"குற்றம்பார்க்கிற் சுற்றமில்லை"என்பது ஒளவையார் அமுதமொழி. உலகத்திற் குற்றமில்லாதவர் அரிய ராதலால், ஒவ்வொருவரிடத்தும் குற்றத்தையே நோக்கினால் சுற்றம் இல்லையாகும்; ஆதலால், உறவினரிடத்து உள்ள பிழைகளை யெல்லாம் பொறுப்பது கடமை யென்றபடி. (77) 18.-இதுவும் அது. உரிமையுடன் றம்பியரன்றுணர்வறியாமையினவைக்க ணுரைத்த மாற்றம், பரிபவமோகேட்டோர்க்குப் பரிபவமென்பது பிறராற் பட்டாலன்றோ, கருதிலதுமற்றெவர்க்கு மொவ்வாதோ கண்மலரிற் கை படாதோ, பொருதொழிலுங் கடைநிலத்திற் கிடந்ததேயெனமொழிந்தான் புகழேபூண்பான். |
(இ -ள்.) 'தம்பியர் - (நமது) தம்பிமார்கள், உரிமையுடன் - சுதந்திரத்தினாலும், உணர்வு அறியாமையின் - தேர்ந்த அறிவு இல்லாமையாலும், அன்று - அக்காலத்தில், அவைக்கண் - சபையிலே, உரைத்த - சொன்ன, மாற்றம் - வார்த்தை, கேட்டோர்க்கு - (அதனைக்) கேட்ட நமக்கு, பரிபவமோ - அவமானத்தைத் தருவதோ? (அன்று என்றபடி); பரிபவம் என்பது பிறரால் பட்டால் அன்றோ - (ஒருவர்க்கு) அவமானத்தைத் தருவதென்பது ஒரு குலத்திற் பிறந்தவரல்லாதவரால் நேர்ந்தாலன்றோ? கருதில் - ஆலோசிக்குமிடத்து, அது - அவ்விஷயம் [பிறராற் பட்டால் மாத்திரமே அவமானம், தம்மவராற் பட்டால் அவமானமன்றுஎன்பது], மற்று எவர்க்கும்ஒவ்வாதோ - (உலகத்தில்) எல்லார்க்கும் உடன் பாடாகாதோ? (யாவர்க்கும் சம்மதமே யென்றபடி); கண் மலரில் கைபடாதோ - (ஒருவனது) தாமரைமலர் போன்ற கண்ணில் (அவனது) கை படுதலில்லையோ? பொருதொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே - போர் செய்யுந் தொழிலும் (அரசர்க்கு உரிய உபாயங்களுள்) இறுதியிடத்தில் இருக்கவேயிருக்கிறது' என - என்றும், புகழே பூண்பான் - கீர்த்தியையே ஆபரணமாக அணிபவனான தருமன், மொழிந்தான் - (வீமனை நோக்கிக்) கூறினான்; (எ - று.) கேட்டோர்க்கு - தன்மையிற்படர்க்கைவந்த இடவழுவமைதி. 'கண்மலரில்கைபடாதோ' என்றது, தமது அவயவங்களுள் ஒன்றில் மற்றொன்று அஜாக்கிரத்தையினாற் பட்டு அதற்கு வருத்தத்தை உண்டாக்கினால் அதற்காக அவ்வருத்தும் உறுப்பைக் கோபித்துக் களைபவரில்லாமை போல, ஒரு குடும்பத்தவருள் ஒருவர் மற்றொருவற்குச் சோர்வினால் தீங்கிழைத்தால் அதற்காக அவரை அழிப்பது தகுதியன்று என்பதை உணர்த்தி நின்றது. இங்ஙனம் உபமான வாக்கியத்தால் உபமேயத்தைப் புலப்பட வைத்தது, பிறிதுமொழிதலணியாம். "இன்னாசெயினும் விடுதற் கரியாரைத், துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர், விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ, கண்குத்திற் றென்றுதங் கை" என்னும் நாலடியார்ப்பாட்டை இங்கே அறிக. 'பொருதொழிலுங் கடைநிலத்திற் கிடந்ததே' என்றது எல்லா உபாயங்களுள்ளும் தண்டோ |