பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்11

     (இ - ள்) மாயை என்ற ஒருத்திதன்பால் - மாயையென்ற ஒருத்தி இடத்தில்,
மனம்எனும் மைந்தன் தோன்றி - மனமென்னும் புத்திரன் உண்டாகி, தூயநல்
அறிவன்தன்னை - பரிசுத்தமான நல்ல ஞானமென்கிறவனை, தோற்றம் இன்று
ஆக்கி வைத்தான் - வெளிப்படாத படி செய்திட்டான்; தாயொடு தந்தை மக்கள்
தாரம் என்ற இவர்பால் வைத்த நேயம்உம் - தாய் தந்தை பிள்ளைகள் மனைவி
என்கிற இவர்களிடத்து வைத்த அன்பும், அவன்  தனால்ஏ நிகழ்ந்தது ஓர் நினைவு
கண்டாய் - அந்த மனமென்பவனால் உண்டானதொரு எண்ண மென்றே அறிவாய்;
(எ - று.)-இவை ஆறுபாடல்களும், பகவத்கீதையின் சுருக்கமான சாராமிசம்.

     மாயையாவது-உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும்,
ஒன்றைமற்றொன்றாகவுங்காட்டும் எம்பெருமானது ஒருசக்தி. மனம் அந்தமாயைக்கு
வசப்பட்டபோது, பொருள்களின் நிலையை உள்ளபடி அறியுந் தத்துவஞானம்
தோன்றுவதில்லை; ஆகவே, நிலையுள்ளபொருள்களை நிலையில்லாதனவென்றும்,
நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளனவென்றும் மாறுபட அறியும்
விபரீதஞானம் தலையெடுக்கும்; அதனாலேயே, நித்தியமான ஆத்மாவுக்கு யாதொரு
சம்பந்தமும் படாமல் அநித்தியமான தேகத்தையே பற்றிய தாய்முதலியோரிடத்துச்
சுற்றத்தவரென்ற பொய்யபிமானம் உண்டாகி நிலைநிற்கின்றது என்றதாம்.
ஒருத்திதன்பால், பால் - ஏழனுருபு. என்ற - ஈறு தொக்கது; என்றுஎனஎடுத்து
எண்ணிடைச்சொல்லுமாம். கண்டாய் என்பது -- காண்பாயெனப் பொருள்படுதல்,
காலவழுவமைதி; இனி இதனை இடைச்சொல் தன்மைப்பட்டுத் தேற்றப்
பொருள்தருவ தென்றுங் கொள்ளலாம். வடமொழியில் "மாயா" என்பது
பெண்பாற்சொல்லாதலால், அதனை இங்குப் பெண்ணாகவும், மற்றை மனமும்
அறிவும் பெண்பாற்சொற்களல்ல வாதலின், அவற்றை ஆணாகவும்
உருவகப்படுத்தினார்; உருவகவணி.                               (2)

3.குயின்றவைம்பொறிவாய்நின்றுகுறித்தவைம்
                          பொருளுந்தானே
அயின்றுமுக்குணங்களோடுமறுவகைப்படைகளோடும்
பயின்றரசாளுமந்தமனமெனும்பகைவனாங்குத்
துயின்றபோதொளித்துநின்றதோன்றலுந்தோன்றுங்
                                 கண்டாய்.

     (இ - ள்.) குயின்ற - (உடம்பிற்) பொருந்திய, ஐம்  பொறி வாய்- (மெய் வாய்
கண்மூக்குச் செவி  யென்னும்) பஞ்ச இந்திரியங்களி னிடமாக, நின்று - இருந்து,
குறித்த- (முறையே அப்பஞ்சேந்திரியங்களுக்கு விஷயமாக) அமைக்கப்பட்ட, ஐம்
பொருள்உம் - (ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்னும்) ஐந்துபுலன்களையும்,
தானே அயின்று - தானே அனுபவித்து, முக்குணங்களோடுஉம்--(சத்துவம் ரஜஸ்
தமஸ் என்னும்) மூவகைக்குணங்களுடனும், அறுவகை படைகளோடுஉம்- (காமம்
கோபம் லோபம் மோகம் மதம்மாற்சரியம் என்னும்) ஆறுவகைச் சேனைகளோடும்,
பயின்று - கூடிப்பழகி, அரசு ஆளும் - அரசாட்சிசெய்கிற, அந்த மனம் எனும்
பகைவன்- கீழ்க்கூறின மனமென்கிற சத்துருவானவன், துயின்றபோது - தூங்கிய
பொழுது, ஆங்கு ஒளித்து நின்ற தோன்றல்உம் -