பக்கம் எண் :

வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கம் 43

தென்றும்பொருள்.  சித் சேதநம் என்பனவும், அசித்அசேதநம் என்பனவும் -
ஒருபொருளன.  சித்து - ஆத்மா, அசித்து - தேகம்.  (28)

ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதுபள்ளிகொண்டிருத்தல்.

8.

வந்தமையறிந்துகொற்றவாயிலோர்தம்மைநோக்கி
அந்தன்மாமதலைவந்தாலறிவியாதழைமினென்று
சந்திரனொடுங்கிநிற்பத்தபனனேசரிக்குமாறு
பந்தனையிலாதான்யோகத்துயில்வரப்பள்ளிகொண்டான்.

     (இ -ள்.) பந்தனை இலாதான் - (இயல்பாகவே) பாசங்களின்
தொடர்ச்சியில்லாத கண்ணபிரான் - வந்தமை அறிந்து - (துரியோதனன்
அருச்சுனனுக்கு முன்பு துவாரகைக்குள்) வந்து சேர்ந்துவிட்ட செய்தியை (த்
தனது ஞானதிருஷ்டியால்) உணர்ந்து, கொற்றம் வாயிலோர் தம்மை நோக்கி -
வெற்றி விளங்கும் (தனது அரண்மனை) வாயில் காவலாளரைப் பார்த்து,
'அந்தன் மாமதலை வந்தால் - பிறவிக்குருடனான திருதராட்டிரனது மூத்த
குமாரனான துரியோதனன் இங்கு வந்தால், அறிவியாது - (எனக்கு முன்பு
செய்தி) தெரிவிக்காமலே, அழைமின் - (அவனை உள்ளே) வரவிடுங்கள்,'
என்று - என்று கட்டளையிட்டு, சந்திரன் ஒடுங்கி நிற்ப தபனனே சரிக்கும்
ஆறு - சந்திரகலை குறைந்து நிற்கச் சூரியகலையே மிகுதியாக உலாவும்படி,
யோகம் துயில் வர - (தனக்கு வழக்கமான) யோகநித்திரை வந்து பொருந்த,
பள்ளிகொண்டான் - சயனித்துக்கொண்டான்; (எ - று.)

     மூக்கின்இடப்பக்கச் சுவாசத்துக்குச் சந்திரகலை யென்றும், வலப்பக்கச்
சுவாசத்துக்குச் சூரியகலை யென்றும் பெயராதலால், சந்திரன், தபனன் என்பன
- அக்கலைகளை உணர்த்தின; சாய்ந்த பக்கத்துச் சுவாசம் அதிகப்பட்டும்,
மற்றைப் பக்கத்துச் சுவாசம் குறைந்தும் நிற்குமாதலால், வலப்பக்கம்
ஒருக்கணித்துச் சாய்ந்து படுத்தன னென்பார், 'சந்திரன் ஒடுங்கி நிற்பத்
தபனனே சரிக்குமாறு' என்றார்:  திருமால் பள்ளிகொள்கையில் வலப்புறமாக
ஒருக்கணித்திருத்தல் வழக்கமாதலை "குடதிசை முடியை வைத்துக் குணதிசை
பாதம் நீட்டி, வடதிசை பின்புகாட்டித் தென்திசையிலங்கை நோக்கிக், கடல்நிறக்
கடவுளெந்தை அரவணைத்துயிலுமா கண்டு, உடலெனக் குருகுமாலோ
என்செய்கே னுலகத்திரே" என்கிற திருமாலைப் பாசுரங் கொண்டும்,
"தாமக்கடையுகத்துள்ளே விழுங்கித்தரித்த பழஞ், சேமப் புவனஞ்
செரிக்குமென்றே சிவன்மாமுடிக்கு, நாமப்புனல்தந்த பொற்றா ளரங்கர்
நலஞ்சிறந்த, வாமத்திருக்கரமேலாகவே கண்வளர்வதுவே" என்னுந்
திருவரங்கத்துமாலைச் செய்யுளாலும் அறிக.  சந்திரகலை இடைகலை என்பன
- இடமூக்கின் நாடிக்கும், சூரியகலை, பிங்கலை என்பன - வலமூக்கின்
நாடிக்கும் பெயராம்.  இனி ஒளியிற்குறைவுள்ள சந்திரன் ஒடுங்கி நிற்க
ஒளியில் மிகுந்த சூரியனே சஞ்சரிக்கும்படி என்றது - ஆற்றலிற் குறைவுள்ள
துரியோதனன் அழிவுபெற, ஆற்றலில் மேம்பட்ட அருச்சுனனே வென்று
வாழும்படி திருவுள்ளத்திற்கருதி என்ற பொருளைப் பிறிதுமொழிதலென்னும்
அணியின்