பெறாதுதோற்று மீண்டதும் முதலியன வென வடமொழி வியாச பாரதத்தால் விளங்குகிறது. துரியோதனன் ராசராசனாய் அரசாள் கிறவனாதலால், அவனைப் படைவகுப்பில் எந்தவகையிலுஞ் சேர்க்கவில்லை; தருமபுத்திரனும் மகாராசனேயாகில் அவனை மாத்திரம் மகாரதனாகக் கணக்கிட்டது, அக்காலத்தில் அவன் அரசாட்சியின்றி க்ஷத்திரிய வீரனாக மாத்திரம் இருத்தலாலென்க காண்க. கீர்த்தி சேனைத்தலைவனுக்கே செல்லுதல் இயல்பாதலால் வீடுமன் சேனாதி பதியாய் வாழ்ந்திருக்கையில் தான் யுத்தஞ் செய்து அருச்சுனாதியாரைச் சயித்தால் அந்தப் புகழ் தனக்குவராமல் வீடுமனுக்குச் சென்றிடுமே என்று கருதி கர்ணன் வீடுமனுள்ளவரையில் 'நான் போர் செய்யேன்' என்றான். துங்கவயவீரர் - அக்கிரகண்ணியர். பரமசிவனது நெற்றிக் கண்ணின் நெருப்புக்கு இரையாகி எரிபட்ட மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடத்திற்கு அக்காரணத்தால் அங்கதேசமென்று பெயர். பெருமான - பெருமையுடையவன். விருடசேனன் -கர்ணனது புத்திரருள் மூத்தவன், அநுஜர் - பின் பிறந்தவரென்று பொருள். நிசாரி - இரவிற்குப் பகைவனென்று பொருள். இருளை யொழிப்பவனென்று கருத்து. இது உயர்திணைப் பெயராதலால், இதன் முன்வலிமிகவில்லை. (381) 21.-துரியோதனன் பெருஞ்சேனையோடுபோர்களத்துக்குச் செல்லுதல். யானைமிசைதேரின்மிசையிவுளிமிசைபோம்வயவரேதிசிலை வேல்வயவரிற், றானைகளொராறுமுகிலேழுமெனவண்பணைதழங்குதிசைசூழ வரவும், ஏனைநரபாலரணிதோறும்வெயில்வாளிரவியென்னவிருபாலும் வரவுஞ், சேனைமுதனாதனொடுமெய்த்துணைவர்தங்களொடுசென்றன னிராசதிலகன். |
(இ -ள்.) யானைமிசை தேரின்மிசை இவுளிமிசைப்போம் வயவர் - யானைகளின் மேலும் தேர்களின் மேலும் குதிரைகளின் மேலும் (தனித்தனி) ஏறிச் செல்லும் வீரரும், ஏதி சிலை வேல் வயவரின் - வாளையும் வில்லையும் வேலையும் (தனித்தனி) ஏந்திய வீரர்களும் (ஆகிய) இவர்களால் (ஆகிய), தானைகள் ஓர் ஆறும் - அறுவகைச்சேனைகளும், முகில் ஏழும் என வண் பணை தழங்கு திசை - ஸப்த மேகங்கள்போலப் பெரியபேரிகைகள் முழங்கப்பெற்ற திக்குகளிலெல்லாம், சூழவரவும் - சுற்றிலும் வரவும், ஏனை நரபாலர் - மற்றை அரசர்கள், அணிதோறும் - படைவகுப்பு வரிசைகளிலெல்லாம், வெயில்வாள் இரவி என்ன உஷ்ணகிரணமுடைய சூரியன்போல, (மிக்கவிளக்கமுற்று), இருபாலும் வரவும் - இரண்டு பக்கத்திலும் வரவும், சேனை முதல் நாதனொடு - சேனைக்குப் பிரதானாதிபதியான வீடுமனுடனும், மெய்துணைவர் தங்களொடு-(தன்னிடத்து) உண்மை யன்புள்ள (தன்) தம்பிமார்களுடனும், இராச திலகன் - அரசரிற் சிறந்தவனான துரியோதனன், சென்றனன் - (போர்களத்துக்குப்) போயினான்; (எ - று.) |