வாரும், 'மூவர்க்குமுதல்வனாகி' என்றபாடத்துக்கு - திருப்பாற் கடலிலெழுந்தருளியுள்ள திருமாலின் வியூகமூர்த்திகளாகிய வாசுதேவன் சங்கர்ஷணன் பிரத்யும்நன் அநிருத்தன் என்ற நால்வருள் பிரதான மூர்த்தியான வாசுதேவன் பிரமவிஷ்னுருத்ரரூபிகளாய்ப் படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்யும் மற்றை மூவர்க்குங் காரண னாதலால், அந்நிலையைக்கருதி அங்ஙனங் கூறிய தென்க; "மூவரா -யவர்களுக்கு முதல்வனாகிய மூர்த்தி" என்றார் கீழ்க் கிருட்டிணன் தூதுசருக்கத்தும். "ஸர்வம் விஷ்ணுமயம்ஜகத்" என்றபடி சகல சேதநாசேதங்களின் உள்ளும் புறம்பும் எம்பெருமான் வாசியறக் கலந்து நிற்றலின், 'யாவரும்யாவுமாகி' என்றது; "யாவையும் யவருந் தானாய்", "அண்டத் தகத்தான் புறத்துள்ளான்" என்றார் திருவாய்மொழியிலும் "தமருகந்த தெவ்வுருவ மவ்வுரு வந்தானே, தமருகந்த தெப்பேர்மற் றப்பேர்-தமருகந்த, தெவ்வண்ணஞ் சிந்தித் திமையா திருப்பரே, யவ்வண்ண மாழியா னாம்," "நும்மின்கவிகொண்டு நும்நு மிட்டாதெய்வ மேத்தினாற், செம்மின் சுடர்முடி யென்றிரு மாலுக்குச் சேருமே" எனஆழ்வார்களருளிச்செய்தபடி உலகத்தில் அந்தந்த மதத்தவர் கொண்டாடுந் தெய்வமெல்லாம் 'எம்பெருமானது சொரூபமே யாதலால்' 'இறைஞ்சுவாரிறைஞ்சப் பற்ப றேவருமாகி' என்றும், கடவுள் எப்பொழுதும் அழியாது நித்தியனாயிருத்தலால் 'நின்ற' என்றுங் கூறினார். 'எங்கள்கோவே' என்றார், தம்போலியரையும் உளப்படுத்த;தம் கோத்திரத்தவரை உளப்படுத்த எனினுமாம். திருமாலின் திருவவதாரவிசேஷமாகிய கண்ணபிரான் இங்ஙனம் தானிருக்கிற உண்மைத்தன்மையை அருச்சுனனுக்குக் காட்டியருளுகிற செய்தி இச்சருக்கத்திற் கூறப்படுதலால், அதற்கேற்ப இங்ஙனங்கடவுயாதலாள்வாழ்த்துக் கூறினார்: மேல் நிகழ்கிறசரித்திரத்தின் குறிப்பைச் செல்லினாலாவது பொருளினாலாவது கருத்தினாலாவது ஒருவாறுதோன்றக் கடவுள்வாழ்த்துக் கூறுதலும் மகாகவிகளது மரபாம். பல+பல+தேவர்=பற்பறேவர் ; பலவென்பது - தன்முன் தான்வரவும் வேறுவரவும் அகரங்கெட லகரம் விகாரப்பட்டதன்றி, வருமொழித் தகரவொற்றுத் திரிய நிலைமொழியீற்றுலகரங் கெட்ட தென்க: [நன் -உயிர் - 20 : மெய்.34,26.] இதுமுதற் பதினேழுகவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி வந்த அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தங்கள். (1) 2.-இதுமுதல் ஆறுபாடல்கள்-கண்ணன் அருச்சுனனுக்குத் தத்துவங்களை உபதேசித்தமையைக் கூறும். மாயையென்றொருத்திதன்பான்மனமெனுமைந்தன்றோன்றித் தூயநல்லறிவன்றன்னைத்தோற்றமின்றாக்கிவைத்தான் தாயொடுதந்தைமக்கடாரமென்றிவர்பால்வைத்த நேயமுமவன்றனாலேநிகழ்ந்ததோர்நினைவுகண்டாய். |
|