பக்கம் எண் :

48பாரதம்உத்தியோக பருவம்

ஒருபொருட்பன்மொழியுமாம். மரகதம் - பச்சை இரத்தினம்: பசுமை கருமை
நீலம் இந்நிறங்களுக்கு வேறுபாடு கருதாது ஒற்றுமை நயம்படக்கூறுதல்
கவிமரபாதலால், 'மரகதவண்ணன்' என்றார்; "பச்சைமாமலைபோல் மேனி"
என்றார் தொண்டரடிப்பொடியாழ்வாரும்.                        (33)

ஸ்ரீ கிருஷ்ணன் தான் பாண்டவர்கட்கேபோர்த்துணையாக
வேண்டு மென்றல்.

13.

உற்றமருதவிசெய்வானுதிட்டிரன்றனக்குமுன்னே
சொற்றனமாங்கணீங்குந்துயிலுணர்பொழுதத்தின்று
விற்றிறல்விசயன்முந்தவிழிக்கிலக்கானானென்று
பற்றறத்துணிந்துசொன்னான்பாண்டவர்சகாயனானான்.

     (இ -ள்.) பாண்டவர் சகாயன் ஆனான் - பாண்டவர்களுக்குத் துணை
செய்பவனான கண்ணபிரான்,- (துரியோதனனைநோக்கி), 'அமர்உற்று உதவி
செய்வான் - போரிற் பொருந்தி உதவிசெய்யும்படி, உதிட்டிரன் தனக்கு -
தருமபுத்திரனுக்கு, ஆங்கண் - அவ்விடத்தில் (உபப்பிலாவியத்தில்) முன்னே
சொற்றனம் - முன்னமே கூறினோம்; (தருமபுத்திரனுக்குப் போர்த்துணை
செய்வதாக வாக்குத்தத்தஞ் செய்துவிட்டோ மென்றபடி;) ஈங்கும் -
இவ்விடத்திலும், இன்று - இப்பொழுது, துயில் உணர் பொழுதத்து - தூக்கம்
விழிக்கும்பொழுதில் வில் திறல் விசயன் - வில்லில் வலிமையையுடைய
அருச்சுனனே, முந்த - முற்பட, விழிக்கு இலக்கு ஆனான் - (என்)
கண்ணெதிரிற் பட்டான், என்று-, பற்று அற - (தான் படைத்துணையாதலில்
துரியோதனனுக்கு இருந்த) ஆசை நீங்க, துணிந்து சொன்னான் - உறுதியாகச்
சொல்லிவிட்டான்; (எ - று.)

     'பற்றறத்துணிந்துசொன்னான் பாண்டவர் சகாயனானான்' என்றது -
அருச்சுனனிடம் விருப்பமும் துரியோதனனிடம் வெறுப்புமாகப்
பட்சபாதமில்லாமல் தக்க காரணம்பற்றி நடுவுநிலைமையாக நடத்துபவன்போல
இங்ஙனம் நிச்சயித்துச் சொல்லிப் பாண்டவர்க்கே துணைவனானான்
என்றவாறுமாம்.  யுதிஷ்டிரன் - போரில் ஸ்திரமாக இருப்பவன்.        (34)

ஸ்ரீகிருஷ்ணன் படையைத்தொடேனென்றுதுரியோதனனுக்கு
அவன் வேண்டுகோளின்படி வாக்களித்து, படை தொடாத
என்னால் யாது பயனென்று அருச்சுனனிடம் வினாவுதல்.

14.

முடைகமழ்முல்லைமாலைமுடியவன்றன்னைப்போரிற்
படையெடாதொழிதியென்றுபன்னகதுவசன்வேண்ட
நெடியமாமுகிலுநேர்ந்துநினக்கினிவிசயபோரில்
அடுபடையின்றிச் செய்யுமாண்மையென்னறைதியென்றான்.

     (இ -ள்.) (அதுகேட்டு), பன்னக துவசன் - பாம்புக்கொடியை யுடைய
துரியோதனன், முடை கமழ் முல்லை மாலை முடியவன்