பக்கம் எண் :

78பாரதம்உத்தியோக பருவம்

திற்குக் காரணமான பகையை மிகமூட்டி அதனைஒழித்தற்கு ஏற்ற
உபாயங்களைத் தேடாதிருத்தலை விளக்கும்.  நல் மருந்து - உயிர்தரும்
மருந்து.  மந்திரம் - விஷமந்திரம்.  ஓ - எதிர்மறை சோதீ, ஈறு நீண்டவிளி.
'யார்மனத்து மிருக்குஞ் சோதீ என்றது பேதையரோடு ஞானியரோடு வாசியற
அனைவரும் அறிந்து மனங்கொள்ளத்தக்க திவ்விய மகிமையையுடையவன்
கண்ணபிரானென்பதைக் காட்டும்: மற்றும் இத்தொடர் - யாவரது மனத்திலும்
அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கின்ற ஒளிவடிவமானவனென்னும்
பொருளையும் பெறும்.  எல்லார் கருத்தையும் நீ நன்கு உணர்ந்தவனாதலால்
உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லையென்றற்கு, 'யார்மனத்து மிருக்குஞ் சோதீ'
என விளித்ததுமாம்.                                             ()

தருமனையும் அவன் தம்பியரையும் நோக்கிக்கண்ணன்
ஒன்று சொல்லத் தொடங்குதல்.

4.அருஞ்சமரம் புரியும்வகையவருரைத்தாரானாலு
                              மறமொன்றின்றிப்,
பெருஞ்சமரம்விளைக்குமதுகடனன்றென்றருள்வெள்ளம்
                                 பெருகக்கூறும்,
பொருஞ்சமரநெடுமுரசப்பூங்கொடியோன் றனைநோக்கிப்
                              புயப் போர்வாண,
னிருஞ்சமரந்தொலைத்தபிரானிளைஞரையுமுட னிருத்தி
                                 யியம்புவானே.

     (இ - ள்.) அருஞ் சமரம் புரியும் வகை- அருமையான போரைச்
செய்யும்படி, அவர் உரைத்தார் ஆனாலும் - அத்துரியோதனாதியர்கள்
கூறினாராயினும், அறம் ஒன்று இன்றி - சிறிதும் தருமமில்லாமல், பெருஞ்
சமரம் விளைக்குமது - (பலர்க்கு அழிவுண்டாகப்) பெரிய போரைச் செய்வது,
கடன் அன்று - நீதியன்று, என்று -, அருள் வெள்ளம் பெருக கூறும் -
கருணைப் பெருக்கு மிகச் சொல்லுகிற, பொரும் சமரம் நெடு முரசம் பூ
கொடியோன்தனை நோக்கி - மோதுகின்ற போருக்கு உரிய பெரிய
பேரிகையின் வடிவத்தை யெழுதிய அழகிய கொடியையுடையவனான
யுதிட்டிரனைப் பார்த்து, - புயம் போர் வாணன் இருஞ்சமரம் தொலைத்த
பிரான் - (ஆயிரங்) கைகளாலும் போர் செய்யவல்ல பாணாசுரனது
பெரியபோரை ஒழித்திட்ட கண்ணபிரான்,-இளைஞரையும் உடன் இருத்தி -
(அத்தருமனது) தம்பியர் நால்வரையும் கூட இருக்கச்செய்து, இயம்புவான் -
(சில வார்த்தை) சொல்பவனானான்; (எ - று.) - அதனை, அடுத்த கவியிற்
காண்க.

    தருமபுத்திரன் மகாசாதுவும் கருணைக்கடலுமாதலால் பல பேர்க்கு அழிவு
உண்டாகுமாறு போர்செய்து அரசுபெற விரும்புதலின்றிச் சமாதானத்தையே
முக்கியமாகக்கொண்டு பேசினனென்க; மேலும் இது காண்க.

    பிறவுயிரைக் கொல்லுதல் எல்லாத் தருமங்களுள்ளுஞ் சிறந்த
கருணையின் ஒழிவேயாதலால், 'அறமொன்றின்றி' எனப்பட்டது.  பூங்கொடி -
அழகையுடைய கொடி யென்றால், இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுந்
தொக்கதொகை; அழகாகிய கொடி யென்றால், பண்புத்தொகை.  தனது
வெற்றிக்கு அறிகுறியாகவும், மங்கலகர