பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 91

இங்குத்தருமனது அருளின் குற்றத்தினால், துரியோதனனது கொடுமைக்குக்
குணம் சொல்லப்பட்டவாறு காண்க.

     பசும்பொன்னாலாகிய தொடியென்பார், பைந்தொடி யென்றார்.
பைந்தொடி - இங்கு பண்புத்தொகையன்மொழி.  வேந்து + அவை =
வேத்தவை; ஆறாம் வேற்றுமைத்தொகையில் மென்றொடர் வன்றொடராயிற்று.
வேந்து - உயர்திணைப் பொருள்தரும் அஃறிணைச் சொல்.  உள்ளளவு -
உள்ளவளவு என்பதன் தொகுத்தல்.  ஆதாரமாகிய உலகம் அழிய அதன் மீது
வழங்கும் பழியும் அழியுமாதலால், 'உலகுள்ளளவுந் தீராத வசை' எனப்பட்டது.
கண்டாய் - செய்தாயென்னும் பொருளது.  தழற் கானகம் - நெருப்புப்போல
வெவ்விய காடுமாம்.  பகை - பகைவர்க்குப் பண்பாகுபெயர்.  அரவு, முரசு -
அவற்றின் வடிவமெழுதிய கொடிகட்கு ஆகுபெயர்.  'கானகமகன்றும்'
என்றதன்பின் 'இன்னமும்' என வேண்டாது கூறியதில், அரியதான
அஜ்ஞாதவாசம் அடக்கிக் கொள்ளப்பட்டது.  இன்னமும் - உலூகன்
தூதுசென்று வந்ததனால் துரியோதனன் கருத்தைத் தெரிந்துகொண்டபின்பும்
என்றவாறுமாம்.  இளையா நின்றாய் என்று இரண்டு சொல்லாகக்கொண்டு,
இளைத்து நின்றாயென்றலுமொன்று.  அஞ்சினேன் = அஞ்சுகிறேன்;
இயல்பினால் நிகழ்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டகாலவழுவமைதி.(73)

14.கானாள வுனைவிடுத்த கண்ணிலா வருளிலிதன் காதன்
                                        மைந்தன்,
தானாளுந்தரணியெல்லா மொருகுடைக்கீழ் நீயாளத்
                                    தருவனின்றே,
மேனாணம்முரிமையறக் கவர்ந்தபெருந் துணைவனுனை
                                 வெறாதவண்ணம்,
வானாளவானவர்கோன் றன்பதமற் றவன்றனக்கே
                                   வழங்குவேனே.

     (இ -ள்.) உனை - உன்னை, கான் ஆள - வனத்தையடைந்து
வாழும்படி, விடுத்த - ஏவியனுப்பிய, கண் இலா அருள்இலி தன்
காதல்மைந்தன் - பிறவிக்குருடனும் கருணையில்லாதவனுமாகிய
திருதராட்டிரனது அன்புக்கு உரிய மகனான துரியோதனன், தான் ஆளும் -
தான் (இப்பொழுது தனியே) அரசாண்டு வருகிற, தரணி எல்லாம் - இராச்சியம்
முழுவதையும், ஒரு குடைக்கீழ் நீ ஆள - ஒற்றைவெண்கொற்றக்குடை
நிழலிலே நீ அரசாளும்படி, இன்றே தருவன் - இப்பொழுதே (உனக்குக்)
கொடுப்பேன்; (அதுவுமல்லாமல்), மேல் நாள் நம் உரிமை அற கவர்ந்த பெருந்
துணைவன் - முன்னாளில் நமக்கு உரிய அரசாட்சிச் செல்வ முழுவதையும்
(உன்னிடத்தினின்றும்) பறித்துக்கொண்ட பெரிய தம்பியான துரியோதனன்,
உனை வெறாத வண்ணம் - (தனது இராச்சியத்தை நீ உன்னுடையதாக்கி
ஆளுவதற்காக) உன்னை வெறுக்க வேண்டாதபடி, வான் ஆள -
(நிலவுலகத்தினும் மேலான) வீரசுவர்க்க லோகத்தையடையுமாறு, வானவர்
கோன் தன்பதம் - தேவர்கட்கு அரசனான இந்திரனது உலகமாகிய அமராவதி
நகரத்தை, அவன் தனக்கே வழங்குவேன் - அத் துரியோதனனுக்கே
கொடுப்பேன்; (எ - று.)