இங்ஙனம்,கொடியவர்களைக்கொன்று அடியவர்களை யளித்தருளுகிற ஆதிதேவன் விஷயமான வணக்கங் கூறியதனால், கவி தாம் எடுத்துக்கொண்ட காரியம் இடையூறின்றி இனிதுமுடியுமென்பது கருத்து. இங்கு ஆகி என்றும், ஆய் என்றும் வந்தவை - அந்தந்த வடிவமாகப் பிறந்தபொழுது தமது தெய்வத்தன்மை மேலிடாமல், அந்தந்தப் பிறப்புக்கு உரிய உருவம் குணம் செயல்களைக் கொண்டுள்ளமையைத் தெரிவிக்குமென்பது, சம்பிரதாயம்; இதனைத் திருவிருத்தத்தில் "உயிரளிப்பான்" "எந்நின்றயோனியுமாய்ப் பிறந்தாயிமையோர் தலைவா" என்றவிடத்து 'ஆய்' என்றதன் வியாக்கியானங்களைக்கொண்டு அறிக. இப்பாட்டுக்கு 'நான்' என்னுந் தோன்றா எழுவாய் வருவிக்க. இப்பாட்டு மொழிமாற்று முதலியன இன்மையால், யாற்றுநீர்ப்பொருள்கோள். "மீனாமை கோல நெடுநரசிங்கமாகி நிலம்விரகாலளந்த குறளாய், ஆனாது சீறுமழு வல்வில்லும் வெல்லுமுனையலமுற்ற செங்கையவராய், வானாடர் வந்துதொழமண்ணாடர்யாவரையுமடிவிக்க வந்தவடிவாய், நானாவிதங் கொள் பரியாளாகி நின்றருளு நாராயணாயநமவே" என்பர், மேல் சல்லியபருவத்தும். இதுமுதல் இச்சருக்கம் முடிகிறவரையில் இருபத்தொரு கவிகள்- பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும், ஆறாஞ்சீர் மாங்காய்ச்சீரும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். (1) தூதனுப்பித் துரியோதனன்கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கண்ணன் கூறுதல். 2. | வல்லினாலவன்கொண்டமண்மீளவும்வல்லினாற்கொளலன்றி வில்லினாலமர்மலைந்துகொள்ளுதுமெனல்வேத்துநீதியதன்றால் சொல்லினாலொருதூதினிலறியலாஞ்சுயோதனனினைவென்று கல்லினால்வருகன்முகில்விலக்கியகரியமாமுகில்சொன்னான். |
(இ -ள்.) 'வல்லினால் - சூதாட்டத்தினால், அவன் - துரியோதனன், கொண்ட - கவர்ந்துகொண்ட, மண் - இராச்சியத்தை, மீளவும் - மறுபடியும், வல்லினால் - அச்சூதாட்டத்தினாலே, கொளல் அன்றி - சயித்துப்பெறுவது தகுதியேயல்லாமல், வில்லினால் - வில்லைக்கொண்டு, அமர் மலைந்து - போரைச்செய்து, கொள்ளுதும் - பெறுவோம், எனல்-என்று நிச்சயிப்பது, வேந்து நீதியது அன்று - அரச நீதியாகாது; சுயோதனன் நினைவு - (இவ்விஷயத்தில்) துரியோதனனது எண்ணத்தை, சொல்லினால் - (அவன் சொல்லுஞ்) சொல்லின்மூலமாய், ஒரு தூதினில் - ஒரு தூதனைக் கொண்டு, அறியலாம் - தெரிந்துகொள்ளலாம், என்று -, வரு கல் முகில் கல்லினால் விலக்கிய கரிய மா முகில் - (இந்திரனேவலால்) வந்த கல் மழையை (க் கோவர்த்தனமென்னும்) மலையினால் தடுத்த கருநிறமுடைய அழகிய மேகம்போன்ற கண்ணன், சொன்னான் - (அப் |