பக்கம் எண் :

102பாரதம்வீட்டும பருவம்

எதிரிகளை அழியாது விடேனென்றவாறு. அருச்சுனன்=அர்ஜ்ஜு நன்; வடசொற்றிரிபு :
இதற்கு-வெண்ணிறமுடையவனென்பது பொருள்: இது -முதலில் இந்நிறமுடைய
கார்த்தவீரியமகாராசனுக்குப்பெயர் பெயராயிருந்து, பின்பு, அவனைப்போன்ற
சௌரிய தைரியங்களையுடைய பார்த்தனுக்கு இட்டுவழங்கப்பட்டது; இது-
உவமவாகுபெயரின்பாற்படும். பார்த்தன் கருநிறமுடையவனாததலால். அவனுக்கு
அருச்சுனனென்பது நிறம்பற்றிவந்த பெயரென்றல் பொருந்தாது. இனி, "குருச்சுடர்
மணிசெய் பச்சைக் கொழுந்துடற் பொலிவு நோக்கி, அருச்சுன னென்ப
ரீதென்னரும்பெயர் வந்த பான்மை" என்னும் நல்லாப்பிள்ளைபாரதச்
செய்யுளைக்கொண்டு,அருச்சுனனென்பது - பசுமைநிறம் பற்றிவந்த பெய ரென்றலு
மொன்று. அன்றியும்,பார்த்தன் (பார்வதிபோல) முதலில் [பிறந்தபொழுது]
வெண்ணிறமுடையவனாயிருந்துஉடனே கருமைநிறமடைந்தானென்று
கூறுவதுமுண்டு. தாரை-கூர் நுனியுமாம்.தாரையுய்ப்பது-மழைபொழிவது
போலமிகுதியாக எய்வதுஎனவும் கொள்ளலாம்.அதிரா - நாணேற்றி
அந்நாணியைக்கைவிரலால் தெறித்து டங்காரத்தொனியையுண்டாக்கிச்
சிங்கநாதமுஞ் செய்து என்க.                                   (129)

21.-இதுவும் அடுத்த கவியும்.அருச்சுனன் செய்த
கடும்போரைத் தெரிவிக்கும்.

நீறுப டுத்தினன் மாமகு டத்திர ணீணில வைப்படையச்
சேறுப டுத்தினன் மூளைக ளிற்றிசை சேர்குரு திப்புனலால்
ஆறுப டுத்தின னோரொரு வர்க்கெதி ராயிரம் வைக்கணையால்
ஈறுப டுத்தினன் வீடுமன் விட்டவர் யாவர்பி ழைத்தவரே.

     (இ - ள்.) (உடனே அருச்சுனன்),-மா மகுடம் திரள் - (பகையரசர்களது)
பெரிய கிரீடங்களின் தொகுதியை, நீறு படுத்தினன்-பொடியாக்கினான்;
மூளைகளின் -(அவ்வீரர்களது) மூளைகளால், நீள் நிலம் வைப்பு அடைய சேறு
படுத்தினன் -பெரிய பூலோகத்தின் இடம்முழுவதுஞ் சேறாக்கினான்; திசை சேர்
குருதி புனலால் -எல்லாத்திக்குக்களிலும் பாய்கிற இரத்தவெள்ளத்தால், ஆறு
படுத்தினான் -  பலஆறுகளை யுண்டாக்கினான்; ஓர்ஒருவர்க்கு எதிர் ஆயிரம்
வை கணையால-(தன்னையெதிர்த்த) ஒவ்வொரு வீரருக்கும் எதிராக(த் தான்எய்த)
ஆயிரம் ஆயிரம்கூரிய அம்புகளால் ஈறுபடுத்தினன் - (அவர்களுக்கு) அழிவை
யுண்டாக்கினான்;(அப்பொழுது), வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவர் -
வீடுமனொழிந்த வீரர் எவர்பிழைத்தார்? (எ - று.)-எவரும் பிழைக்கவில்லை;
மிகப்பலர் இறந்தனர் என்பதாம்.

     இனி, வீடுமன் விட்டவர் யாவர் பிழைத்தவர் என்பதற்கு - அருச்சுனனோடு
போர்செய்யும்படி வீடுமனால் ஏவியனுப்பப்பட்டு எதிர்த்த வீரர்களில் யார்
பிழைத்தார்? எவருமில்லை என்றுஉரைப்பாரு முளர். பி-ம்:- திரை சேர்குருதி,
தசைசேர்குருதி. விட்டமர்.