தவன் இப்பொழுது அவ்வுறுதிமொழியைநிறைவேற்றாமற் பொய்த்தது போல, இப்பொழுது 'போர் செய்வேன்' என்கிறவன் பின்பு அதனையும் நிறைவேற்றாமற் பொய்த்துப் போகாதபடி அதனையேனும் தவறாமல் நடத்துமாறு உறுதிசெய்து வருவாய் என்றபடி. நடந்து வேண்டு என இயையும். ஊர்பணி,அடுபோர் - வினைத்தொகைகள். முந்தூர் கொடியென இயைத்து, சிறப்புப்பொருந்திய துவசம் அல்லது முந்திச் செல்லுகிற துவசம் என்றுங் கொள்ளலாம். பணிக்கொடியோன் - பாம்புபோலக் கொடுமையுடையவனென்றுமாம். கொடியோன் என்பதை, நல்கான் என்பதற்கு எழுவாயாகவுங் கொள்ளலாம். உழவர் - மருத நிலமாக்கள். முதுமை + ஊர் = மூதூர்: பண்புப்பெயர்; ஈறு போய் ஆதிநீண்டது. இல் + முன் = முன்றில்; முன்பின்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத்தொகை; இது இலக்கணப்போலி யெனப்படும். பகைவர் அஞ்சத்தக்கபேராற்றலுடையவனே யென்பார் 'சிந்துரத்தின் மருப்பொசித்த செங்கண்மாலே' என்று விளித்தார். சிந்துரத்தின் மருப்பொசித்த கதை:- வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கம்சனால் வரவழைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண பலராமர்கள் கம்சனரண்மனையை நோக்கிச் செல்லுகையில் அவனது அரண்மனைவாயில் வழியில் தம்மைக்கொல்லும்படி அவனாலேவி நிறுத்தப்பட்ட குவலயாபீடமென்னும் பட்டத்து யானை கோபித்துவர, அந்த யாதவ வீரர் அதனையெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அந்த மதயானையை உயிர் தொலைத்துவிட்டு உள்ளே போயினரென்பதாம். செங்கண்மால் - செந்தாமரைமலர்போன்றகண்களையுடைய திருமால் [புண்டரீகாக்ஷன் என்றபடி.] அடியார்களை அருளுடன் நோக்கிநோக்கிக் கண்கள் சிவந்தனபோலும்; இதுவே கொடியவர் திறத்துக் கோபத்தாற் சிவந்ததுமாம். இங்கு 'செங்கண்மாலே' என்றது, உனது கண்ணோட்டத்தினால் நாங்கள் சமாதானத்தில் இராச்சியம் பெறக்கூடுமென்று குறிப்பித்தபடி. மாலே, ஏகாரம் - விளிக்குறி. மால் - பெருமை. அடியார்கள் பக்கல் அன்பு, திருமகளிடத்துக் காதல், மாயை, கருநிறம் இவற்றை யுடையவன். (71) 12.- அது கேட்டு வீமன் வெறுத்துக் கூறுதல். மூத்தோன்மற் றிவையுரைப்ப விளையோன் வெஞ்சின மனத்தின் மூளமூள, நாத்தோமி லுரைபதறக்கதுமெனவுற்றெழுந் திறைஞ்சி ஞாலமெல்லாம், பூத்தோனே பூந்தவிசிற் பூவைபுணர்மணிமார்பாபுன்மை யாவுந், தீர்த்தோனே யூனமிலான் மானமிலாதுரைப்பதற்கென்செய்வ தென்றான். |
(இ - ள்.) மூத்தோன் -(பாண்டவருள்) மூத்தவனான தருமன், இவை உரைப்ப - இவ்வார்த்தைகளைக் கூற,-மற்று - பின்பு,- |