மெய் பயன் உற்றபின் - (அம்முனிவன்)ஆசீர்வாதங் கூறுதலாகிய உண்மையான பிரயோசனத்தைத் (தாங்கள்) அடைந்தவுடனே துன்று பொன் தவிசினில் இருத்த - தகுந்ததொரு பொன்மயமான ஆசனத்தின் மேலே (அம்முனிவனை) எழுந்தருளச்செய்ய, இருந்து - (அவன் அச் சுவர்ணபீடத்தில்) வீற்றிருந்து, சில் உரை சொல்லுவான் - சில வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ - று.)- அவற்றை மேல் ஐந்து கவிகளிற் காண்க. சென்றஅம்முனி செலவு, செல்லுதல் - இங்கு தன்மைக்கு வந்தது. சென்னி தாள் ஒன்ற வைத்து - தமது சிரசின்மேலே அவன் பாதத்தைப் பொருந்த வைத்து, வணங்கி - சாஷ்டாங்கமாகத் தண்டன் சமர்ப்பித்து, நிறைமொழி மாந்தரான முனிவரது சொல் தவறாது பயன் தருமாதலால், 'ஆசியுரைக்கும் மெய்ப்பயன்' என்றது. பொன் துன்று தவிசு என மாற இயைத்து, பொன்னினாலமைந்த ஆசன மெனினுமாம். சில் உரை - குளிர்ச்சியான வார்த்தை என்றலும் ஒன்று. ஆசியுரைக்கு மெய்ப்பயன் உற்றபின் - நிச்சயமாய்ப் பலிக்கும்படி அம்முனிவனால் ஆசீர்வசனஞ் சொல்லப்பெற்ற பின்பு என்க. (46) இதுமுதல் ஏழு கவிகள் - ஒரு தொடர்: ஐந்துகவிகள் - சஞ்சய முனிவன் வார்த்தை. 6. | புடவியாளுதல்விட்டுநன்னெறிபுரியுமாதவர்தம்மினீர் அடவியாளவும்வல்லிராயினிராதலானலமானதே மடவியார்நிலையற்றசெல்வமகிழ்ந்துவாழ்தினமாறினால் விடவியாரழலுற்றெனப்பெருநரகிலாழ்வுறவீழ்வரால். |
(இ - ள்.) நீர் - நீங்கள், புடவிஆளுதல் விட்டு - (அரசர்களாய்ப்) பூலோகத்தை அரசாள்வதை யொழித்து, நல் நெறி புரியும் மாதவர் தம்மின் - நல்ல கதியை (ப் பெற) விரும்புகிற மிக்கதவத்தையுடைய முனிவர்கள்போல, அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் - காட்டை இடமாகக்கொண்டு வசிக்கவும் வல்லவரானீர்கள்; ஆதலால் - ஆகையால், நலம் ஆனதே - (உங்களுக்கு இப்படியானது) நன்மையைத்தருவதான காரியமே; மடவியார் - அறியாமையையுடைய கீழ் மக்களோ வெனின், - நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து - (எவரிடத்தும்) நிலை பெறுதலில்லாத பொருளையே (முக்கியமாகக் கருதி அது கிடைத்த மாத்திரத்தில்) மிகமகிழ்ச்சிகொண்டு, வாழ் தினம் மாறினால் - (தமது வாழ்) நாள் கழிந்தால், விடவி ஆர் அழல் உற்று என - மரங்கள் பெரு நெருப்பில் விழுந்தாற்போல, பெரு நரகில் - பெரிய நரகங்களிலே, ஆழ்வு உற வீழ்வர் - அழுந்தும்படி விழுந்து வருந்துவர்: (எ - று.)- ஆல் - ஈற்றசை; தேற்றமுமாம். பாண்டவர்தவத்தவர்க்குரிய காடாட்சியிற் பழகியதை இதனாற் கொண்டாடுகின்றான். மடவியார் நிலையற்ற செல்வம் மகிழ்ந்து என்பதற்கு - இளம்பெண்களையும் நிலையில்லாப் பொருளையுமே உகந்து என்றும் பொருள் கொள்ளலாம். விடவியாரழலுற்றென என்பதை விடு அவி ஆர் அழல் உற்று என எனப்பிரித்து, சொரியப்பட்ட |