டார். செய்வாம்- தானொருவன் கடவுளை யறிந்து அன்பு கூர்ந்து வணங்கி அப்பயனைத் தான்மாத்திரமே யடைதலினும், சிருஷ்டி தொடங்கித் தன்கோத்திரத்தாரையுந் தன்னொடுகூட்டி வணங்கி அவர்க்கும் அப்பயனை யடைவித்தலே சிறந்ததெனக் கருதி அவர்களை உளப்படுத்திய தன்மைப்பன்மை யென்று கொள்ளலாம்: இனி தமது மாணாக்கர்களையும், இந்நூல் படிப்பவர்களையுங் கூட்டிக்கூறியது என்பாருமுளர். உத்தம அங்கமாகிய தலையிலுள்ள கூந்தலின் சிறப்பை எடுத்துக்கூறியது, மற்றை அங்கங்களின் சிறப்புக்கும் உபலக்ஷணம். அசோதைகண்களிப்ப நீடுதராதலம் விளங்கப் போந்து என அந்வயித்து, யசோதைப்பிராட்டியின் கண்கள் களிப்பையடையவும், நீண்டபூமி முழுவதும் பாரந்தீர்ந்து விளக்கமடையவுங் கண்ணனாய் அவதரித்து என்றும் உரைக்கலாகும். இதுமுதல்இச்சருக்கம் முடிகிறவரையில் இருபதுகவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள். (22) அப்போது துரியோதனன் மந்திரிமாரோடுஆலோசனை செய்தல். 2. | புரோகிதன் றூது வந்து போனபின்புயங்க கேது விரோசனன்சுதனைக்கங்காசுதனொடும்வெகுளிமாற்றித் துரோணனைமுதலாமிக்கதொன்மதியமைச்சரோடுஞ் சரோருகசதனமென்னத்தனித்திருந்தெண்ணினானே. |
(இ -ள்.) புரோகிதன் - (உலூகனென்னும்) புரோகிதன், தூது வந்துபோனபின் - (பாண்டவர்களிடத்தினின்று) தூதனாய்வந்து சென்ற பின்பு,- புயங்க கேது - பாம்புக்கொடியையுடைய துரியோதனன் - விரோசனன் சுதனை - சூரியனது குமாரனான கர்ணனையும், கங்கா சுதனொடும் - கங்கையின் குமாரனான வீடுமனையும், வெகுளி மாற்றி - கோபந்தணியச் செய்து - (பின்பு) - துரோணனை முதல் ஆம் மிக்க தொல் மதி அமைச்சரோடும் - துரோணாசாரியனை முதலாகவுடைய மிகுந்த பழமையான நல்லறிவையுடைய மந்திரிகளுடனே, சரோருக சதனம் என்ன - தாமரையிலைபோல, தனித்து இருந்து - தனியனாயிருந்து, எண்ணினான் - ஆலோசித்தான்;(எ - று.) உலூகன்பாண்டவதூதனாகி வந்து போனபின்பு, துரியோதனன் பீஷ்மனுக்கும் கர்ணனுக்கும் உண்டான கோபத்தைத் தணிப்பித்து, துரோணர் முதலிய அமைச்சரோடு தனித்திருந்து ஆலோசித்தன னென்பதாம், 'சரோருகசதனமென்னத் தனித்திருந்து' என்பதற்கு - தாமரையிலை நிர்மலமான பல நீர்த்துளிகளோடு கூடியிருந்தாலும் அவற்றுடன் தான் கலவாமலே யிருத்தல்போல, துரியோதனன் துரோணன் முதலிய குற்றமற்ற பல பெரியோருடன் கூடியிருந்தாலும் அவர்களோடு மனங்கலவாத தன்மையுடையவன் என்று கருத்துக் கூறுவர். சதநம் - இனி, இலக்கு |