பக்கம் எண் :

வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கம் 53

வர்மா -யதுகுலத்தில் இருதிகன்என்பவனது குமாரன்; இவனைக் கிருஷ்ணன்
துரியோதனனுக்குப் படைத்துணையாகத் தான் அனுப்பும் யாதவசேனைக்குத்
தலைவனாக்கி அனுப்புகிறான்.  வாய்மை - வாயின்தன்மை; அது - வாயினாற்
சொல்லுஞ் சொல்லுக்குக் கருவியாகுபெயர்.  மாயவன் என்பதற்கு -
மாயைபோலக் கருநிறமுடையவனென்றும், வியக்கத்தக்க குணந்தொழில்களை
யுடையவனென்றுங் கருத்து உரைப்பர்.  வணங்காமுடிமன்னனாதலால், விநய
மொன்றுங் கருதலானான்.  இனி, வினயமொன்றும் கருதலான் என்பதற்கு -
கண்ணனது சூதுசிறிதையும் அறியாதவனாய் என்றும் உரைக்கலாம்; வினயம் -
வஞ்சனை.                                                 (39)

துரியோதனன் பலராமனையாதவருடன் போர்த்துணையாக வருமாறு அழைத்துவிட்டுச் செல்லுதல்.

19.

கண்ணனங்கருளிச்செய்தகட்டுரைப்படியேசங்க
வண்ணனுக்கிளவல்சொன்னமாற்றமுமரசன்சாற்றி
எண்ணருந்தொகைகொள்சேனையாதவகுமரரோடே
அண்ணலேவருகென்றோதியத்தினாபுரிபுக்கானே.

     (இ -ள்.) (கண்டு), அரசன் - துரியோதனராசன், கண்ணன் அங்கு
அருளிச்செய்த கட்டுரை படியே - கிருஷ்ணமூர்த்தி அப்பொழுது
சொல்லியருளின உறுதிச்சொல்லின்படியே, - சங்கம் வண்ணனுக்கு -
சங்குபோல வெளுத்த நிறத்தையுடைய பலராமனுக்கு, இளவல் சொன்ன
மாற்றமும் சாற்றி - (அவன்) தம்பியான கண்ணன் சொன்னவார்த்தையைச்
சொல்லுதலுஞ் செய்து, 'அண்ணலே - பெருமையிற்சிறந்தவனே! எண் அரு
தொகைகொள் சேனை யாதவ குமரரோடே - எண்ணியளவிடுதற் கருமையான
பெருந்தொகையைக் கொண்ட யாதவசேனையோடும் யாதவகுமாரர்களோடும்,
வருக - (நீ என் பக்கல் போர்த்துணையாக) வருவாயாக', என்று ஓதி - என்று
சொல்லி, அத்தினாபுரி புக்கான் - (தனது) அஸ்தினாபுரியைச் சேர்ந்தான்;
(எ -று.)

     பெரியோர்கள்செய்யும் ஒவ்வொரு காரியமும் அருளோடு கூடிய
தென்னுங் கருத்தால், இங்கு 'அருளிச்செய்த' என்றது;  இனி துரியோதனன்
பெருங்கூட்டத்தைத் தனக்குத் துணையாக அனுப்புவதைக் கண்ணன்
அருளோடு செய்ததாகக் கருதினானென்பார், 'அருளிச்செய்த' என்றாருமாம்.
கட்டுரையென்றது, உள்ளே யடங்கிய கருத்து வெளித்தோன்றாதபடி நன்றாக
அமைத்துச் சொல்லுஞ்சொல் என்றபடி.  யாதவகுமரர் - கண்ணனுக்குப்
பதினாயிரங் கோபஸ்திரீகளிடம் பிறந்த நாராயணகோபாலர்களும் பிறருமாம்
படைத்துணையாக வரும்படி வேண்டுகின்றனனாதலின் அண்ணலேயென
உயர்த்திக் கூறினான்.  அங்கு - அவ்விடத்தில் என்றுமாம்.  குமாரனென்னும்
சொல்லுக்கு மன்மதனையுங் குற்சித ரூபமுடையவனாக்க வல்ல கட்டழகுடையவ
னென்று பொருள்.                                           (40)