பக்கம் எண் :

சஞ்சயன் தூது சருக்கம் 63

நினையாதொழிக என்று பொருள்.  எண்ணல் -எதிர்மறை வியங்கோள்.
அகந்தை - அகங்காரம்; அதாவது - தானல்லாத உடம்பை யானென்றும்,
தன்னோடு இயைபில்லாத பொருளை எனதென்றும் கருதி,
அவற்றினிடத்துச்செய்யும் அபிமானத்தை எனக்கொள்ளுதல் பொருந்தும்;
எனவே, அகந்தையோடு - (நீங்காத) அபிமானத்துடனென்றபடி.    (49)

9.

பராசரன்குலமாகினும்பெறுபயனிறுக்கிலர்பாரிலே
துராசரன்பிலரென்சொலின்றுசுயோதனாதியர்கைக்கொளார்
சராசரங்களனைத்துமாகியசுகனையேநிகர்தன்மையாய்
நிராசர்நின்னளவிற்குறித்தவையுறுதியென்றினிநீகொளாய்.

     (இ - ள்.) பராசரன் குலம் ஆகினும் -பராசர முனிவனது குலத்திலே
பிறந்தவர்களாயிருந்தாலும், சுயோதன ஆதியர் - துரியோதனன் முதலியோர்,
பெறு பயன் - (இம்மனிதசன்மத்தாற்) பெறத்தகுந்த (நல்லொழுக்கமாகிய)
பயனை, பாரிலே - இவ்வுலகத்திலே, இறுக்கிலர் - கடமையாகச்
செய்துமுடித்தாரில்லை;  துராசர் - கெட்ட பேராசையையுடையவர்கள், அன்பு
இலர் - (உயிர்களிடத்துச்சிறிதும்) அன்பில்லாதவர்கள்; (ஆதலால்), என் சொல்
இன்று கைக்கொளார் - எனது வார்த்தையை இப்பொழுது ஏற்றுக்
கொள்கிறாரில்லை; சர அசரங்கள் அனைத்துமாகிய சுகனையே
நிகர்தன்மையாய் - இயங்குதிணைப் பொருள்களும்
நிலைத்திணைப்பொருள்களும் ஆகிய எல்லாவற்றின் சொரூபமான சுக
முனிவனையே ஒத்த குணத்தையுடையவனே! நிராசர் - (பொருள்களிற்)
பற்றில்லாத பெரியோர்கள், குறித்தவை - சித்தாந்தமாகக் கூறியுள்ள தத்துவ
அருத்தங்களை, உறுதி என்று - (உயிருக்கு) நன்மையைத் தருவன என்று, இனி
- இனிமேல், நின் அளவில் நீ கொளாய் - உன் மட்டில் நீ கொள்ளக்கடவாய்;
(எ - று.)-'கொள்வாய்' என்றும்பாடம்.

     தத்துவத்தை உள்ளபடி முழுதும் உணர்ந்தபராசர முனிவனது சிறந்த
மரபில் தோன்றியும், இவர்கள் தாம் பொருள்களின் உண்மையைச் சிறிதும்
உணர்ந்து ஒழுகாமை மாத்திரமேயன்றி, உணர்ந்தவர் சொன்னாலுங்
கேட்டிலரென்னும் இகழ்ச்சிமிகுதிதோன்ற முதலிரண்டடிகளால் கூறினார்;
துரியோதனாதியர் கேளாவிட்டாலும் நீயாயினுங் கேட்டு நடப்பது
தகுதியென்பான், 'நின்னளவில் உறுதியென் றினிநீ கொளாய்' என்றார்.  வியாச
குமாரனான சுகன் போலவே, வியாசகுலத்திற் பிறந்த நீயும் உடனே
உலகப்பற்றையொழித்து உயர்பதம் பெற முயல்வது தகுதியென்பார்.
'சுகனையே நிகர் தன்மையாய்' எனத் தருமனை விளித்தார்; தருமன் அறிவு
ஒழுக்கங்களில் மிக்கவ னென்க.  பயன் நிறுக்கிலர் எனப்பதம் பிரித்து
நல்லொழுக்கமாகிய பெறத்தக்க பயனைச்செய்து நிலைநிறுத்துகின்றாரில்லை
என்பாருமுளர்.

     சுகமுனிவர், பிறந்தபொழுதேஇயற்கையிற் பற்றுக்களனைத்தையு
மொழித்துப் பரம்பொருளை நோக்கித் தனியே சென்றதைக் கண்டு அவரது
தந்தையான வியாசர் அவரது பிரிவைப் பொறுக்க