இதுமுதல் இச்சருக்கமுடியுமளவும் ஏழுகவிகள் - பெரும்பாலும் முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள் கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரிய விருத்தங்கள் (133) 25,-இது முதல் மூன்று கவிகள் - படுகளச்சிறப்பு. வெஞ்சரத்தினால்விசயன்வென்றபோர்மிகுகளத்தின்வாய் விசையொடற்றன குஞ்சரத்தின்வீழ்கைகணாகமேகுருதிவட்டமும்பரிதிவட்டமே பஞ்சரத்தொடுந்திரியுமானையின் பக்கமெங்கணும்பட்டுமூழ்கிய செஞ்சரத்தின்மேற்சிறகர்பண்டுவச்சிரமரிந்திடுஞ்சிறகர்மானுமே. |
(இ - ள்.) வெம் சரத்தினால் - கொடிய அம்புகளைக்கொண்டு, விசயன் - அருச்சுனன், வென்ற - சயித்தற்கிடமான, போர் மிகுகளத்தின்வாய் - போர்த்தொழில்மிகுந்த யுத்தகளத்திலே, விசையொடு அற்றன - விரைவில் அறுபட்டனவான, குஞ்சரத்தின்வீழ்கைகள்- யானைகளின் கீழ்விழுந்த துதிக்கைகள், நாகம்ஏ - பெரும் பாம்புகளின்வடிவமேபோலும்; குருதிவட்டம்உம் - வட்டவடிவமாகத் தேங்கிய இரத்தப்பெருக்கும், பரிதி வட்டம்ஏ - சூரியமண்டலமேபோலும்; பஞ்சரத்தொடுஉம் திரியும் - அம்பாரிகளோடு திரிகிற, ஆனையின் - யானைகளின், பக்கம் எங்கண்உம்- (உடலின்) இருபுறத்தி லெங்கும், பட்டு முழ்கிய - தைத்து அழுந்திய, செம்சரத்தின் மேல் - சிவந்த அம்புகளிம்மீதுள்ள, சிறகர் - இறகுகள், பண்டு வச்சிரம் அரிந்திடும் சிறகர் மானும் -முன்னொருகாலத்தில் (தேவேந்திரனது) வச்சிராயுதத்தால் அறுபட்ட (மலைகளின்)சிறகுகளையே போலும்; (எ-று.) யானையின் கரியபெரியவடிவத்துக்கு மலையும், அதன்மேல் தைத்துள்ள அம்பினிறகுகளுக்கு அவற்றின் இறகும் உவமை. அழகுக்காகவும்விரைந்து செல்லும்பொருட்டாகவும் அம்புகளுக்கு இறகுகட்டுதல், இயல்பு. தற்குறிப்பேற்றவணி. மானும் என்னும் வினைமுற்றை, மற்றை யிரண்டு வாக்கியங்களிலுங் கூட்டுக. 'கைகள் நாகமே குருதிவட்டமும் பரிதிவட்டமே' என்று சேர்த்தியால், இரத்தமண்டலமாகிய சூரியமண்டலத்தைப்பிடித்தற்கு அருகில் வந்த இராகு வென்னுங் கரும்பாம்பென்று அருகில் வீழ்ந்துள்ள யானைத்துதிக்கையைக் குறித்ததாகக் கொள்க. குஞ்சரம் - காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பது; மத்தகத்துக்குக் கீழுள்ள குழிகளை யுடைய தென்றுமாம். குஞ்சம் - புதரும், கும்பஸ் தலங்களுக்குக்கீழுள்ள குழிகளும். பஞ்சரம் - வடசொல்: கூடென்றுபொருள்; இது இங்கே இலக்கணையாய் அம்பாரிக்குக் கொள்ளப்பட்டது. யானைமீது அம்பாரிகட்டுதல், இயல்பு: இனி, பஞ்சரம் - கழுகு என்று பொருள்கொண்டு, யானையாற் கொல்லப்படும் பிராணிகளை யுண்ண யானையுடன் கழுகுந் திரியுமென்பர், ஒருசாரார். சிறகர் - குற்றியலுகரம், 'அர்' பெற்றது. (134) 26. | கொற்றமன்னர்சென்னியினணிந்தபொற்கோளம்யாவையுந் தாளமாகவே யற்றைவெஞ்சமத்தடலருச்சுனனாண்மைபாடிநின்றல கையாடுமால் |
|