பிரித்து, உரகதுவசனுடனே
உரைசெய்தான் - பாம்புக்கொடியனான துரியோதனனோடு (வீடுமன்)
கூறினான்;(இது கேட்டவளவில்), நிசாரி புதல்வன் - சூரியகுமாரனான
கர்ணன், நனி சீறி -மிகக் கோபித்து, கங்கை மகனோடு பல கூறி -
கங்கையின் புத்திரனானவீடுமனோடு பல வார்த்தைகள் சொல்லி, உயிர்
காய்வன் என வாள் உருவி -(உன்) உயிரை மாய்ப்பேனென்று
(வீரவாதங்கூறித் தன்) வாளாயுதத்தை(உறையினின்று) எடுத்து, (முடிவில்),
'பொங்கு அமரில் நீ மாளும் அளவும்படைதொடேன்' என மொழிந்தனன் -
'கொடிய யுத்தத்தில் நீ இறக்கும்வரையிலும் நான் ஆயுதந்தொடவும்
மாட்டேன் [வந்து போர்செய்யேன்]' என்றுசபத வார்த்தை கூறினான்;
(எ - று.)

    வீடுமன் கர்ணனை அதிரத மகாரத சமரதரில் எவ்வகுப்பிலும்
சேர்க்காமல் ஈற்றதான அர்த்தரதரினத்திற் சேர்க்கவே, அவன் மிகக்கோபங்
கொண்டு பல நிந்தனைகளும் வீரவாதங்களும் கூறி வீடுமனைக் கொல்ல
வாளுருவ, அதுகண்ட துரியோதனன் முதலியோர் விலக்கினவளவிலே அவன்
'போரில் வீடுமன் இறக்குமளவும் நான் வந்து போர் செய்வதில்லை' என்று
சபதங்கூறிப் போயினன் என்றதாம்.

    கர்ணனை அர்த்தரதனாக வைத்ததற்குக் காரணம் - தன்னுடன்
பிறந்தனவும் அழியா வலிமை தருவனவுமான கவச குண்டலங்களை
இந்திரனுக்குத் தானஞ் செய்து இழந்ததும், கற்ற வில்வித்தை யெல்லாம் தக்க
சமயத்திலே உதவாமல் மறந்து போய்விடும்படி குருவாகிய பரசுராமனாற்
சபிக்கப்பட்டதும், தன்னுடம்பு பகைவ ரம்பாற் சிதைபடவும் தேர்ச்சக்கரம்
போர்களத்தில் அழுந்தி விடவும் ஓரந்தணனாற் சாபம் பெற்றதும், இதற்கு
முன்பல போர்களிற் செருக்குக்கொண்டு சென்று எதிர்த்து ஒன்றிலேனும்
வெற்றி