பக்கம் எண் :

114பாரதம்வீட்டும பருவம்

6.மேல்வாய்தமகையொடுமேலெழவுந்
தோல்வாயவைகீழ்விழவுந்துணியா
மால்வாரணம்வாய்கள்கழன்றனமுன்
னால்வாயெனுநாமநலம்பெறவே.

     (இ - ள்.) மேல் வாய் தம கையொடு மேல் எழஉம் - மேல்வாய் தமது
துதிக்கையோடு மேற்கிளம்பவும், தோல் வாய் கீழ் விழஉம்-தோல் மயமான
கீழ்வாய்கீழே தாழவும், அவை துணியா- அவ்விரண்டு வாய்களுந் தனித்தனி
அறுபட்டு,மால் வாரணம்-பெரிய மதயானைகள், முன் நால்வாய் எனும் நாமம்
நலம் பெறஏ-(தொங்குகின்ற வாயையுடைமையால் தமக்கு) முன்னமேயுள்ள
நால்வாயென்னும்பெயர் (இப்பொழுது எண்ணினாலும்) சிறப்புறும்படி, வாய்கள்
கழன்றன-வாய்கள் கிழியப்பெற்றன;  (எ-று.)

     தொங்குகிற வாயை யுடைமையால் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகையாக முன்பு நால்வாயென்று பெயரிடப்பட்டுள்ள யானைகள்,
அப்பொழுது, மேல்வாய் கீழ்வாய் என்னுமிரண்டும் வீமன்செய்த போரில் தனித்தனி
துணிபட்டு நான்கு வாயையுடையனவாய், பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகையாகவும் நால்வா யென்னலாம்படியாயின என்க.

7,மதிவெண்குடைமாருதிவன்புடனே
குதிகொண்டொருவகைகொடுகுத்துதலா
லதிர்சிந்துரவல்லுரமத்தனையு
மெதிர்சிந்துரமாகியிளைத்தனவே.

     (இ - ள்.) மதி வெண் குடை மாருதி-பூர்ணசந்திரன்போன்ற
வெண்கொற்றக்குடையையுடைய வாயுகுமாரனான வீமன், வன்புடனே -
வலிமையோடு, குதி கொண்டு - பாய்ந்து, ஒரு கைகொடு குத்துதலால்-(தனது)
ஒருகையினால் [முட்டியால்] குத்தினதனால், அதிர் சிந்துரம் -
முழங்குந்தன்மையனவான யானைகள், வல் உரம் அத்தனைஉம் எதிர் சிந்துரம்
ஆகி - வலிய (தமது) உடம்பு முழுவதும் எதிரிலே பொடிபட்டு, இளைத்தன-
மெலிந்தன;(எ - று.)

     யானையைக் குறிக்கும்பொழுது, ஸிந்துரமென்னும் வடசொல்லுக்கு -
சிந்துதேசத்தில் சஞ்சரிப்ப தென்று பொருள். உரம் - மார்பு; உரஸ் என்னும்
வடமொழித்திரிபு: இது இலக்கணையாய், இங்கே உடம்பை யுணர்த்திற்று.
நான்காமடியில், ஸிந்தூரம் - செந் துகள்.                      (146)

8.உடலிற்றசையாவுமுடைந்துநெடுங்
குடலற்றுவிழும்படிகுத்துதலான்
மிடல்பற்றியவீமன்வெறுங்கைகளா
லடலத்திகளத்திகளாயினவே.

     (இ -ள்.) உடலில் தசை யாஉம் உடைந்து - உடம்பிலுள்ள சதைகளெல்லாம்
சரிந்து, நெடு குடல் அற்று விழும்படி - நீண்ட குடலும் அறுந்து கீழ்விழும்படி,
மிடல் பற்றிய வீமன் - வலிமை