பக்கம் எண் :

350பாரதம்உத்தியோக பருவம்

                               வெயிலெறிக்கவுடனே,
யிடையிடையெடு
்தகொடிநிரையிருளெறிக்கயெழுதுகளிருளெறிக்க
                                        வெழுபா,
ரடையவொர்தினத்தின்வலம்வருதிகிரியொத்தனர்களவனிபரெனைப்
                                         பலருமே.

       (இ- .ள்.) குடை-, நிலவு எறிக்க - சந்திரகாந்திபோன்ற ஒளியை
வீசவும், இருபுறமும் அசை பொன் கவரி - இரண்டு பக்கத்திலும் வீசுகிற
அழகிய சாமரமும், குளிர் நிலவு எறிக்க - குளிர்ந்த சந்திரகாந்திபோன்ற
காந்தியை வீசவும், எறி கை படை - (பகைவர்மேற்) பிரயோகித்தற்கு உரிய
கையிலுள்ள ஆயுதங்கள், வெயில் எறிக்க - சூரியகாந்திபோன்ற காந்தியை
வீசவும், அணிமுடியுடன் மணிபணிகள் பல - அழகிய கிரீடத்தோடு
இரத்தினங்கள் பதித்த பிற ஆபரணங்கள் அநேகமும், வெயில் எறிக்க-சூரிய
காந்திபோன்ற காந்தியை வீசவும், உடனே - (இவற்றோடு) கூட, இடை இடை
எடுத்த கொடி நிரை - நடுவிலே நடுவிலே தூக்கிப்பிடிக்கப்பட்ட துவச
வரிசைகள், இருள் எறிக்க - இருளைச் செய்யவும், எழு துகள் -
(சேனைகளால்) எழுப்பப்பட்ட தூளிகளும், இருள் எறிக்க - இருளைச்
செய்யவும், அவனிபர்எனை பலரும் - அரசர்களெல்லோரும், எழு பார்
அடைய ஒர் தினத்தின் வலம்வரு திகிரி ஒத்தனர்கள் - ஏழுதீவுகளாகிய
பூமிமுழுவதையும் ஒருநாளிலே பிரதக்ஷிணமாகச் சுற்றி வருகிற
காலசக்கரத்தைப்போன்றார்கள்; (எ - று.)

     காலம்சக்கரம்போல் மாறிமாறிச் சுற்றிவருதல்பற்றி, காலசக்கர
மெனப்படும்.  பொற் கவரி - பொற்காம்பையுடைய சாமரமென்றுமாம்;
பொன் -கருவியாகுபெயர்.  கவரி - சமரீயென்பதன் திரிபு: இப்பெண்மானின்
பெயர்,அதன்  வால்மயிரினாற் செய்யப்பட்டதொரு இராசசின்னத்துக்கு
இருமடியாகுபெயர்.  'உடனே' என்றது, நிலவு வெயில்களுக்கும் இருளுக்கும்
உள்ள மாறுபாட்டை நன்கு விளக்க வந்தது.  எழு பார் - ஜம்பு, பிலட்சம்,
குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம்என்பன.        (387)

27.- இது - வாத்தியகோஷவரணனை.

முழவுமுதலெற்றுவன கடிபடுபணைக்கருவி முழுமணிமுதற்கருவி
                                             பைங்,
குழன்முதலமைத்தபல வகைபடுதுளைக்கருவி குலவளை நரப்பு
                                           நிரையா,
லுழைமுதலெழுப்புவனவிசைபடுமிசைக்கருவி யுழையுழை
                                    யதிர்த்தவுடனே,
யெழுகடல் கொதித்ததெனவெழுபுவிமறித்ததெனவெழுமுகிலிடித்த
                                          தெனவே.

     (இ -ள்.) முழவு முதல் - மத்தளம் முதலாக, எற்றுவன -
அடிக்கப்படுவனவான, கடிபடு - ஒலி மிக்க, பணை கருவி - பறைகளாகிய
தோற்கருவிகளும், முழு மணி முதல் - பெரிய அடிக்கும் மணி முதலான,
கருவி - கஞ்சக்கருவிகளும், பைங்குழல் முதல் - பசுமையான வேய்ங்குழல்
முதலாக, அமைத்த - ஒழுங்காகச்செய்யப்பட்ட, பலவகை படு -
அநேகவகைப்பட்ட, துளை கருவி - துளையுடைக் கருவிகளும், குலம் வளை-
சிறந்த சங்குகளும், நரம்புநிரையால் - நரம்புகளின் வரிசையால், உழை முதல்
எழுப்புவன இசை படும் - உழை முதலாக எழுப்பப்படுகிற (ஏழுவகைச்)
சுரங்கள் பொருந்தின, இசை