நாய்கள், மானுடர் தலை விலங்கின் இன்தன்மை சாலும் - மனிதத் தலையோடு கூடிய மிருகங்களின் இனிய தன்மையைப்பொருந்தும். 'ஆண்டலைப்புள்' போல மானுடத்தலைவிலங்கும் உண்டென்க; புருஷமிருகமென ஒருவகை வழங்குகிறது. பமரம் - ப்ரமரமென்னும் வடமொழித்திரிபு. விலா - வயிற்றுப்புறம். மலை - யானைக்கும், மலையைத்துளைத்தவேல் - யானையின்மீது தைத்த வேலுக்கும், அனல் - இரத்தத்தோடுகூடிய நிணத்துக்கும் உவமை. விலங்கு - 'திர்யக்' என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பு; குறுக்காக நிற்பதென்று பொருள். ஆல், ஏ - ஈற்றசைகள். குமரக் வேலின்வாயனலமூர்தருங் கோடுடைக்குன்றமென் பதிலடங்கியகதை:- சிவபிரானது இளையகுமாரனாய்த் தேவர்வேண்டுகோளால் அசுரர்களையொழித்தற்குத் தேவசேனாபதியாம்பொருட்டு அவதரித்த முருகக்கடவுள், சூரபதுமனைப் பொருது அழித்தற்குச் செல்லுங் வழியிடையே கிரௌஞ்சனென்னும் அசுரன் பெரியமலை வடிவங்கொண்டு அக்கடவுளை நலிவதாகஎதிர்வந்துநிற்க, அதன் மேல் அப்பெருமான் தனது தெய்வத்தன்மையுள்ளவேற்படையை யேவி அதனைப்பிளந்து அழித்திட்டன னென்பது, கதை: பரசுராமனும் சுப்பிரமனியனும் பரமசிவனிடம் வில்முதலிய ஆயுதப்பயிற்சியைச் செய்துமுடித்தபின்பு இவர்களுள் உயர்வுதாழ்வு அறியும் பொருட்டுச்சிவபிரான் உமாதேவியின் முன்னிலையிலே இவர்களுக்குக் கிரௌஞ்சமலையைச்சுட்டிக்காட்டி இதனைத் துளைத்திடு மென்று நியமிக்க, பரசுராமன் அம்பெய்துஅதனைத் துளையிட்டுக் காட்ட, முருகக்கடவுள் வேலாயுதத்தை அனற்பொறிகிளம்பவீசியெறிந்து அம்மலையைப் பிளந்திட்டன னென்றும் கதை கூறப்படும். (136) 28.-சூரியாஸ்தமனவருணனை. அன்றுவெஞ்சரத்தொடுதறிந்தவாளரசர்சோரிமெய்ப்பட்டதாதலிற் சென்றுசெங்கதிர்ச்செல்வன்வாருணத்திசையடைந்துவெண்டிரையின் மூழ்கினான் நின்றருச்சுனன்பொரமறந்ததும்நெடியசெங்கண்மானேமிதொட்டதும் பின்றைவில்லெடுத்தவன்மலைந்ததும்பேசினான்மகீபதிபிதாமகன். |
(இ - ள்.) அன்று - அத்தினத்திலே, வெம் சரத்தொடு-(அருச்சுனனது) கொடியஅம்புகளால், தறிந்த - அறுபட்ட, வாள் அரசர் - ஆயுதங்களையுடைய அரசர்களது, சோரி - இரத்தம், மெய் பட்டது ஆதலின் - (தனது) உடம்பில் வந்து தெறித்ததாதலால், (அவ்விரத்தக்கறையைக்கழுவியொழிக்கும் பொருட்டு), செம் கதிர் செல்வன் - சிவந்த கிரணங்களைச் செல்வமாகவுடைய சூரியன், சென்று - போய், வாருணம் திசை அடைந்து - வருணனது சம்பந்தமான மேற்குத்திக்கை யடைந்து, வெள் திரையில் மூழ்கினான் - வெண்மையான அலைகளையுடைய (அங்குள்ள) கடலிலே நீராடினான் [மறைந்தான் என்றபடி]: (பின்பு), மகீபதி பிதாமகன் - துரியோதனராசனது பெரியபாட்டனான வீடுமன், அருச்சுனன் நின்று பொர மறந்ததுஉம்- அருச்சுனன் (போர்க் |