பக்கம் எண் :

352பாரதம்உத்தியோக பருவம்

பது புறக்குஎன அத்துச்சாரியையின்றிவந்தது.  'பிறக்கிடுவது, என்ற
பாடத்துக்குப் பிறகு இடுவது என்பது தன்னொற்றிரட்டிற்று என்னலாம்: இனி
'பிறக்கு' என ஒரு தனிச் சொல்லுங் கொள்ளலாம்: 'புறத்திடுவது' என்றும்
பாடம்.  கருடனென்னும் சொல்லுக்கு - (பெரிய) சிறகுகளாற் பறப்பவனென்று
பொருள்.                                    (389)

29.-இது -சேனையாலெழுப்பப்பட்டதூளியின் வருணனை.

உயர்முறைமைதப்புமவர்குடைநிழலிலிற்றையளவுளகுறையகற்றி
                                         யினிநா,
னியல்புடைநெறித்தருமனொருகுடைநிழற்றவவனிடையினிலிருக்
                                       குவனெனா,
வியனதிமுழுப்புனலின்முழுகிவருதற்கவனிமிசையுற
                                  நடப்பதெனவே, 
பயில்படைநடக்கவதன்முகடுறநிறைத்தரியபகலையுமறைத்ததுகளே.

     (இ -ள்.) 'உயர் முறைமை தப்புமவர் - சிறந்த இராசநீதி
தவறுந்தன்மையுள்ள துரியோதனாதியரது, குடை நிழலில் - அரசாட்
சியின்கீழே, இற்றை அளவு உள - இன்றைத்தினமளவும் (நான்) இருந்த குறை
- குற்றத்தை, அகற்றி - ஒழித்து, இனி -, நான்-, இயல்பு உடைய  நெறி
தருமன்- முறைமை தவறாமலுள்ள நீதிமார்க்கத்தையுடைய யுதிட்டிரன், ஒரு
குடை நிழற்ற - ஒப்பற்ற அரசாட்சியைச் செய்ய, அவன் இடையினில் -
அவனது குடை நிழலினிடத்திலே, இருக்குவன் - இருப்பேன்', எனா - என்று
எண்ணி, அவனி - பூமியானது, வியன் நதி முழு புனலில் முழுகிவருவதற்கு-
பெரிய தேவகங்கா நதியினது மிக்கநீரிலே நீராடிவரும்பொருட்டு, மிசை உற-
மேலேபொருந்த [மேல்நோக்கி யென்றபடி], நடப்பது என - செல்வதுபோல,
பயில்படை நடக்க - (போரைப்) பயில்கிற[பழகிய] சேனைகள் செல்லுகையில்,
துகள் - புழுதிகள், அதன் முகடு உற நிறைத்து - அவ்வாகாயத்தின் மேலி
டத்தை அளாவ மிக்கெழுந்து, அரி பகலையும் மறைத்த - மறைப்பதற்
கருமையான சூரியனொளியையும் மறைத்து விட்டன; (எ - று.)

    சேனைகள் ஒருங்கே பூமியின்மேல் நடத்தலால் மேலெழும்பின
புழுதிகள்இயல்பாக ஆகாயத்தைநோக்கிச் செல்லுதலை,
துரியோதனனாளுகையின் கீழ்தான் இருந்த தோஷத்தை நிவிருத்திசெய்தற்கு
ஆகாசகங்காநதியில்நீராடும்பொருட்டுப் பூமிதேவி மேலே சென்றதாகக்
கற்பித்துக் கூறினதனால்,இதுவும் ஏதுத்தற்குறிப்பேற்றவணி.  வியனென்னும்
உரிச்சொல் விசாலமென்னும்பொருளுணர்த்தும்.  "வியனென் கிளவி
யகலப்பொருட்டே": வியல் எனப்பதம் பிரித்தாலும் பொருள் இதுவே; இனி,
வியனதி, வியத் - வானத்திலுள்ள,நதி - ஆகாசகங்காநதி யென்க.   (390)

30.- இது - இருதிறத்துச்சேனைத்தொகை வருணனை.

பொருபடைகொடிப்படை புறப்படுபெரும்படைபுகுந்து குருபூமியுறவே,
யிரபடையுமொத்துடனெருங்கினசுராசுரரெதிர்ந்துபொருபூசலெனவே,
யொருபடையெனப்படமொராயிரமுநொந்துரகனுரநெரியவேழுலகமும்,
வருபடைநிலத்தினிடை வந்தளவில் வேறுததிவைய
                                      மெனதாய்முடியுமே.