தன்னை - முடைநாற்றம் வீசுகின்ற முல்லைப்பூமாலையைச் சூடிய மயிர் முடியையுடைய கண்ணபிரானை, 'போரில் படை எடாது ஒழிதி என்று - யுத்தகளத்தில் (பாண்டவர் பக்கத்தில்) ஆயுதத்தையெடாமல் ஒழிவாயாக' என்று சொல்லி, வேண்ட - பிரார்த்திக்க - நெடிய மா முகிலும் - பெரிய கரிய மேகம் போன்ற கண்ணனும், நேர்ந்து - (அவ்வேண்டுகோளுக்கு) உடன்பட்டு - (அருச்சுனனை நோக்கி), 'விசய - அருச்சுனனே! அடுபடை இன்றி - கொல்லவல்ல ஆயுதத்தை யெடுத்தலில்லாமல், போரில் - யுத்தத்தில், நினக்கு - உனக்கு, (உதவியாக), இனி செய்யும் - இனிமேல் (நான்) செய்யத்தக்க, ஆண்மை - ஆண்தொழில், என் - யாது? அறைதி - கூறுவாய்' என்றான் - என்று சொன்னான்; (எ - று.) 'ஒழிமினென்று' எனப் பிரதிபேதம். முடைகமழ் என்ற அடைமொழி, கண்ணனுக்கு உரியது; முடை - நெய்க்கந்தம்: இடையர்க்கு உரிய இதனை, அவ்விடையர்சேரியில் வளர்ந்த கண்ணனது அடியார்க்கெளிமையை [சௌலப்பியத்தை] விளக்கும்பொருட்டு அக்கண்ணனுக்கு அடைமொழியாகக் கூறுதல், கவி மரபு; கண்ணன் திருவாய்ப்பாடியாகிய முல்லை நிலத்தில் வளர்ந்தவனாதலாலும், அந்நிலத்துக்கு முல்லை உரியதாதலாலும். "மாயோன் மேய காடுறை யுலகம்" என்றபடி அந்நிலத்துக்கு உரிய தெய்வம் கண்ணனாதலாலும், 'முடைகமழ் முல்லைமாலை முடியவன்' என்றது. பந்நகம் என்பதற்கு - கால்களால் நடவாததென்றும். வளைவாகச்செல்வதென்றும் பொருள்: நெடிய - முன்னே திரிவிக்கிரமாவதார காலத்தில் நீண்ட, அல்லது பெருமைக் குணமுடைய என்றுங்கொள்ளலாம். (35) அருச்சுனனது உத்தரம். 15. | செருமலியாழியங்கைச்செழுஞ்சுடர்நின்றென்றேரிற் பொருபரிதூண்டினிந்தப்பூதலத்தரசரொன்றோ வெருவருமியக்கர் விண்ணோர்விஞ்சையரெனினுமென்கை வரிசிலைகுழையவாங்கிமணித்தலைதுமிப்பனென்றான். |
(இ -ள்.) (அதற்கு அருச்சுனன்), 'செரு - போர்த் தொழிலில், மலி - மிக்குவிளங்குகிற, ஆழி - சக்கராயுதத்தையேந்திய, அம் - அழகிய, கை - வலத்திருக்கையையுடைய, செழுசுடர் - (எல்லா வொளிகளினுஞ்) சிறந்த ஒளி வடிவமான எம்பெருமானே! (நீ), என் தேரில் நின்று - எனது இரதத்தின்மீது (முன்புறத்தில்) எழுந்தருளி, பொரு பரி தூண்டின் - போர் செய்தற்கு உரிய குதிரைகளைச் செலுத்தினால், இந்த பூதலத்து அரசர் ஒன்றோ - இந்த நிலவுலகத்தினிடத்துள்ள (மனிதர்களான) அரசர்கள் மாத்திரமோ? (மற்றை எவ்வுலகத்திலுமுள்ள), வெருவரும் - (கண்டவர்) 'அஞ்சத்தக்க, இயக்கர் - யக்ஷர்களும், விண்ணோர் - தேவர்களும், விஞ்சையர் - வித்தியாதரர்களும், எனினும் - (எதிர்ப்பவர்) எவரானாலும், என் கை வரிசிலை - எனது கையிலுள்ள கட்டமைந்தவில்லை, குழைய வாங்கி - வளையும்படி வளைத்து, மணி தலை துமிப்பன் - (அவர் |