பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 75

    அருச்சுனனுக்கு இராச்சியமில்லையாயினும் கீர்த்தியுண்டு;
துரியோதனனுக்கு இராச்சியமிருந்தும் கீர்த்தியில்லை என்ற சிறப்பும் இழிவும்
தோன்ற, 'பேர்படைத்த', 'பார்படைத்த' என்ற சொற்களால் அவரை முறையே
விசேடித்தார்.  யாவரினுஞ்சிறந்த திருமால் தேரூர்தலாகிய இழிதொழிலை
ஏற்றுக்கொண்டு தனது சௌலப்பியத்தைக் காட்டியருளுதற்குக் காரணமாதலால்,
கண்ணனுக்கு அருச்சுனனிடத்திலுள்ள நட்பு, 'சீர்படைத்த கேண்மை'
எனப்பட்டது; அருச்சுனனுக்குத் தேரூர்தலை 'செறிந்தமால் பெறுஞ் சிறப்பு'
எனக்கீழ் நிரைமீட்சிச்சருக்கத்திற் கூறியதும் காண்க.

    இதுமுதல் முப்பத்துமூன்று கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீர் இரண்டும்
மாச்சீரும், மற்றைநான்கும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
அறுசீராசிரிய விருத்தங்கள்.                                 (61)

சஞ்சயன் சென்றபின்பு தருமன் கண்ணனைநோக்கிச் சொல்லத் தொடங்குதல்.

2. ஞானமன்பொ டினிதுரைத்து ஞானமுனியகன்றதற்பின்சாமபேத,
தானதண்டமெனநிருபர்தரும முறைமையிற்புகலுந் தகுதிநோக்கித்,
தூநறுந்தண்டுளவோனைத் தூதுவிடுவதற்கெண்ணிச்சுனைகடோறு,
மேனலந்தண்கிரிப் பெருந்தேனிறைக்குமெழிற்குருநாடனியம்புவானே.

     (இ - ள்.) ஞானம் - தத்துவஞானத்தைஅன்பொடு - அன்புடனே,
இனிது - இனிமையாக, உரைத்து - (தருமனுக்குச்) சொல்லி, ஞானம் முனி -
தத்துவஞானமுடைய சஞ்சயமுனிவன், அகன்றதன்பின் -புறப்பட்டுப்போன
பின்பு,- ஏனல் - தினைப்பயிர்களையுடைய, அம் - அழகிய,தண் -
குளிர்ச்சியான, கிரி - மலைகள், சுனைகள்தோறும் -சுனைகளிலெல்லாம்,
பெருந்தேன் நிறைக்கும் - (தம்மிடத்திலுள்ள மலர்களாலும்
தேன்கூடுகளைக்கொண்டும்) மிகுதியான மதுவை நிறைக்கப்பெற்ற, எழில் -
அழகிய, குருநாடன் - குருநாட்டையுடைவனான யுதிட்டிரன்,- சாம பேத தான
தண்டம் என - சாமமும் பேதமும் தானமும் தண்டமும் என்று, நிருபர் தருமம்
- இராச தருமத்திலே, முறைமையின் புகலும் - முறையே கூறப்படுகிற, தகுதி -
(நால்வகை உபாயங்களின்) தன்மையை, நோக்கி - ஆலோசித்து, தூ
நறுந்தண்துளவோனை தூது விடுவதற்கு எண்ணி - பரிசுத்த குணத்தையும்
நல்வாசனையையும் குளிர்ச்சியையுமுடைய திருத்துழாய்மாலையை
யுடையவனான கண்ணபிரானை (த் துரியோதனனிடம்) தூதாக அனுப்பும்படி
நினைத்து, இயம்புவான் - கூறுபவனானான்; (எ - று.) - அதை, அடுத்த
இரண்டு கவிகளிற் காண்க.

    அரசற்கு உரிய நான்கு உபாயங்களுள், சாமம் முதலில்
உபயோகிக்கத்தக்கதும், மற்றவை அதன்பின் முறையே
உபயோகிக்கத்தக்கவையுமாதலால், தருமன், முதலிற் சாமோபாயத்திலே நின்று,