எத்தனைநாள்பிடிக்கும்? என - என்றுவினவ, பண் அளிநெருக்கு ஒழிய மாதர் இரு கண் அளி படாத தொடைமீளி - இசைபாடுகின்ற வண்டுகள் நெருங்கிமொய்த்தல்உளதேயன்றி மகளிரது இரண்டு கண்களாகிய வண்டுகள் வந்து பொருந்துதலில்லாத மாலையையுடைய வீரனான வீடுமன், பகர்வான் - (அதற்கு உத்தரம்) கூறுவான்; (எ - று.) - அதனை மேற்கவியிற் காண்க. யோசனை, காதம் என்பன ஒரு பொருளன. பகீரதி - பகீரதனாற் கொணரப்பட்ட தென்று பொருள்; பகீரதன் - சூரியகுலத்துப் பிரசித்தனான ஓரரசன்; இவன், கபில முனிவரது சாபத்தாற் சாம்பரானவரும் சகரசக்கரவர்த்திகுமாரரும் தனது பாட்டனுக்குச் சிற்றப்பன்மாருமாகிற அறுபதினாயிரவரைநற்கதி பெறுவித்தற் பொருட்டுத் தேவலோகத்திலிருந்து ஆகாச கங்காநதியைக்கீழுலகத்துக்குக் கொணர்ந்தானென வரலாறு காண்க. படையாவையும் என்றது,இருதிறத்துச் சேனைகளையும் என்றபடி. "பண்ணளி நெருக்கொழிய மாதரிருகண்ணளிபடாத தொடை மீளி" என்பதற்கு, பெண்களுக்குச் சிறிதும்வசப்படாமல் நித்திய பிரமசாரியாகவே நின்ற சூரனென்று கருத்து: மிக்கவைராக்கியமுடையவனை மங்கையர் காதலித்து நோக்குதலுஞ் செய்யார். தொடை என்றது - அடையாளப் பூமாலை, போர்ப் பூமாலை என்றஇரண்டையும். (392) 32.-வீடுமன் கூறும் மறுமொழி. ஒருபகலில்யான்மலைவன்முப்பகலிலேமலைவனுபநிடதவிற்கை முனியும், வருபகலொரைந்தின்மலைவன்பரிதிமைந்தன்முனி மைந்தனொருநாழிகையினிற், பொருபடையடங்கமலையும்புவியும்வானொடுபுரந்தர னிருந்தவுலகும், வெருவரமுனைந்தொருகணத்தினிடையேமலைவன் வில்விசயனென்றனனரோ. |
(இ -ள்.) 'பொரு படை அடங்க - போர் செய்யவல்ல இச்சேனைகள் முழுவதையும், யான் - நான், ஒரு பகலில் - ஒரு தினத்திலே, மலைவன் - போர் செய்து கொல்லவல்லேன்; உபநிடதம் - வேதாந்தத்தை யறிந்த, வில் கை- வில்லையேந்திய கையையுடைய, முனியும் - துரோணாசாரியனும், முப் பகலிலே - மூன்று தினத்திலே, மலைவன் - போர்செய்து கொல்லவல்லான்; பரிதி மைந்தன் - சூரியபுத்திரனான கர்ணன், வரு பகல் ஒர் ஐந்தில் - அடுத்துவருகிற ஒரு அஞ்சுதினத்திலே, மலைவன்-; முனி மைந்தன் - துரோணபுத்திரனான அசுவத்தாமன், ஒரு நாழிகையினில் - ஒரு நாழிகைப்பொழுதிலே, மலையும் - போர்செய்து கொல்லவல்லான்; வில் விசயன் - (காண்டீவமென்னும்) வில்லையேந்திய அருச்சுனனோ எனின், புவியும் - பூலோகத்து உயிர்களும், வானொடு - ஆகாயத்திற் சஞ்சரிக்கும் பிராணிகளும், புரந்தரன் இருந்த உலகும் - இந்திரன் வீற்றிருக்கிற சுவர்க்கலோகத்தார்களும், வெருவர - அஞ்சும்படி, முனைந்து - எதிர்த்து, ஒருகணத்தின் இடையே - ஒருக்ஷணப்பொழுதினுள்ளே, மலைவன் -;' என்றனன் -என்று (வீடுமன் துரியோதனனுக்குக்) கூறினான்; (எ - று.) - அரோ - ஈற்றசை. |