பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 349

முற்றெச்சமாகக் கொண்டு ஏகவாக்கியமாக்கிப் பொருள் கூறினுமாம்.  நடுநிலம்
- வீரன் ஏறி வீற்றிருக்கு மிடம்.  தக்ஷமகாமுனிவனது பெண்களான அசுவினி
முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களையுஞ் சந்திரன் மணஞ்செய்து கொண்டன
னாதலால், அவனுக்கு 'உடுபதி' என்று ஒருபெயர்.            (385)

25.- இது - பதாதி வருணனை.

அரவின்விடமொத்தவெரிசினமுநிலைபெற்றுடையவசல
                            நிகரொத்தமனமும்,
புரவியுடனொத்தகதிவிரைவுமுருமொத்தவதிர்குரலுமெழு
                                வொத்தபுயமு,
முரவனிலமொத்தவலியுரமுமதனொத்தவொளியுருவமு
                           மனைத்தும்விரவிப்,
பரவைமணலொத்தபலவணிபடவகுத்தபலபடை
                          யுடனடக்குநடையார்.

     (இ -ள்.) அரவின் விடம் ஒத்த - பாம்பின் விஷத்தைப் போன்ற
[தவறாது கொல்லவல்ல], எரி சினமும் - பற்றியெரியுங் கடுங்கோபமும்,
நிலைபெற்று உடைய - சலியாமல் (உறுதியாக) நிற்றலைப் பெற்றுள்ள,
அசலம் -மலையை, நிகர் ஒத்த - சமானமாகப் பொருந்தின, மனமும் -
(எதற்குஞ்சலியாத உறுதி) நெஞ்சும், புரவியுடன் ஒத்த - குதிரைகளோடு
சமமான, கதிவிரைவும் - நடையின் வேகமும், உரும் ஒத்த -
இடிமுழக்கத்தைப்போன்ற,அதிர் குரலும் - கர்ச்சிக்கிற ஒலியும், எழு ஒத்த-
தூண்களைப் போன்ற,புயமும் - தோள்களும், உரம் அனிலம் ஒத்த -
வலிமையையுடைய காற்றைப்போன்ற [எதையுந் தாங்கவல்ல], வலிஉரமும் -
வலிமையையுடைய மார்பும்,மதன் ஒத்த - மன்மதனைப் போன்ற [மிக
அழகிய], ஒளி உருவமும் -பிரகாசத்தையுடைய வடிவமும், அனைத்தும் -
(ஆகிய இவை) எல்லாம், விரவி- கலந்து, பரவை மணல் ஒத்த பல அணி
பட வகுத்த - கடற்கரையின்மணலைப் போன்ற [அளவிறந்த] மிகப்பல
அணிகளாக வகுக்கப்பட்ட, பலபடையுடன் நடக்கும் - அநேக
ஆயுதங்களுடனே செல்லுகிற, நடையார்-காலாள்கள்,
(அச்சேனையிலிருந்தனர்); (எ - று.)

   ஏற்றவினை வருவித்து முடிக்கப்பட்டது.  நடையான் என்ற பாடத்துக்கு-
பதாதிக்கூட்ட மெனச் சாதியைக்குறிப்பதாகக் கொண்டு, 'ஒத்த' என்பதை
வினைமுற்றாக்கி யுரைக்கவுமாம். அசலம் - சலியாதது; காரணப்பெயர்.  உரம்
வல் நிலம் ஒத்த எனப்பிரித்து - மிக்க வலிமையையுடைய நிலத்தைப்போன்ற
மிக்க வலிமை யென்று உரைப்பாரு முளர்.  மதன் - மதனன், அல்லது
மந்மதன் என்பதன் விகாரம், படையுடன் - சேனையுடன் என்றுங்
கொள்ளலாம், நடையார் - நடையுடையவர்; எனவே, பதாதியாவர்,
உவமையணி.  எழு - புயத்திற்குத் திரண்டு உருண்டுநீண்ட தன்மையால்
உவமம்.                                           (386)

26.- இது - ராஜ வருணனை.

குடைநிலவெறிக்கவிருபுறமுமசைபொற்கவரிகுளிர்நிலவெறிக்க
                                       வெறிகைப்,
படைவெயிலெறிக்கவணிமுடியுடன்மணிப்பணிகள்பல