பக்கம் எண் :

நான்காம் போர்ச்சருக்கம்115

பொருந்தின வீமசேனன், வெறு கைகளால் குத்துதலால் - ஆயுதமில்லாத (தனது)
கைகளால் குத்தியதனால், அடல் அத்திகள் அத்திகள் ஆயின -
வலிமையையுடைய யானைகள் எலும்புமாத்திர மாயின ; (எ-று.)

     உயிர்வாழ்ந்தபொழுதுள்ள அத்தியென்னும் பெயர் உயிர் நீங்கினபின்பு
வேறுவகையாலும் இருந்த தென்பது, கவியினது சதுரப்பாடு. அத்தி என்பது -
இவ்விருபொருளு முடையதாதலை "யானையு மொருமரப் பெயருமென்பு,
மார்கலிப்பெயரு மத்தியென்றாகும்" என்ற பிங்கலந்தையினாலுமறிக.
அத்தியென்பது -யானையைக் குறிக்கும்பொழுது, ஹஸ்தீயென்னும் வடமொழித்
திரிபென்றும்;எலும்பைக் குறிக்கும்பொழுது, அஸ்தியென்னும் வடமொழித் திரி
பென்றுங் காண்க.ஹஸ்தம் - கை, இங்கே துதிக்கை;  அதனையுடையது -
ஹஸ்தீ.தசை - ஊன்.                                       (147)

9.

கந்தாவகன்மொய்ம்புறுகாளைபுயக்
கந்தாலமர்செய்துகலக்குதலிற்
றந்தாவளசேனைதரிப்பறவே
தந்தாவளமுற்றனசாயுறவே.

     (இ - ள்.) மொய்ம்பு உறு - வலிமைமிகுந்த, காந்தாவகன் காளை -
வாயுவினதுகுமாரனான வீமன், புயம் கந்தால் - (தனது) தோள்களாகிய
தூண்களால், அமர்செய்து கலக்குதலின் - போர் செய்து கலங்கச்செய்ததனால்,
தந்தாவளம் சேனை -யானைச் சேனைகள், தரிப்பு அற - (பின்வாங்காது)
எதிர்நிற்றல் இல்லையாம்படி, சாய்உற - அழிவுண்டாக, (அஞ்சி), தம் தாவளம்
உற்றன - தமது இருப்பிடத்தைஅடைந்தன; (எ-று.)

     இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும் பின்னிரண்டடிகளிலும் முதலில்
எழுத்துக்கள் தனித்தனி ஒத்துநின்று பொருள் வேறுபட்டு வந்தது - யமக
மென்னுஞ்சொல்லணி. கந்தவஹ னென்னும் வடசொல்லுக்கு-வாசனையை வகிப்ப
னென்றும்,தந்தாவளம் என்னும் வடசொல்லுக்கு - தந்தங்களை யுடைய தென்றும்
பொருள். கந்து- ஸ்கந்தமென்னும் வடமொழித்திரிபு. சாயுற - மீளஎன்றுமாம்.
தாவளம் - இடமாதலை"சரண மாவாசம் பக்கந்தாவள நியமந் தாமம்" என்னும்
நிகண்டினாலு மறிக. சாய்-முதனிலைத் தொழிற்பெயர்.               (148)

10.

வெவ்வாயுவின்மைந்தன்வெகுண்டொருதோன்
மொய்வாகுவில்வைத்தெதிர்மோதுதலாற்
கைவாலதிமெய்தலைகால்கள்கரந்
தவ்வாரணம்வாரணமாகியதே.

     (இ - ள்.) வெம் வாயுவின் மைந்தன் - கொடிய வாயுவினது குமாரனான
வீமன், வெகுண்டு - கோபித்து, ஒரு தோல் - ஒரு யானையை, மொய் வாகுவில்
வைத்து - வலிய கையில் எடுத்துக் கொண்டு, எதிர் மோதுதலால் - எதிரே
தாக்கியதனால், கை வாலதி