பக்கம் எண் :

348பாரதம்உத்தியோக பருவம்

    எப்பொழுதும் வேகமாகவே சென்று கொண்டிருந்தாலுஞ் சிறிதும்
இளைப்புறாத தன்மையில்இரவி புரவி, உவமை.  உவமையணியும்
உயர்வுநவிற்சியணியும்விரவியது.  கதத்தினொடும் - வலிமையோடும்
என்றுமாம்:  இமைப்பொழுது - இயற்கையில் மனிதன் ஒருகால்
கண்ணிமைகளை மூடித்திறக்குங் காலம்.  அண்டத்துக்கு உள்ளேயிருக்கும்
ஏழுகடல்களன்றி அண்டத்துக்கு வெளியே எல்லா அண்டங்களுக்கும்
ஆதாரமாகஇருப்பதொரு பெரு வெள்ளத்துக்குப் பெரும் புறக்கடலென்று
பெயர்; புணரி -(நதிகளோடு) புணர்வது எனக் காரணப்பெயர்; புணர்தல் -
கலத்தல். நதிகளாகிய பெண்களுக்குக் கடலைக் கொழுநனென்றல், கவிமரபு.
துகிர்ப்ப -தூர்ப்ப என்பதன் மரூஉ; தனித்தனி ஒவ்வொரு நிறமுடையனவும்,
ஒவ்வொன்றே பலநிறங் கலந்துள்ளனவும் ஆகிய எல்லாம் அடங்க, 'பல
வகைநிறத்த' என்றார்.  இனி யவன, சவனத்தினிடை வளர்வன என்பதற்கு-
யவனக்குதிரை களுள்ளும் ஜவனக்குதிரைகளுள்ளும் வளர்ந்த
தோற்றமுடையனவென்றும் உரைக்கலாம்; யவநம் - யவநதேசத்துக் குதிரை:
ஜவநம் - ஜவத்தால் மிக்கது; ஜவம் - வேகம்.                   (384)

24.-இது இரத வருணனை.

நடுநிலமுரைக்கிலுயரவனிதலமொக்குமிசை நவமணியழுத்தி யனவா,
னுடுநிகரமொக்குமுருளுருளைகளருக்கனுடனுடுபதியையொக்
                                            குமகுடங்,
கொடிமுடிகளொக்குமிவுளிகடிசையனைத்துமெறிகுரைப
                                  வனமொக்குமடைவே,
யிடுதுகினிரைத்தகொடிசொரியருவியொக்குமெழுகுலகிரிகளொக்
                                            குமிரதம்.

     (இ -ள்.) (அங்குள்ளதேர்களின்), நடு நிலம் - நடுவிடத்தை,
உரைக்கில்- கூறத்தொடங்கினால், உயர் அவனி தலம் ஒக்கும் - (அது)
உயர்ந்த பூமியின்பரப்பை ஒத்திருக்கும்; மிசை அழுத்தியன நவ மணி -
மேலே பதித்துள்ளஒன்பது வகை இரத்தினங்கள், வான் உடு நிகரம் ஒக்கும்-
ஆகாயத்திற்பொருந்திய நட்சத்திரங்களின் கூட்டத்தைப்போலும்; உருள்
உருளைகள் - சுழலுந்தன்மையனவான சக்கரங்கள், அருக்கனுடன் உடுபதியை
ஒக்கும் - சூரியமண்டலத்தோடு சந்திரமண்டலத்தையும் போலும்; மகுடம் -
சிகரங்கள், கொடி முடிகள் ஒக்கும் - மலைச்சிகரங்களைப்போலும்; இவுளிகள்
- (பூட்டிய) குதிரைகள், திசை அனைத்தும் ஏறி - எல்லாத்திக்குகளிலும்
வீசுகிற, குரை பவனம் - ஒலிக்கின்ற காற்றை, ஒக்கும் -; அடைவே இடு -
வரிசையாகக் கட்டப்பட்ட, துகில் நிரைத்த - சீலைகள் ஒழுங்கமையப் பெற்ற,
கொடி - துவசங்கள், சொரி அருவி ஒக்கும் - (மலைச்சிகரத்தினின்று)
பெருகுகிற நீர்ப் பெருக்கைப்போலும்; இரதம் - (இவற்றோடு கூடிய) தேர்கள்,
எழு குலகிரிகள் ஒக்கும் - ஏழு குலபருவதங்களையும் போலும்; (எ - று.)

    தேர்க்குக் குலகிரி உயர்வு வலிமைகளுக்கு உவமை:  உவமையணி.
இக்கவியிலுள்ள 'ஒக்கும்' என்ற முற்றுக்கள் பலவற்றுள் இறுதியிலுள்ள
தொன்றொழியப் பிறவற்றையெல்லாம் 'ஒப்ப' என