மாகவும்தருமன் முரசத்தைக் கொடியிற் கொண்டனன், ஸமரம், முரஜம், புஜம், பாணன் - வடசொற்கள். வாணன்சமரத்தைத் தொலைத்த வரலாறு - பலிசக்கரவர்த்தியின் சந்ததியிற் பிறந்தவனான பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள் ஒருநாள் ஒருபுருஷனோடு தான் சேர்ந்ததாகக் கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசைப்பட்டவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து, அவள் மூலமாக, அந்தப்புருஷன் கிருஷ்ணனுடைய பௌத்திரனும் பிரத்யும்நனது குமாரனுமாகிய அநிருத்தனென்று அறிந்து கொண்டு 'அவனைப்பெறுதற்கு உபாயம் செய்யவேண்டும்' என்று அத்தோழியை வேண்ட, அவள் தன் யோகவித்தை மகிமையினால் துவாரகைக்குச்சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்தப்புரத்திலே விட, உஷை அங்கு அவனோடு இருக்க, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தப் பாணன் அநிருத்தனை நாகாஸ்திரத்தினாற் கட்டிப்போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது நாரதமகா முனிவனால் நடந்தவரலாறு சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், தனக்கு வாகனமான கருடனை நினைத்தருளி, உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோளின்மேலேறிக்கொண்டு, பலராமன் முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளிப்பெரும்போர் செய்து சுதர்சனமென்கிற தனது சக்கரத்தைப் பிரயோகித்துப் பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையும் சிதைப்பதாக இருக்கையில், சிவபிரான் வேண்டியபடி அவ்வாணனை நான்குகைகளோடும் உயிரோடும் விட்டருளின னென்பதாம். இடப்பக்கத்துக்கை ஐந்நூற்றிலும் ஐந்நூறுவிற்பிடித்து வலப்பக்கத்துக்கை ஐந்நூற்றினாலும் அம்புகள் தொடுத்துப் போர் புரிபவனாதலால், 'புயப்போர் வாணன்' என்றார். (பிரான் என்பதன் பெண்பால் - பிராட்டி.) இளைஞரென்ற சொல்லில், பாண்டவர்மனைவியான திரௌபதியையும், சாத்தகியையும் அடக்கவேண்டும்; அவர்கள் உடனிருந்தது, 41, 48 - ஆங் கவிகளில் விளங்கும். இளைஞர் - இளமையென்னும் பகுதி, ஈறுபோய் இடை அகரம் ஐயாயிற்று; ஞ்-பெயரிடை நிலை; உம் - இறந்தது தழுவிய எச்சம். (64) இதுவும் அது. 5. | செய்வராலினமுகளுந்திருநாடுபெறநினைவோசென்றுமீளப், பைவராயருங்கானிற் பயின்று திரிதரநினைவோ பகைத்தபோரில், உய்வராரெனவிரைவினுருத் தெழுந்துபொரநினைவோ வுண்மையாக, ஐவராமவனிபர்க்கு நினைவே தென்றருள் புரிந்தானமரர் கோமான். |
(இ - ள்.) 'செய் - கழனிகளிலே, வரால் இனம் - வரால்மீன்களின் கூட்டம்,உகளும் - துள்ளப்பெற்ற, திரு நாடு - அழகிய குருநாட்டை, பெற - (சமாதானத்தாற்) பெற்றுக்கொள்ள, நினைவோ - |