பக்கம் எண் :

112பாரதம்வீட்டும பருவம்

நனானசூரியனது விளக்கமும், அகலுற - நீங்கும்படி, ஒளி புரியும்-(தான் மிகுந்த)
பிரகாசத்தைச்செய்கிற, நேமியான்-(சுதர்சந மென்னுஞ்) சக்கரா யுதத்தையுடைய
கண்ணபிரான்,-பின் பகல் அணியைஉம் - அடுத்தநாளின் [நான்காநாளின்]
படைவகுப்பையும். பிறங்கு சேனையால் - (வெற்றியால்) விளங்குகிற
(பாண்டவர்களின்) சேனைகளைக்கொண்டு, முன் பகல் வியூகம்ஏ ஆக  -
(இதற்கு)முந்தினநாளின் [மூன்றாநாளில் அமைத்த] வியூகமாகவே
[அர்த்தசந்திரவியூகமாகவே], மூட்டினான் - வகுத்திட்டான்;

     "ஸூதர்ஸநம் பாஸ்கரகோடி துல்யம்" என்றபடி எம்பெருமானது திருவாழி
கோடிசூரியப்பிரகாச முடையதாய் விளங்குதலால்,' நளினநாயகன் பொற்பு அகலுற
வொளிபுரியுநேமி' என்றார். நளிந நாயகன்-வடசொற்றொடர்.           (141)

3.-துரியோதனன் பக்கத்தவரும் காருடவியூகமாகவேவகுக்கப்பட,
இரு சேனையும் போர்ப்பறை முழங்க ஆர்த்தல்.

கார்முகில்வண்ணனைக்கண்டுகாணலார்
தாமுமவ்வியூகமேசமைத்துமுந்தினார்
ஏமமோடெதிர்முனைந்திருவர்சேனையும்
போர்முரசெழவெழப்பொங்கியார்த்தவே.

     (இ - ள்.) கார் முகில் வண்ணனை கண்டு - கரிய மேகம்போன்ற
திருநிறத்தையுடைய கண்ணபிரானைப் பார்த்து [கண்ணன் முந்தினநாள்
வியூகமாகவே அன்றும் அமைத்ததை நோக்கி யென்ற படி], காணலார் -
பகைவர்கள், தாம்உம்-தாங்களும், அ வியூகம்ஏ சமைத்து முந்தினார் - அந்த
[மூன்றா நாளில் வகுத்தகாருட] வியூகமாகவே அணிவகுத்து(ப் போருக்கு)
முற்பட்டார்கள்; (அப்பொழுது), இருவர் சேனைஉம்- இருதிறத்தாரது
சேனைகளும்,ஏமமோடு-களிப்புடனே, எதிர் முனைந்து - எதிரெதிராக வந்து
கலந்து, போர் முரசுஎழ எழ-போருக்குரிய பறைகள் மிகுதியாக முழங்க,
பொங்கி ஆர்த்த-ஊக்கங்கொண்டு ஆரவாரித்தன;  (எ - று.)

     போர்ப்பறையோசையைக் கேட்குந்தோறும் வீரர்க்குப்போரில் உற்சாகம்
மிகுதியாக உண்டாதல் இயற்கை யாதலால், 'போர்முரசெழவெழப் பொங்கியார்த்த'
என்றார். இச்செய்யுளில் ஒன்று நான்காம் அடிகளில் ரகர வொற்றிடைவந்த
ஆசெதுகை காண்க.

4.-வீமனை வேழப்படை வளைதல்.

ஏழிரு புவனமு மேந்து மேருவைச்
சூழ்வன கிரிக்குழாஞ் சுற்று மாறுபோற்
பாழியம் புயகிரிப் பவனன் மைந்தனை
வேழவெம் படையுடை வேந்தர் சூழவே.

     (இ-ள்.) ஏழ் இரு புவனம்உம் ஏந்து மேருவை-பதினாலு உலகங் களையுந்
தாங்கவல்ல மகாமேருகிரியை, சூழ்வன கிரி குழாம் சுற்றும் ஆறு போல்-
சுற்றிலுமுள்ள மலைகளின் கூட்டம் சூழ்ந்துநிற்கும் விதம் போல,-பாழி அம் புய
கிரிபவனன் மைந்தனை-வலிமை