பக்கம் எண் :

நான்காம் போர்ச்சருக்கம்111

யெழுந்து காலைக்கடன் கழிக்கும்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச்செல்ல,
அப்பொழுது இதுவேசமயமென்று இந்திரன் அம்முனிவருருக்கொண்டு
ஆச்சிரமத்துட்சென்று இவளோடு கலக்கையில், இவளும் 'தன்கணவரல்லன்,
இந்திரன்' என்று உணர்ந்தும் விலக்காமல் உடன்பட்டிருக்க, அதனை
ஞானக்கண்ணாலறிந்து உடனே மீண்டுவந்த அம்முனிவர் இவளைக்
கருங்கல்வடிவமாம் படியும் இந்திரனை உடம்புமுழுவதிலும்
ஆயிரம்பெண்குறியையடையும்படியுஞ் சபித்து, உடனே அவர்கள்
அஞ்சிநடுங்கிப்பலவாறு வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, முறையே, 'ஸ்ரீராமனது
திருவடிப்பொடிபடுங்காலத்து இக்கல்வடிவம் நீங்கிச் சுயவுருவம் பெறுக' என்றும்,
'அப்பெண்குறிகள்பிறர்க்குக் கண்களாகப் புலப்படும்' என்றும் அவர்களுக்கு
அநுக்கிரகிக்க, அவ்வாறேகல்லுருவமாய்க் கிடந்த அகலியை, ஸ்ரீராமலக்ஷ்மணர்
விசுவாமித்திரரோடுமிதிலைக்குச் செல்லும்போது ஸ்ரீராமனது திருவடித்துகள்
பட்டமாத்திரத்தில்சாபம்நீங்கி இயற்கையுருவமடைந்தா ளென்பது, முதலடியின்
கதை.
'கோதமன்றன்பன்னிக்கு முன்னையுருக் கொடுத்ததிவன், போதுநின்ற
தெனப்பொலிந்த பொலன்கழற்காற்பொடிகண்டாய்' என்றது கம்பராமாயனம்.
கௌதமர் இந்திரனைஆண்குறியிழக்கும்படியும், அகலிகையை அரூபியாகி
உணவில்லாமற் பலநாள்சாம்பலிலே கிடக்கும்படியுஞ் சபித்திட்டன ரென்றும்,
இந்திரனைப் பகைவன்கையிலேஅகப்பட்டுப் பேரவமானமடையும்படி
சபித்ததாகவும், இன்னும் சிறிது வேறுபடுத்தியும்இவ்வரலாறு நூல்களிற் கூறப்படும்.

     மூன்றாமடியிற் குறித்த சரித்திரம்:- நந்தகோபகிருகத்தில் ஒரு
வண்டியின்கீழ்புறத்தில் தொட்டிலிற் பள்ளிக்கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒரு
காலால்அச்சகடத்தில் கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத்
தன்மேலே விழுந்து தன்னைக் கொல்லமுயன்றதை அறிந்து, பாலுக்கு
அழுகிறபாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலேதூக்கியருள அவ்வடிகளால்
உதை பட்டமாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுள் பட
அழிந்த தென்பது.

     இதுமுதல் நான்குகவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.                (140)

2.-பாண்டவசேனை அர்த்தசந்திரவியூகமாகவே வகுக்கப்படுதல்.

நற்பகலிடைவருநளினநயகன்
பொற்பகலுறவொளிபுரியுநேமியான்
பிற்பகலணியையும்பிறங்குசேனையான்
முற்பகல்வியூகமேயாகமூட்டினான்.

     (இ - ள்.) நல் பகலிடை வரும் - நல்ல மத்தியானகாலத்திலே
காணப்படுகிற,நளினம் நாயகன் பொற்பு - தாமரைக்குக் கொழு